'விடிய விடிய கதை கேட்டு, விடிஞ்சப்புறம் சீதைக்கு ராமன் சித்தப்பாவா?ன்னு கேட்குறியே என்று சிலர் சொல்வார்கள். இது உவமைக்காக சொல்லப்பட்டாலும், சீதைக்கு ராமன் உடன்பிறந்த அண்ணன் என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா? இது என்ன புதுக்குண்டு என்கிறீர்களா?
புதுச்சேரியின் ஆரோவில்லியில் உள்ள ஆதிசக்தி நாடகக் கலை ஆய்வு மய்யம் ஏற்பாடு செய்திருந்த இராமாயண விழாவில் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியை ரொமீலா தாபர் 16 ஆம் தேதியன்று பேருரை ஆற்றினார்.
வரலாற்றாசிரியர்கள் இந்த இராமாயணக் கதையை பல் வேறுபட்ட கோணங்களில் காண்பதை அவர் விவரித்தார். இதற்காக, மூன்று வேறுபட்ட இராமாயணக் கதைகளை - சமஸ்கிருத்தில் உள்ள வால்மீகி இராமாயணம், பாலி மொழியில் ஜடாகா கதைகளில் உள்ள புத்தமதக் கதை, பாமாகாரியம் என்னும் பிராகிருத மொழியில் உள்ள ஜைனமதக் கதை - ஆகியவற்றை அவர் ஒப்பிட்டுக் காட்டினார்.
புத்தமதக் கதையில், தசரதன் பனாரஸ் அரசர் என்றுதான் கூறப்பட்டுள்ளதே தவிர, அயோத்தி அரசர் என்று குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ராமர், லட்சுமணன், சீதா அனைவரும் தசரதரின் முதல் மனைவிக்குப் பிறந்த உடன் பிறந்த சசோதர, சகோதரிகள் ஆவர். தனது இரண்டாவது மனைவியிடமிருந்து காப்பாற்றுவதற்காக அரசர் மூன்று பேரையும் இமயமலைக்கு நாடு கடத்தி விடுகிறார். 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த மூவரும் நாட்டுக்குத் திரும்பி வந்து ராமரும், சீதாவும் இணையாக ஆட்சி செய்கின்றனர். சீதாவைக் கடத்திச் செல்லும் கதை இதில் காணப்படவில்லை என்று பேசியுள்ளார் பேராசிரியை ரொமீலா தாபர்.
ராமர் பற்றி இன்னும் என்னென்ன உண்மைகள் வெளியாகப் போகிறதோ தெரியவில்லை.
மையக் கருத்து, நன்றி;விடுதலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக