OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 7 மார்ச், 2011

முகத்திரை அணிவதற்கு தடை விதிக்கும் ஃப்ரான்ஸ் அரசின் சட்டம் எதிர்வரும் ஏப்ரல் 11 முதல் நடைமுறைக்கு வருகிறது.



முகத்தை மறைக்கும் வகையில் முகத்திரை அணிவதற்கு தடை விதிக்கும் ஃப்ரான்ஸ் அரசின் சட்டம் எதிர்வரும் ஏப்ரல் 11 முதல் நடைமுறைக்கு வருகிறது. குறிப்பாக, இஸ்லாமியப் பெண்கள் மரபு காரணமாக அவ்வாறு அணிந்து வருவார்களானால், அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு வரும்படி கோரப்பட்டு, முகத்திரை நீக்கக் கோரப்படுவார்கள் அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று அந்தச் சட்டம் உள்ளதாம்.


"இது ஒரு குறியீடான சட்டம் தான், அதற்காக எல்லா முஸ்லிம் பெண்களையும் துன்புறுத்துவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று ஃப்ரேஞ்ச் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"தேவையற்ற குழப்பத்தைத்தான் இது ஏற்படுத்தும்" என்று பாரிஸ் நகர இமாம் மூஸா நியாம்பில் கருத்துத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இச்சட்ட மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இது முஸ்லிம் பெண்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று கண்டனங்கள் எழுந்தது நினைவிருக்கலாம்.

முகத்தை மறைக்கும் எந்த ஆடை வகையையும், பொது இடங்களில், குறிப்பாக, வீதிகள், பொது போக்குவரத்து வாகனங்கள், கடைகள், பள்ளிகள், பொது அவைகள், அரச அலுவலகங்கள், மருத்துவமனைகளில் அணியக்கூடாது என்று இந்தச் சட்டம் சொல்கிறது. மீறுவோர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு திரை நீக்கி தங்கள் அடையாளத்தை பதிவு செய்யப் பணிக்கப்படுவார்களாம். மறுத்தால் இருநூற்று எட்டு அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும்.

"ஒரு பக்கம் பார்த்தா இது ஒரு சமுதாயத்தின் உரிமையை பறிப்பது போன்றது, இன்னொரு வழியில் பார்த்தா இது தனி மனிதனின் சுதந்திரத்தை பறிப்பது போன்றது, யார் வேணும்னாலும், எப்படி வேணும்னாலும் ஆடை அணியலாம் என்கின்ற நாட்டில், ஒரு குறிப்பிட்ட ஆடையை அதுவும் அவர்களின் கடவுட் கொள்கைக்கு மாற்றாமாக செய்யவேண்டும் என்று ஒரு நாடு சட்டம் பிறபிக்கிறது, இதை எந்த நாதாரி நாடும் கேட்க முடியவில்லை" இது எந்த வகையில் நியாயம், மனித நேயம் உள்ளவர்கள் சிந்திக்கவும். 

1 கருத்து:

சிரிப்புசிங்காரம் சொன்னது…

முஸ்லீம் நாடாக இருந்தால் முஸ்லீம் சட்டங்கள் பின்பற்றப் படலாம்...மற்ற நாடுகளில் அந்த நாட்டு சட்டங்களைப் பின்பற்றுதலே எல்லோருக்கும் நல்லது..... நாடெங்கும் தீவிரவாதிகள் நடமாட்டம் மிகுந்துவரும் வேளையில் இது அவசியம்