OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 13 மார்ச், 2011

போலி ஒற்றுமை பேசும் போலி இயக்கங்கள்




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

வாய்ப்புகள் மாறும்போது அல்லது வழக்கத்திற்கு மாற்றமாக ஏதாவது நடக்கும்போது அதை பூசி மொழுகுவதற்காக ஏதாவது காரணங்களை கண்டுபிடித்துச் சொல்லும் வழக்கம் நம்மிடையே அதிகமாகிவிட்டது.

பேசுவது எதையும் நேரடியாகப் பேசவேண்டும்.




கொங்கு வேளாளருக்கு ஏழு தொகுதி கொடுத்தால் அதற்கு காரணம் பிஜே,
முஸ்லிம் லீக் இளச்சவாயர்கள் என நினைத்து மிகக் குறைவாகக் கொடுத்ததிலிருந்து ஒன்றை பிடுங்கினால் அதற்கு காரணம் பிஜே,
தமிழகத்தில் அரசியல்வாதிகளிடமும் இயக்கவாதிகளிடமும் ஒற்றுமை இல்லை என்றால் அதற்கு காரணம் பிஜே என்றா வாதங்கள் எல்லாம் ஏதாவது காட்டுவாசிகளுக்கான அடிப்படை பாடமாக அமைத்து கற்றுக்கொடுத்தால் எடுபடலாம். இங்கே எடுபடாது என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

நாங்கள் தெர்தலில் நிற்கமாட்டோம் என்று கூறியவர்கள் தேர்தலில் நின்றால் அவர்களுக்கான தண்டனை என்பது ஆம் போகட்டும், மன்னித்து விடுவோம் என்பதும்.....

நாங்கள் முஸ்லிம்களுக்கான இயக்கம் என்று கூறியவாறே முஸ்லிமல்லாதவர்களை உட்புகுத்தி அரசியல் நாடகமாடும் எஸ்டிபிஐ போன்றவர்கள் அடிப்படையே இல்லாமல் அரசியல் செய்தால் அதுவும் நம்ம சமுதாயம்தானே என்ற பொது மன்னிப்பும்....

டெல்லி மாநாட்டில் இந்திய அரசில் பங்கு கொள்வதும், ஆட்சியாளர்களாக ஆவதும் ஓரிறைக் கொள்கைக்கு எதிரான செயல் என்று கூறிக் தீர்மானமெடுத்த ஜமாஅத்தே இஸ்லாமிகள் தற்போது அரசியல் கட்சி துவங்கிளால் அதைக்கூட மன்னித்துக்கொண்டிருக்கும் நாம் ஏன் மேற்படியாளர்களை ஒன்றிணைக்கும் வேலையை செய்யவில்லை?

தமிழக இயக்கம் மற்றும் கட்சிகளாக அமைந்திருக்கும் கூமார் 56 இயக்க-கட்சிகளில் எனக்குத் தெரிந்து 4 இயக்கங்கள் தவிர மீதி இஅனைவரும் தமஜழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைகள் - செயல்பாடுகள் - முடிவுகள் ஆகியவைக்கு எதிராக நடக்கும் இயக்கம்-கட்சிகள் ஆகும்.

ஆக குறிப்பிட்ட நான்கைத் தவிர்த்து மீதமுள்ளவர்கள் ஒன்றிணையாவிட்டால் அதற்கு காரணம் பிஜே என்று கூறுவதைவிட வேறு ஏதாவது கெட்டவார்த்தை பேசிக்கொண்டிருந்தால் அது மிக நல்லதாகவே அமையும்.

எதற்கும் ஒரு வரையறை இல்லையா?

  • பிஜே பிரித்தார் பிஜே பிரித்தார் என்று கூறும் இயக்கவாதிகள் பி ஜே எங்களை நெருங்கவிடாமல் குறுக்கே நிற்கின்றார் என்று ஏன் அறிவிப்பதில்லை?
  • புலனாய்வுக்காகவும் போலி கோஷத்திற்காகவும் ஒன்றிணையுமு; (19) போன்ற இயக்க-கட்சிகள் தங்களுகு;கான தேர்தல் எனும்போது ஏன் 150 அணிகளாக மாறுகின்றனர்.
  • தங்களுக்கிடையேயான இயக்கவெறிகளையும் அரசியல் மோகங்களையும் மறைப்பதற்காக இன்னொருவரை குற்றம் சுமத்துவதைப்போன்றதொரு கீழ்த்தரமான வேலை வேறு உள்ளதா?

ஒருவன் கடித்தான் என்றால் கடித்தான் என்றே சொல்லவேண்டும். அதை விட்டுவிட்டு தமிழக போலீஸ் சொல்வதைப்போல் வலைவீசித் தேடி அமுக்கிப்பிடித்து கைது செய்து துருவித்துருவி விசாரணை செய்கின்றனர் என்பது போன்ற பேச்சு முஸ்லிமுக்கு அழகல்ல!

இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை.

கருணாநிதியை ஆதரிப்பவர்களும் ஜெயாவை ஆதரிப்பவர்களும் ஆதரவுக்காக கூறும் காரணம் ஏற்புடையதா இல்லையா என்பதை பேசித் தீர்த்தாலும் அவர்களிடம் மாற்றம் வரப்போவதில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் ஒரு முஸ்லிம் என்ற அடிப்படையில் இரு திராவிடக் கட்சிகளும் முஸ்லிம்களுக்கான கட்சி அல்ல என்பதை உணர்ந்து.....

  • அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரளவேண்டும்.
  • முஸ்லிம்களுக்கு அதிக தொகுதி ஒதுக்கும் அணியில் சேருவது என முடிவு செய்யவேண்டும்.
  • 25 முதல் 30 தொகுதிகள் வரை நிச்சயமாக எளிதில் பெற முடியும்.
  • பெற்றுக்கொள்ளும் தொகுதிகளை அடித்துச் சாகாமல் முறையே பங்கிட்டு களத்தில் இதற்குத் தயாரானால் நாளையே புதியதொரு திருப்பம் வரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
  • 25 முதல் 30 தொகுதிகள்வரை கையில் வைத்துக்கொண்டு இருக்கும் முஸ்லிம்கள்தான் ஆட்சியாளர்களை நிற்ணயிக்கும் நிலைக்கு வருவார்கள்.

அல்லாஹ்வையும் - தூதரையும் - ஸஹாபாக்களையும் - தியாகத்தையும் மேடைக்காக பேசிக்கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களுக்கு என்று வரும்போது மட்டும் சுக்கு நூறாகப் பிரியாமல் ஒன்றிணைந்து நிற்பார்களா

  • அனைவரும் ஒன்றிணையவேண்டும் எனக் கருதும் ஒரு முஸ்லிம் லீக் ஆதரவாளர் இங்கே உண்டா?
  • அனைவரும் ஒன்றாக இணைந்து போட்டியிடவேண்டும் எனக் கருதும் ஒரு தமுமுக ஆதரவாளர் இங்கே உண்டா?
உண்டு எனில் அந்த கருத்தைச் சொல்லுங்கள். அதை ஏற்காத தலைமையை துரத்திவிடுங்கள். சும்மா எதற்கெடுத்தாலும் பாகிஸ்தான்தான் காரணம் என்று கூறும் அத்வானியின் பாணியை தொடராதீர்கள். எதற்கெடுத்தாலும் பீஜே என்கின்ற வாதத்தை விடுத்தது உங்களால் வெற்றி பெற முடியுமென்றால் முயன்று வெற்றியை தேடி கொள்ளுங்கள்...........

மேலும் சமீபத்தில்...........நடிகர் விஜய் அவர்கள் ஒரு பத்திரிகைக்கு பெட்டி குடுத்து இருந்தார். அதில் அவர் கூறியதாவது ""என்னுடைய படத்தை எதிர்பவர்கள்...........பிறகு ஏன் அவர்களின் தொலைகாட்சி சேனல்களில் தீபாவளி, பொங்கல் போன்ற தினங்களில் என்னுடைய படங்களை ஒளிபரப்ப வேண்டும்.............ஆக என்னை எதிர்க்க என்னுடைய முகம்தான் அவர்களுக்கு தேவை படுகிறது................''''

இதை போலதான் இன்று, தௌஹீதை எதிர்பதுக்கு இவர்கலுக்கு பீஜே தேவைபடுகின்றார்...........ஆனால் கண்டிப்பாக தௌஹீதான் வெற்றிபெறும்.............வீண் பேச்சுக்கள் என்று நிலைக்காது.

ததஜ அரசியல் கட்சியல்ல.  ஆகையால் ததஜ வை விட்டுவிட்டு அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் (அடுத்த தேர்தலிலாவது)ஈடுபட வேண்டும். அதுபோன்றதொரு நிலை வந்து, அப்போது ததஜ இந்த முஸ்லிம் கூட்டணியை எதிர்த்தால், மக்கள் கண்டிப்பாக ததஜ வை ஊதித்தள்ளிவிடுவார்கள். நாலு பேரை வைத்து, 40 கட்சிகளை நடத்திக்கொண்டு, நம்மிடையே ஒற்றுமை இல்லாமல் வேற்றுமையின் மொத்த உருவமாக இருந்து கொண்டு, ஒரு இயக்கத்தை நோக்கி சுட்டு விரலை நீட்டிக்கொண்டிருப்பதில் எந்த அளவுக்கு நியாயம் இருக்கிறது என்று தெரியவில்லை.

1 கருத்து:

ஜெய்லானி சொன்னது…

//# அனைவரும் ஒன்றிணையவேண்டும் எனக் கருதும் ஒரு முஸ்லிம் லீக் ஆதரவாளர் இங்கே உண்டா?

# அனைவரும் ஒன்றாக இணைந்து போட்டியிடவேண்டும் எனக் கருதும் ஒரு தமுமுக ஆதரவாளர் இங்கே உண்டா?//

சரியான கேள்வி . இந்த நிலை எப்போது மாறுதோ அப்போது தமிழ் நாடு ஒரு முஸ்லீம் முதலமைச்சரை கொண்டு இருக்கும் :-) இல்லையென்றால் தெரு வோர பிரசாரம் ( ஒருத்தொருத்தரை திட்டுதல் ) மட்டுமே காலம் காலம் இருக்கும்