OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

தெரிந்து கொள்வோம் அமீரகத்தை!!!!!



கடந்த இரண்டாம் தேதி (வெள்ளிகிழமை) இங்கே அமீரகத்தில் அவர்களின் 40 வது தேசிய தினம் கொண்டாடப்பட்டது..............இந்த தருணத்தில் நாம் இந்த அமீரகத்தை பற்றி தெரிந்து கொள்வோம் என்று எண்ணித்தான் இந்த பதிவு..............

நாம் ஏன் இதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று பல பேர் கேட்கலாம் .........இன்று இந்தியாவில் உள்ள ஜனத்தொகையில் வெளிநாடு வாழ இந்தியர்கள் என்று எடுத்து கொண்டால் அதிக பேர் அமெரிக்காவில் இருப்பதாக எண்ணி கொண்டு உள்ளார்கள் அது முற்றிலும் தவறான ஒரு கணிப்பு..............என்னை பொறுத்தவரை..........அதில் அதிக பேர் இங்கே அமீரகத்தில் தான் இருப்பார்கள் என்பதே என்னுடைய கணிப்பு...................இதை அமீரகத்தில் உள்ளவர்களிடம் கேட்டுபாருங்கள்..............புரியும்......................முக்கியமா இங்குள்ள மலையாளிகளிடம் கேளுங்கள்................இதுதான் இவர்களுக்கு ஒரு குட்டி கேரளாவே............!!!!!!!!!!!!!



சரி இனி விசயத்துக்கு இந்த அமீரகத்தை எடுத்து கொண்டால் நம்ம தமிழகத்தின் பரப்பளவில் ஒரு சிறிய பகுதிதான் இருக்கும், இங்கு மொத்தம் ஏழு மாநிலங்கள்  அந்த ஏழு மாநிலமும் சேர்ந்துதான் இது ஒருங்கிணைந்த அமீரகம் என்று அழைக்கபடுகின்றது. இங்கே உள்ள மாநிலங்களுக்கும்  தனி தனி ஆட்சியாளர் உண்டு கிட்ட தட்ட நம்ம இந்தியாவை போன்றுதான். என்ன இங்கே அரசியல் கட்சிகள் இல்லை...............ஆனால் அரசியல் உண்டு.................அதை பற்றி நான் இங்கு கூற வரவில்லை.........இனி அந்த ஏழு மாநிலத்தையும் அதன் ஆட்சியாளர் யார் என்பதையும் பாப்போம்.

அதாவது இந்த மாநிலங்கள் எல்லாம் முன்னர் தனி தனியாகத்தான் இயங்கி வந்தன இதனை எல்லாம் ஒன்றிணைத்து அப்போது அபுதாபியை  ஆட்சி செய்த ஷைக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் என்பவர்தான் இதற்க்கு முக்கிய காரணம். அதாவது 1971 டிசம்பர் 2-ம் தேதி இவை அனைத்தும் இணைத்து 



முதலில் இவர்களின் கொடியின் வர்ணத்தை பற்றி அறிந்து கொள்வோம்:-
  1. வெள்ளை நிறம்: நம்ம தொழில்
  2. பச்சை நிறம்: நிலம்
  3. கருப்பு நிறம்: யுத்தம் 
  4. சிகப்பு நிறம்: ரத்தம்

அமீரகம் 40


இங்கே மேல உள்ள படத்தை பாருங்கள், இதுதான் இவர்களின் இந்த நாற்பதாவது வருட தேசியதினத்தின் லோகோ, இந்த லோகோ எப்படி உருவாக்கினார்கள் என்றால் இங்கே கீழே உள்ள படத்தை பார்த்தால் புரியும்.............!!!!! என்ன ஒரு சிந்தனை...........








ஏழு மாநிலங்கள்:


  1. அபு தபி
  2. துபாய்
  3. ஷார்ஜாஹ்
  4. அஜ்மான்
  5. உம் உல் குவைன்
  6. ராஸ் அல் கைமாஹ்
  7. புஜைராஹ் 
இதுதான் அந்த ஏழு மாநிலங்கள்.


ஆட்சியாளர்கள்:
  1. சயீத் பின் சுல்தான் அல் நஹ்யன், அபுதாபி ஆட்சியாளர், ஐக்கிய அரபு குடியரசு தலைவர்.
  2. ரஷீத் பின் சயீத் அல் மக்தூம், துபாய் ஆட்சியாளர், ஐக்கிய அரபுஎமிரேட்ஸ் துணை ஜனாதிபதி.
  3. சுல்தான் பின் முஹம்மத் அல் காசிமி, ஷார்ஜா ஆட்சியாளர்.
  4. Humaid பின் ரஷீத் அல் நைமி, அஜ்மான் ஆட்சியாளர்.
  5. ரஷீத் பின் அஹ்மத் அல் முஅல்லா , உம்ம அல் குவைன் என்ற எமிரேட் ஆட்சியாளர்.
  6.  முகம்மது பின் ஹமாத் அல் ஷர்கி, புஜைராஹ் என்ற எமிரேட் ஆட்சியாளர்.
  7. சாகர் பின் முகமது அல் காசிமி, ராஸ் அல் கைமா ஆட்சியாளர்.
சரி இனி இந்த ஒருகிணைப்பு எவ்வாறு உறவானது என்பதை ஒரு சிறிய வரலாறாக பாப்போம்.

  1. பிப்ரவரி 18, 1968, ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யன் மற்றும் அவரது சகோதரர் ஷேக் ரஷீத் பின்அல் மக்தூம் இருவரும் அபுதாபி மற்றும் துபாய் இடையே (Samih)) என்கின்ற பகுதியில் இருந்தார்கள் அன்று அவர்தான் ஷேக் ரஷீத் பின்அல் மக்தூம் துபாய் ஆட்சியாளர்.
  2. பிப்ரவரி 27, 1968 ஏழு ((அபுதாபி, துபாய், உம்ம  அல் குவைன் , ராஸ் அல் க்ஹைமாஹ் , புஜைராஹ் , ஷார்ஜா மற்றும் அஜ்மான் ) மற்றும் கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆட்சியாளர் ஓமன் கடற்கரையில் அரபு எமிரேட்ஆட்சியாளர்களை சந்தித்தது.
  3. 21 - 25 அக்டோபர் 1969 , ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யன், அபுதாபிஆட்சியாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலும் இரண்டு ஆண்டுகள் யூனியன் தலைவராகவும் தேர்ந்தெடுக்க பட்டார் , , கூட அவரது மதிப்பிற்குரியவரே ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் , துபாய்ஆட்சியாளர், மற்றும் துணை ஜனாதிபதியாக  தேர்ந்தெடுக்கப்பட்டார் அதேகாலத்தில்.
  4. கத்தார் மற்றும் பஹ்ரைன் தங்கள் சுதந்திரத்தை அறிவித்தன.
  5. ஜூலை 18, 1971 ஏழு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆட்சியாளர்கள் சந்தித்து கூட்டாட்சி மாநிலத்தில் ((UAE)) சார்பாக ஆவணத்தில் கையெழுத்திட்டது   , ஆனால் ராஸ் அல் கைமா  அந்த நாள் சேர்ந்தது என்று அறிவிக்க இல்லை.
  6. ராஸ் அல் கைமா  பிப்ரவரி 10, 1972 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் சேர அதன் விருப்பத்தை தெரிவித்தது.
இப்படிதான் இந்த ஒருங்கிணைந்த அமீரகம் உருவானது...................சரி இனி நாம் இந்த மாநிலங்களை பற்றி தனி தனியாக பாப்போம்..........ரொம்ப விளக்கமெல்லாம் இல்லை.................வெறும் புகைப்படங்கள்தான்.............உங்கள் பார்வைக்கு.........

அபு தபி:- 


 துபாய்:- 


ஷர்ஜாஹ்:-

அஜ்மான்:-

உம் அல் குவைன்:-

ராஸ் அல் கைமா:-

புஜைராஹ்:-


இவ்வளவு தாங்க மேட்டர்..................இதுல என்ன ஒரு கேள்வி குறி தெரியுமா??

எல்லோரும் ஒரு 25vathu  வருடம்,, இல்லை 50vathu  வருடம், 100vathu  வருடம்தான் சிறப்பாக கொண்டாடுவாங்க,.,.,.,.,.,.,.,.,.,.,.,.இவிங்க என்னடான்னா 40vathu  வருடத்தை ரொம்ப சிறப்பாக கொண்டாடுறாங்க............அதுதான் புரியலை............


எழுத்து பிழை இருந்தால் நீங்களே மன்னிக்கலாம்............என்னுடைய பதிவில் பிழை இருந்தால் நீங்கள் கூறினால் தான்..........நான் திருத்தி கொள்ள முடியும்.............புரிதலுக்கு நன்றி...............

உங்களுக்கு தெரிந்தால்.....................கருத்து வைத்து விட்டு போங்க................இல்லை ஒட்டு போடுங்க........................

3 கருத்துகள்:

Ramesh சொன்னது…

To my knowledge they celebrate every year - this year little bit grand manner that's all

Ramesh சொன்னது…

but a good article

Mohamed Faaique சொன்னது…

40வது வருடம்’னு இல்ல.. ஒவ்வொரு வருடமும் கலை கட்டும்...