OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 16 மார்ச், 2011

அதை எதிர்கொள்ள நாம் தாயாராக இருக்கிறோமா?

நான் இதை எழுத நினைத்திருக்கவில்லைஆனால் இந்த நிகழ்வில் இருக்கும் படிப்பினையை நம் மக்களும் புரிந்து கொள்ளட்டுமே என்று தான் தொடங்குகிறேன்.

தொடர்ந்து படியுங்கள்.




நடந்தது என்னமோ பெரும் அனர்த்தம் தான்…. அதை தொடர்ந்தது பெரும் விபத்தும்தான்ஆனால் அந்நாட்டு மக்களை பாருங்கள் என்ன ஒரு அமைதிபணிவுஎன்னவொரு தைரியம் இயல்புக்கு வாழ்கைக்கு திரும்பும் திறன்உண்மையில் மெய் சிலிர்க்கிறது.

சுனாமி தாக்கிய நகரத்திலிருந்து 150 கி.மீ அப்பால் டோக்கியோவில் போக்குவரத்து நிறுத்தபட்டு மக்கள் எல்லாரும் நடு வீதியில் நிற்கிறார்கள், யாராவது ஒரு ஆர்பாட்டம் குரலை சற்று உயர்த்தி பேசுதல் ஏதாவது உண்டா?  எல்லார் மனதிலும் முகத்திலும் எங்கள் நாடு இப்போது ஒரு பாரிய சிக்கலில் இருக்கிறது… அதனால் நமது வசதி முக்கியமில்லை என்று பாதையோரங்களில்தொடர்வண்டி நிலையங்களில் அமைதியாக அமர்ந்து இருக்கிறார்கள்… பொது டெலிபோன் இடங்களில் என்ன ஒரு அமைதியாக வரிசையில் நின்று தங்கள் முறை வரும் வரை பேச காத்துஇருக்கிறார்கள் 

அப்படி ஒரு நிலைமையில் நாம இப்படி செய்வோமா?.

பல்பொருள் அங்காடி கடைகளில் ஒரு ஆளுக்கு 10 பொருட்கள்என்ற அடிப்படையில் தான் அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்படுகின்றன, யாராவது மற்றவைரை பின்னுக்கு தள்ளி முண்டியடித்து போகிறார்களா?.....

அவரவருக்கு வழி விட்டு தன் முறை வரும் வரை என்ன ஒரு அமைதியாக நிற்கிறார்கள்எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எவ்வளவு பெரிய வரிசையில் என்ன ஒரு அமைதியாக அவர்கள் நிற்கிறார்கள் தங்கள் முறை வரும் வரை

அப்படி ஒரு நிலைமையில் நாம இப்படி செய்வோமா?.

தொலைகாட்சி நிறுவனங்கள் மக்களை பேட்டி எடுக்கிறார்கள் யாராவது முண்டியடித்து என்முகமும் டிவியில் வரட்டும் என்று போஸ் கொடுத்து கொண்டு இருக்கிறார்களா?....டிவி கமிராவுக்கு பின்னால் மருந்துக்கு கூட ஆள் அரவேமேயில்லை.

அப்படி ஒரு நிலைமையில் நாம இப்படி செய்வோமா?.

அவசர நிவாரணமுகாமில் (செண்டே நகரில்) 450,000 பேர் வரையில் இருக்கிறார்கள் ஏதாவது ஒரு அமலிதுமலி கூட்டம் கூச்சல் தெரிகிறதா?, அவரவர் அமைதியாக அமர்ந்துஇருக்கிறதை பார்த்தபோது உண்மையில் ஒன்றுமே நடக்காத மாதிரி தான் தெரிகிறது.

அப்படி ஒரு நிலைமையில் நாம இப்படி செய்வோமா?.

இது வரை செய்தி நிறுவனங்கள் வெளியிடும் தகவல்கள் படி 3,500பேர் வரையில் இறந்து இருக்கிறார்கள் 7,500 பேர் வரையில்காணாமல் போனவர் பட்டியல் இருக்கிறது… ஆகவேஇறந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் உயரலாம் என்று கலவரப்படுத்துகிறார்கள்

இதில் தான் நாம் ஒன்றை கவனிக்கவேண்டும் 2004ல் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வந்த சுனாமி எத்தைகைய அழிவுகளை ஏற்படுத்தியது என்பதை நாம் இலகுவில் மறந்திருக்கமாட்டோம்ஆனால் அன்று வந்த நிலநடுக்கத்தை விட ஜப்பானில் வந்திருப்பதோ பெரியது.
8.9 ரிகட்டர் அளவு கடந்த 300 வருடங்களில் வந்திருக்கவில்லைஎன்றும் தகவல்கள் சொல்கின்றனஅப்போ த்சுனாமியின் தீவிரமும் அதிகம் தான்.

இதில் என்ன விசேடம் இருக்கமுடியும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

கொஞ்சம் யோசித்து பாருங்கள் 2004ல் இறந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்றுத்சுனாமி ஏற்பட்ட இந்தோனேசியா வேண்டாம் தொலைவில் இருக்கும் இலங்கை அல்லது இந்தியாவை எடுத்துகொள்ளுங்கள்தற்போது ஜப்பானில் உள்ளதை விட பல மடங்கு அதிகம்ஆனால் இப்போது ஏற்பட்ட அனர்த்தத்தை ஒப்பிட்டால் ஜப்பானின் இழப்பு குறைவு என்பது புலனாகும்இது எதை குறித்து நிற்கிறதுமுழுக்க முழுக்க ஜப்பானிய அரசின் திறமைமுன்னேற்பாடுஅம்மக்களின் முன்னெச்சரிக்கைஅவர்களது மன பலம் என்றால் மிகையில்லைதான் தனக்கு மட்டும் என்ற குணம் இல்லாத பண்பு.

அவர்களை பார்த்தாவது நாம திருந்தலாமல்லவாநாமளும் அத்தகைய நல்ல பண்புகளை வளர்த்துகொண்டால் எவ்வளவுநல்லது.
இதை உணர்ந்து தான் இந்த பதிவு.

நாம செய்வோமா?.... திருந்துவோமா?.

சரி,

ஒரு வாதத்திற்காக இப்படி கேட்போமானால், 2004ற்கு பின்னர் மீண்டும் அவ்வாறான ஒரு நிலை நமது நாடுகளுக்கு வருமானால் அதை எதிர்கொள்ள நாம் தாயாராக இருக்கிறோமா?
மக்கள் பழக்கபட்டிருக்கிறார்களா?,
மக்ளை காப்பாற்ற கூடிய நிலையில் எமது அரசாங்கங்ளும் அரசியல் தலைவர்களும் இருக்கிறார்களா?.
அரசு நிதி நிலவரங்கள் எப்படி இருக்கிறது?....
இதைபற்றி யாருக்கு கவலை இருக்கிறது……

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் நாம எங்கே இருக்கிறோம் என்று.

கடைசியாக ஜப்பான் மக்களுக்கு மேலும் மன தைரியமும்,இறந்தவர்களுக்கு ஆத்மா சாந்தியும்குடும்பம் உறவுகளை பிரிந்த மனங்களுக்கு ஆறுதலும் சமாதானமும் கிடைக்கட்டும் என்று நம்ம இனம் மொழி மறந்து எல்லாரும் சேர்ந்து அந்த மக்களுக்காக பிராத்தனை செய்வோம். 

கருத்துகள் இல்லை: