OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

உலககோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானிடம், தமிழர்களின் பரம எதிரி இஅலங்கை படுதோல்வி.

தற்பொழுது, எங்கு பார்த்தாலும் இந்த உலககோப்பை கிரிக்கெட் மோகம் தொற்றி கொண்டுள்ளது, எவனை பார்த்தாலும் என்ன ஸ்கோர் எத்தனை விக்கெட் இதை பற்றிதான் பேசிகிட்டு இருக்கானுங்க.............
இந்த வலைபூவிலும் அதனை பற்றி எழுதிக்கொண்டுதான் இருகிறார்கள். என்ன வழக்கம் போல ஒன்றிரண்டு பேரை தவிர யாருமே இந்த பாகிஸ்தான் வெற்றிபெற்றால் மட்டும் எழுதுவதே கிடையாது இவங்களுக்கு ஏன் இந்த கொலை வெறின்னு தெரியலை. சரி அவனுங்களை விடுவோம் அவினுங்க எல்லாம் நடுநிசி நாய்கள் போன்ற செக்ஸ் படத்துக்கு விமர்சனம் எழுததான் லாயக்கு.

பாகிஸ்தான் Vs இலங்கை, 
நேற்றைய ஆட்டத்திற்கு முன்பாக, பல பாசிச பத்திரிகைகள் பாகிஸ்தான் அணி இலங்கையை எதிர்த்து வெல்லுமா???????? என்று மிகபெரிய கேள்விகளையும், கிண்டல்களையும் அவர்கள் பத்திரிகளில் எழுதி கிழித்தார்கள், அவர்கள் நினைத்து கொண்டார்கள், பாகிஸ்தானியரும் இவர்களை போன்று சாம்பார் தின்கிற ஆளுகள் என்று..............சரி நாம போட்டிக்கு வருவோம். 

நேற்றைய தினம் கொழும்புவில் நடைபெற்ற உலககோப்பையின் 10 வது போட்டியில் பாகிஸ்தானும் இலங்கையும் மோதின, இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் பூம் பூம் அப்ரிடி பேட்டிங் தேர்வுசெய்தார். 





பின்னர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அஹ்மத் மற்றும் ஹபீஜ் இருவரும் நல்ல தொடக்கத்தை தந்தார்கள், இருந்தாலும் ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் 13 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அஹ்மத் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கம்ரன் அக்மல் ஹபீஜுடன் ஜோடி சேர்ந்து இலங்கை பந்துகளை  நாலாபுறமும் விலாசிதள்ளினார்கள்.  இவர்களிருவரும் நன்றாக விளையாடிவந்த நிலையில் ஹபீஜின் தவறான கணிப்பால் runout மூலம் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து கம்ரன் அக்மலும் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மிஸ்பாஹ் மற்றும் யூனுஸ் இவர்களின் நேர்த்தியான  ஆட்டத்தால், பாகிஸ்தான் அணி ஐன்பது ஓவர்களில் 277 ஓட்டங்கள் எடுத்தது, இதில் சிறப்பாக விளையாடிய மிஸ்பாஹ் அதிகபட்சமாக 83 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 6 பௌண்டரிகள் அடங்கும், இது மிஸ்பாஹ் இந்த தொடரில் அடித்த இரண்டாவது அரை சதமாகும். 


இது ஒன்றும் அப்படி எட்டமுடியாத இலக்கு இல்லை  என்ற திமிரில் களமிறங்கிய "தமிழர்களின் பரம எதிரியான" இலங்கை அணியினர், பாகிஸ்தானி அணியின் வேக புயல் அக்தரையும், மாஜிக் பந்துவீச்சாளர் அணியின் தலைவர் பூம் பூம் அப்ரிடியையும் சமாளிக்க முடியாமல் திக்கி திணறினார்கள். ஏதோ பாகிஸ்தானியர்கள் பாவப்பட்டு சில பௌண்ட்ரிகளையும், சில கேட்ச்களை நழுவவிட்ட காரணத்தால் சில ஓட்டங்களை பெற்றார்கள் என்றே சொல்லலாம். இதுலே இந்த சங்ககாராவுக்கு இரண்டு முறை ஸ்டம்பிங் வாய்ப்பையும், ஒரு கேட்ச் வாய்ப்பையும் விட்டுகுடுத்தார்கள் அப்படியும் அந்த நாதாரி ஒழுங்கா விளையாடுல. கடைசில பாகிஸ்தான் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் அபராமாக பந்து வீசிய அணி தலைவர் அப்ரிடி ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன் மூலம் இந்த தொடரின் A  க்ரூபில் பாகிஸ்தான் அணியினர் முதலிடத்தில் உள்ளார்கள். 

இதோ உங்களுக்காக சில போட்டியின் சுவாரஸ்யமான புகைப்படங்கள் 














கருத்துகள் இல்லை: