நாளை (30-12-2011), சென்னைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையே புயல் கரையை கடக்கலாம் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புயல் மையம் கொண்டுள்ளதன் எதிரொலியாக பாண்டிச்சேரியில் இன்று பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்துவருகின்றது.
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசுத்துறைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இது குறித்த அவசர தேவைகளுக்கு 1077 என்ற toll free நம்பரை அழைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்த விழிப்புணர்வை அந்தந்த பகுதி வாழ் மக்களுக்கு தெரிவித்து எச்சரிக்கை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
காலை முதல் இருண்டு கிடந்தது வானம். பிற்பகல் சரியாக ஒருமணி முதல் மழைத்தூரல் துவங்கியுள்ளது. சென்னையில் கடுமையான காற்று மழை பெய்து வருவதால் இன்றிரவு கடலூர் மாவட்டம் சற்று கடுமையை சந்திக்கும் போல தெரிகின்றது.
மேலும்:-
புயல் தீவிரமாக வலுவடைந்து வருவதாகவும் , நாளை முதல் கடும் மலை பெய்யும் எனவும் 50 அல்லது 60 km வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் 30 ஆம் தேதி சென்னைக்கும் நாகைக்கும் இடையில் பாண்டி அல்லது கடலூர் அருகே புயல் கரையை கடக்கும் எனவும் புயல் கரையை கடக்கும் போது 120 km வேகத்தில் காற்று வீச கூடும் எனவும் கரண்ட் மற்றும் தொலை தொடர்பு பாதிக்கப்படும் எனவும் ரமணன் கூறினார். துஆ செய்யுங்கள் .
எங்கும் இல்லாத வகையில் கடலூர் OT இல் 10 ஆம் நம்பர் அபாய கூன்டு ஏற்றப்பட்டுள்ளது
எங்கும் இல்லாத வகையில் கடலூர் OT இல் 10 ஆம் நம்பர் அபாய கூன்டு ஏற்றப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக