OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

இது திரைவிமர்சனமில்லை...........ஒரு மதத்தின்மீது போடபட்டிருக்கும் திரையின் விமர்சனம்



இது திரைவிமர்சனமில்லை...........ஒரு மதத்தின்மீது போடபட்டிருக்கும் திரையின் விமர்சனம்

சென்னையில் இருந்து 100 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்படுகிற பயணிகள் விமானத்தில் 5 முஸ்லிம் தீவிரவாதிகளும் ஏறுகிறார்கள்.
அந்த 5 தீவிரவாதிகள் குழுவினர், விமானத்தில் கழிவறையை சுத்தம் செய்கிற பணியில் இருக்கிற அஸ்லம் என்கிற (மது குடிக்கிற நல்ல) முஸ்லிம் ஒருவனை, முன்பே மசூதியில் வைத்து சந்தித்து, புனிதப் போர் குறித்து ஏதேதோ பேசி, ஏதேதோ வீடியோ படங்களை காண்பித்து, மூளைச் சலவை செய்து, 2 இலட்சம் ரூபாய் பணமும் தருவதாக கூறுகின்றனர், அதற்கு பகரமாக அஸ்லம் கழிவறையை சுத்தம் செய்கிற சாக்கில், விமனத்தில் வெடிபொருளை மறைத்து வைக்கிறான்.

ஆக எல்லாம் திட்டமிட்டபடி நடக்க, விமானம் சென்னையில் இருந்து கிளம்பியதும், அந்த 5 தீவிரவாதிகளும் நடு வானில் விமானத்தை துப்பாக்கி முனையில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள்.

இத்னிடையே விமானிகளோடு ஏற்படுகிற மோதலில், தீவிரவாதிகளில் ஒருவன் விமானத்தின் கட்டுப்பாட்டு இயந்திரம் ஒன்றை தவறுதலாக சேதப்படுத்தி விடுகிறான். 

இதன் காரணமாக , விமானத்தை 100 பயணிகளோடு கடத்தி, பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் தரை இறங்க திட்டமிட்டு இருந்த தீவிரவாதிகளின் திட்டம், விமானத்தை கட்டுப்பாட்டு கருவிகளில் ஒன்று சேதம் அடைந்து விட்டதால், விமானத்தை ஆந்திர மாநிலம் திருப்பதியில் தரை இறக்க வேண்டிய நிலைக்கு மாறுகிறது.

அதன் பின், இந்திய நாட்டின் மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் குழுவோடு பேச்சுவார்த்தை (பேரம்)
நடத்துகின்றனர் அந்த 5 தீவிரவாதிகளும்.. 

கஷ்மீரை சேர்ந்த, தீவிரவாதி யூசுப் கானை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். தப்பித்து போக ஒரு விமானமும், 100 கோடி பணமும் வேண்டும்.
இது தான் நிபந்தனை.

இந்த கதையை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே..! ஒ.! காந்தகார் விமானக் கடத்தல் கதையா இது.? என கேட்டு உங்களுக்கு நீங்களெ சபாஷ் போட தயராகி விட்டீர்களா.?

மன்னிக்கவும்.. இதோ இனி தயாரிப்பாளர் தன் கற்பனைக் குதிரையை தட்டி விட்டு, கதையில் உப்பு, புளி, காரம், மசாலா சேர்த்து இந்த கதையை மேலும் நகர்த்தப் போகிறார்.
இனி..
இதற்கு பின்..

விமான நிலையத்தை சுற்றி புகைப்படக்காரர்களும், பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சி நிருபர்களும் குவிகிறார்கள். தேசத்தின் தலைப்பு செய்தி ஆகிறது இந்தக் கடத்தல்..

திருப்பதி விமான நிலையத்தின் ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டு, அடுத்து என்ன செய்வது என கையைப் பிசைந்து கொண்டு இருக்கிறார்கள் அதிகாரிகள். 

இந்த படத்தில் ஹீரோ (கதாநாயகன்) இல்லையா என கேட்க வருகிறீர்களா.?
தமிழ் சினிமாவில் கதநாயகன் இல்லாமலா.?

அதிகாரிகளுடன் கமாண்டோ அதிகாரியான (நம்) ஹீரோவும் பரபரப்பாக ஆலோசனை செய்கிறார்..
தீவிரவாதியை விடுவிப்பதா.? அல்லது அதிரடியாய் விமானத்தில் புகுந்து பயணிகளை மீட்பதா.? 
என்கிற டீலா - நோ டீலா பாணி பேரங்களுக்கிடையில், இறுதியில்
தீவிரவாதிகள் கேட்டபடி, யூசுப் கானை விடுவிக்கவும், விமானம் ஓன்றை தரவும் மத்திய அரசு ஒத்துக் கொள்கிறது..?

எல்லாம் சரியாகத்தானே போகிறது.. இதில் ஹீரோவுக்கு என்ன வேலை எனக் கேட்க வருகிறீர்களா.?
இதோ பதில்..

கஷ்மீர் சிறையில் இருந்து விமான நிலையம் வருவதற்காக வரும் வழியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு,
அதில் ஏற்படும் வாகன விபத்தில் எதிர் பாராத விதமாக யூசுஃப் கானும் உடன் வந்த காவல் துறை அதிகாரிகளும் பலி ஆகிறார்கள்.

இதற்கு இடையில் நிபந்தனையை நிறைவேற்ற அரசு தாமதித்துக் கொன்டே போவதில் கோபம் கொண்டு,
விமானத்தில் உள்ள 2 பயணிகளை தீவிரவாதிகள் சுட்டு கொல்கிறார்கள்.

அச்சச்சோ அப்புறம் என்ன ஆச்சு.? எனக் கேட்க வருகிறீர்களா.?



இதற்குப் பின்பும் சும்மா இருந்தால் எப்படி.?

ஒரு அதிரடி தாக்குதலை நடத்தி, தீவிரவாதிகளைக் கொன்று விமானத்தையும், பயணிகளையும் மீட்க ஆலோசனை சொல்கிறார் (நம்) ஹீரோ..

திரைப்பட உதவி நடிகர் ஒருவருக்கு, தீவிரவாதி யூசுப் கானைப் போலவே ஒப்பனை செய்யப் பட்டு விமானத்தில் உள்ள தீவிரவாதிகளை
நம்ப வைக்கிறார் ஹீரோ..

ஆரம்பம் ஆகிறது ஆபரேசன் கருடா..

விமானத்தின் கழிவறையை சுத்தம் செய்யச் செல்லும் பெண் மூலம், விமானப் பணிப்பெண்ணுக்கு தகவல் அனுப்பி, கூடவே மொபைல் போன் ஒன்றையும் அனுப்பி வைக்கிறார் ஹீரோ..

பணயக்கைதிகளில் ஒருவராய் விமனத்தில் மாட்டிக் கொண்டு இருக்கும் முன்னாள் இராணுவ அதிகாரியோடு தொடர்பு கொன்டு, அவர் மூலம் ஆபரசன் கருடா அதிரடி மீட்பு நடவடிக்கையின் பயனிகள் ஒரு பகுதி அனைவருக்கும் இரகசியமாக விளக்கப்படுகிறது,..


அதன் பின் தீவிரவாதிகள் கேட்டபடி யுசுஃப் கான் (போலி) தனி விமானம் மூலம் போலியாக திருப்பதிக்கு கொண்டு வரப் படுகிறான்.

அப்ப,,
100 கோடி என்னாச்சு..??

இந்தியாவில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் பலர், குறிப்பாக கஷ்மீர் தலைவர்கள்,
"பணயக் கைதிகளுக்கு பகரமாக பணம் கேட்பது", இஸ்லாமிய நெறிமுறைகலுக்கு எதிரானது என தொலைக்காட்சிகள் மூலம்
சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டு, தீவிரவாதிகள்(..!) போராளிகள்(..!) 100 கோடி பணத்தை வேண்டாம் என சொல்லி விடுகிறார்களாம்.

என்ன படத்தில் இடைவேளையே இல்லையா என்று கேட்கிறீர்களா.?
நாம் இப்போது படத்தின் இறுதிக்கே வந்து விட்டோம்..

ஆபரேசன் கருடா அதிரடியின்(..!) மூலம் 4 தீவிரவாதிகள் கொல்லப் படுகிறார்கள். சிறிது சண்டைக்கு பிறகு எஞ்சிய இன்னொருவனும் கொல்லப் படுகிறான்.

சுபம்.

அவ்வளவுதான் படம் முடிந்தது என நினைத்து, மேலும் வருபவைகளை படிக்காமல் விட்டு விடாதீர்கள்.

விமானத்தில் பணயக்கைதிகளாக யாரெல்லாம் இருந்தார்கள் தெரியுமோ.??

கேளுங்கள் இதோ..!
நிஜத்தில் ஜீரோவான ஒரு சினிமா ஹீரோ.. ,
 (ஹீரோ எது செஞ்சாலும் நம்பும் .!) ஒரு சினிமா பைத்தியம்,
மத்திய அமைச்சர் ஒருவர்,
 நாத்திகம் + கம்யுனிஸம் பேசும் வாலிபர், 
டாக்டர், 
முன்னாள் இராணுவ அதிகாரி,
 பிரபல(..!) ஜோசியர் , 
ஒரு யுவதி(கதையை நகர்த்த), 
விமானப் பணிப் பெண்கள்,
பிராமண தம்பதியர், 
கிறித்துவ மத போதகர், 
சென்னைக்கு வந்து தன் குழந்தைக்கு இருதய சிகிச்சை முடித்து நாடு திரும்பும் பாகிஸ்தானிய முஸ்லீம் குடும்பத்தினர், 
இன்னும் பலர்..

படத்தின் இறுதியில் போலி யுசுஃப் கான் உதவியோடு, கொல்லப்பட்ட 
5 பேரும்(கதைப்படி) முஸ்லிம்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது
என்பதற்காக மீண்டும் டைட்டில் கார்டு போடப்படுகிறது..

முன்னா 

உமர் 
யாசின்
அன்வர் 
அப்துல்


இவர்கள் தான் அந்த பயங்கர தீவிரவாதிகள்..

இவர்களது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திகிறார் கிறித்துவ மத போதகர்.. (அடி வாங்கிய பின்னும் அவர்களை மன்னித்து)
ஒருவாறாக படம் என்னவோ முடிந்து விட்டது..
ஆனால் எனக்குள் சில கேள்விகள்.

போலி யுசுஃப் கானாக நடிக்கும், திரைப்பட துணை நடிகனாக காட்டப்படும் பிராமண வாலிபன்,
தீவிரவாதியாக நடிக்கக் கூட பயப்படுகிறான்.

தீவிரவாதிகளை ஒடுக்குவதில் அமெரிக்கா, இஸ்ரேல் போல கடினம் காட்ட வேண்டும் என வசனம் பேசுகிறார் ஒருவர்..
இராக் , ஆப்கான் மீதெல்லாம் அமெரிக்கா உலக மஹா பொய்யைச் சொல்லி படை எடுத்து,
கொடூர கொலைகள் பல செய்து,
இன்னும் அக்கிரமங்களையும் , கொடூரங்களையும் அரங்கெற்றி வருகிறது..

உலக ரவுடி அமெரிக்காவின் ஆட்சியாளர்கள் உலகத்திற்கு தர விரும்புவது சுதந்திரத்தை அல்ல..

தந்திரம் மூலம் அடிமைத்தனத்தையே தர இருக்கிறார்கள்..
சமீபத்திய அதன் பேரழிவுப் போர்கள் கூட அதற்கு சாட்சி..


இஸ்ரேல் அமெரிக்காவின் கள்ளக் குழந்தையாய் ,
பாலஸ்தீனத்தில் அக்கிரமம் புரிந்து வருகிறது.
தீவிரவாதத்தின் வடிவமாய் இருக்கிறது இஸ்ரேல்..
அதை உனர்ந்து கொள்ள முயற்சிப்பீர்களா..?
 இந்த இரு நாடுகளும் அக்கிரமத்தின் வடிவம்..
இவற்றைப் போலவா கடுமை காட்ட வேண்டும்.. (கொடுமை இழைக்க)..


நாத்திக சிந்தனை உள்ளவர் வசனம் பேசும் காட்சியில், அவர் மசூதி குறித்து பேசும் போது சொருகப்படுகிற சென்சார் போர்டின்(..!) பீப் ஒலி,
அதே நபர் கோவிலை குறித்து பேசும் போது தன் கடைமையை(..!) மறந்து விட்டதோ..?? !!

ஜிஹாத், புனிதப் போர், அல்லாஹ்வின் பாதையில் முயற்சி, போன்ற வார்த்தைகளை திரும்ப திரும்ப உபயோகிக்க வைக்கப்படுகின்றனர் படத்தில் விமானத்தை
கடத்தியவர்கள்.. ( அப்ப தானே அழுத்தம் கொடுக்க முடியும்)..

தன்னை அடித்த தீவிரவாதிக்காக கூட, ஜெபம் செய்கிறாய் பாதிரியார்..
விமானத்தில் தன்னை பைபிள் படிக்க அனுமதிக்கா விட்டால், குரானாவது படிக்க கொடுங்கள் என்கிறார்.

விமானத்தில் மயங்கி விழுந்து விடுகிற தீவிரவாதிக்காகவும், மூச்சுத்திணறல் ஏற்படும் முஸ்லிம் சிறுமிக்கும்
வாஞ்சையோடு முதலுதவி செய்கிறார் பணயக்கைதிகளில் ஒருவரான டாக்டர்.

பணயக்கைதிகள் அனைவரோடும் வெறுப்பாக நடக்கும் ஒரு தீவிரவாதி(..!) , முஸ்லிம் சிறுமியோடு கருணையோடு பேசுகிறான்.
இறுதியில் ஏமாற்றி அந்தக் குழந்தையின் கையில், இரக்கம் இல்லாமல் வெடிகுண்டை கொடுத்து விட்டு செல்கிறான்.


தீவிரவாதிகளுக்கு கைக்கூலியாக செயல்படுவது, மசூதியில் வைத்து மூளைச்சலவை செய்யப் படும்(..!) அஸ்லம் என்கிற நபராம்.

ஏற்கனவே முஸ்லிம்கள் எந்த அரசுப் பணியிலும், அவர்களது சதவீதத்திற்கேற்ப இல்லை..

இந்த படத்தின் மூலம், (விமானத்தின் அல்லது) அரசு சார்ந்த வெகு கீழான பணியில் கூட முஸ்லிம்களை அமர்த்தாதீர்கள் என சொல்ல வருகிறாரா தயாரிப்பாளர்.??
நியாயமா இது..?

"உங்கள் ஜிஹாதை விட எங்கள் ஜெய் ஹிந்த் வலிமையானது"
என, தன் திரைப்படம் வசனம் மூலம் சிண்டு முடிகிற,
சங் பரிவார வேலையை செய்கிறார் தயாரிப்பாளர்..

படமெங்கும் அழுத்தமாக , கச்சிதமாக வெளிப்படுகிறது முஸ்லிம் விரோதப் போக்கு..

பிறகு எப்படி இதை சொல்வது..?

நடந்த , நடக்கிற நிகழ்வைத்தானே நாங்கள் சொல்கிறோம் என இந்த படத்தின்,
ராதா மோகன் + பிரகாஷ் ராஜ் கூட்டணியினர் சொல்லலாம்..
அய்யா நியாயவான்களே..!


பாபர் மசூதி இடிப்பை , மும்பை , குஜராத் , பாகல்புர் மற்றும் இன்னும் பல இந்திய கலவரங்களையும் படமாக எடுப்பீர்களா..?
எடுப்பார்களா தமிழ் தயாரிப்பாளர்கள்..?

பம்பாய்- என படம் எடுத்தாலும் அதையும் காதல் கதையாகத்தான் சொல்ல முடியும் உங்களால்..

அப்படி எடுக்கப் பட்டால் அதை திரையிட அனுமதிக்குமா சங் பரிவாரங்கள்..??

"ஃபிராக், பர்ஜானியா, ப்ளாக் ப்ரைடே. " போன்ற படங்கள் பட்ட பாடுதான் எங்களுக்கு தெரியுமே..

படத்தில் பிராமண ப்ரோகிதர் வேடத்தில் நடித்து, பின் தீவிரவாதியாக போலியாக நடிப்பதற்குக் கூட பயப்படுகிறான் உஙகள் படத்து 
வாலிபன்( போலி யூசுப் கான்.).

குஜராத் கலவரத்தால் பாதிக்கப் பட்ட, அமெரிக்க அராஜகப் போரில் இரண்டு கையையும் இழந்த சிறுவனின் படத்தையும் காட்டி,
உங்கள் படத்து அப்பாவி பிராமண வாலிபனுக்கு,
உணர்வு ஊட்டி, வீரம் ஊட்டுகிறீர்கல். என்ன நியாயம் சார் இது...?
என்ன சொல்ல வருகிறீர்கள்..?
குஜாரத் கலவரத்தையும், அமெரிக்க போர் கொலைகளையும் செய்தது யார்.?
முஸ்லிம்களா.?


அய்யா..
இந்த படத்தை நீங்கள் எடுக்க ஆரம்பித்து மாதங்கள் பல ஆச்சுன்னு நினைக்கிறேன்..
(விசாரித்த வரையில்) சமீப கால குண்டு வெடிப்புகளுக்கு காரணம், அது நடந்த போது, கைது செய்து பிடித்து போடப்பட்ட முஸ்லிம்கள் அல்ல,,
காவிக் கூட்டத்து சாமியார்கள் தான் காரணம் என்பது உங்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லையோ..? 


கோத்ரா கலவரம், அஜ்மீர், மாலெகான், நான்தெட், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு இவற்றைப் பற்றி எல்லாம் படம் எடுங்களேன்..
எடுப்பீர்களா..?
அதை திரை இட அனுமதிக்குமா காவிக் கும்பல்.?




கேப்டன்களும், காமன் மேன்களும், ஜென்டில் மேன்களும் தமிழ் சினிமாவில் பதித்து வைத்து இருக்கிற, முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறை உணர்வுகள் ஏற்கனவே அதிகம்.. இந்த நிலையில் நீங்களும் உங்கள் பங்களிப்பை செலுத்தி இருக்கிறீர்கள்... சபாஷ்.?..!!

அஃப்சல் குரு பற்றிய செய்திகளைப் பற்றி என்றால், முதல் பக்கத்தில் அதை வெளியிடும் தமிழ் மீடியாக்கள், அசிமானந்தா போன்றோரின் செய்தியை எல்லாம் இருட்டடிப்பு செய்கிறதே ஏன்.?


இந்த நாட்டில் முஸ்லிம் பெயர்களில் நடத்தப் படுகிற,நக்சலைட் , இனவாத,அல்லது காவிக் கும்பலால் நடத்தப்படுகிற எந்த வித தேச விரோத செயல்களையும் இந்திய முஸ்லிம் சமூகம் ஒரு போதும் அங்கீகரிப்பது இல்லை..
 இதை இஸ்லாமும் ஆதரிப்பது இல்லை..
இதைப் புரிந்து கொள்வீர்களா.?

தவறு செய்பவர் எவராக இருந்தாலும், அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை..
அந்த நபருக்கு நீதியின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
ஆனால் அதே வேளையில் இஸ்லாத்தை குறித்தும், முஸ்லிம்கலை குறித்தும், தவறான பிம்பத்தை பிரச்சாரம் செய்வதை , தமிழ் மற்றூம் இந்திய சினிமா, இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.. இதோ இப்போது வந்து இருக்கிற ராதா மோகன் + பிரகாஷ் ராஜ்
கூட்டணியின் "பயணம்" போன்ற முஸ்லிம் விரோத திரைப்படங்களை,
நடுநிலையாலர்களும், சமூக ஆர்வலர்களும் கட்டுப்படுத்த வேண்டும்..

மற்ற மானிலங்களை விட, நம் தமிழகத்தில் அனைத்து சமூக மக்களுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை நிலவுகிறது..
அதை சீர்குலைக்கும் வகையில், குறிப்பாக முஸ்லிம் விரோத உணர்வை, நச்சு உணர்வை விதைக்கும் பயணம் போன்ற தமில் சினிமாக்களும், மீடியாக்களும் எப்போது தங்கள் பதிவுகளை
நியாயத்தின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளும்.?



தன் இனம், தன் மதம், தன் மொழி என்ற அடிப்படையில் செய்யப்படுகிற, நீதிக்கு புறம்பான செயல்களை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிப்பது இல்லை..
அப்படிப் பட்ட செயல்களை இனவாதம் என்கிறது இஸ்லாம்.
இனவாத்தில் இருப்பவன், இஸ்லாத்தின் பார்வையில் இறை நம்பிக்கையே இல்லாதவன் என்கிறார் இறைத்தூதர் முஹம்மது நபி (சல்) அவர்கள்..





இந்த நாட்டில் நீதியும், மனித நேயமும் இன்னும் செத்துப் போய் விடவில்லை..
அது உயிரோடு தான் இருக்கிறது..

தன் சுய நலத்திற்காக , மதத்தின் போர்வையில், அல்லது ஜாதி, மொழி, இனம் அடிப்படையில்,
தேச விரோத செயல்களை செய்யும், சமூக விரோதிகளை,
அவர்கள் எந்த மதம்,இனம்,மொழியைச் சேர்ந்தவரக இருந்தாலும்,
எப்படிப்பட்ட அரசியல் அதிகாரத்தில் இருந்தாலும்,
இந்தியன் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் சேர்ந்து,
அவர்களை களை எடுப்போம் என்கிற ரீதியில் நேர்மறை உணர்வோடு கருதுக்களைப் பதிவு செய்யுங்கள்..




கண் முன்னே அநீதி இழைக்கப் படும்போது, பாதிக்கப்படுபவர் எவராக இருந்தாலும் அவருக்கு உதவ வேண்டும்..
அமைதியாய் இருந்து விடக் கூடாது என போதிக்கிறது இஸ்லாம்..
இஸ்லாம்திற்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் பரப்பப்படும் இந்த சூழ்நிலையில்,
இந்த உண்மையை,
இதை இந்த நாடும், நாட்டு மக்களும், புரிந்து கொள்ளும் விதத்தில் முஸ்லிம்கள் எடுத்து உரைக்க வேண்டும்..




இன்றைய சூழ்நிலையில் அனாச்சாரங்களும், அலங்கோலங்களும் சினிமாவை ஆக்கிரமித்து இருப்பதால், சினிமா என்ற வலிமை வாய்ந்த ஊடகத்தையே,
இந்திய முஸ்லிம் சமூகம் புறக்கணித்து வருகிறது.. இது மாற வேண்டும்..
இதற்கு மாறாக குறைந்த பட்சம், காலத்தின் தேவைக்கு ஏற்ப,
தங்கள் அடையாளங்களையாவது பதிவு செய்கிற வகையில்,
குறும்படங்கள், ஆவணப்படங்கள், போன்றவற்றை தயாரிக்க முஸ்லிம் சமூகத்தை சார்ந்த வல்லுநர்கள் முன் வர வேண்டும்.

தங்கள் அமைதி, மற்றும் நிசப்தத்தை களைத்து கலைத்துறையில் முஸ்லிம்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை செலுத்த முன் வர வேண்டும்..

இனி வரும் பயணங்கள் சரியான திசை நோக்கி அமைய
இறைவன் அருள் புரிவானாக.. 

நன்றி Abbas Al Azadi

கருத்துகள் இல்லை: