OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 6 டிசம்பர், 2011

பாப்ரி மஸ்ஜித்

பாப்ரி மஸ்ஜித்


பாப்ரி மஸ்ஜித் ஒரு வரலாற்று பார்வை...

முஸ்­லிம்களுக்குச் சொந்தமான 450 ஆண்டு கால பாபர் பள்ளிவாசல், மத பயங்கரவாதிகளால் இடிக்கப்பட்டு பத்தொன்பது ஆண்டுகள் நிறைவடைகிறது. அதை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் பதறுகிறது. சட்டத்தையும், நீதிமன்ற உத்தரவையும் மீறிதான் இப்பயங்கரவாதம் திட்டமிட்டு நடந்தேறியது. பள்ளிவாசல் இடிப்பும், அதைத் தொடர்ந்து முஸ்­ம்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரங்களும் சர்வதேச அளவில் இந்தியாவை தலைக்குனிய வைத்தது.



பாபர் பள்ளிவாச­லின் வரலாறு

பாபர் பள்ளிவாசலுக்கான அடித்தளத்தை உருவாக்கியது பாபர் அல்ல. பாபரின் படையெடுப்புக்கு முன்னாள் ஆட்சி செய்து கொண்டிருந்த இப்ராஹிம் லோடி தான் அதை எழுப்பியவர். அதை நிரூபிக்கும் பாரசீக கல்வெட்டு பள்ளிவாச­ல் இருந்தது. 1934லில் அயோத்தியில் நடந்த கலவரத்தின் போது, பயங்கரவாதிகள் அதனைப் பெயர்த்துவிட்டதாக ராம ரக்ச திரிபாதி என்பவர் ''ராக்த் ரஞ்சித் இத்திஹாஸ்'' என்ற நூ­ல் குறிப்பிடுகிறார்.

பாபர் பள்ளிவாச­ல் இருந்த கல்வெட்டில் என்ன இருந்தது என்பதை இந்திய தொல்பொருள் துறையின் இயக்குனர் ஏ. பூரேர் என்பவர் குறிப்பிடுவதாவது: ''முதலாவது பானிபட் யுத்தத்தில் 25-04-1526ல் இப்ராஹிம் லோடி, பாபரினால் கொல்லப்படுகிறார். இதனைத் தொடர்ந்து பாபர் இப்பள்ளிவாசலை கட்டி முடித்தார்.''

இங்கே ஒன்றை நடுநிலையாளர்கள் கவனிக்க வேண்டும். ஹிஜ்ரி 930லில் அதாவது கி.பி. 1524லில் இப்ராஹிம் லோடியின் காலத்தில் பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இரண்டு வருடத்திற்குப் பிறகு இப்ராஹிம் லோடி கொல்லப்படுகிறார்.

ஆனால், சங்பரிவார சக்திகள் கி.பி. 1528லில் ராமர் கோயில் இடித்துவிட்டு பாபர் பள்ளிவாசல் கட்டினார் என ஒரு பொய்யை தொடர்ந்து புனைந்து வருகிறார்கள். வரலாறுகளை திரிப்பதுதானே இவர்களது வேலை!

பாபர் பள்ளிவாசல் லி ராமஜென்ம பூமி குறித்து விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அலஹாபாத் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் சுசீல் ஸ்ரீவத்ஸவா என்பவர், ராமர் கோயிலை இடித்ததாகக் கூறப்படும் 1528லிம் ஆண்டு மார்ச் மாதம் பாபர் அயோத்திக்கே வரவில்லை என்றும் அக்காலகட்டத்தில் பட்டாணியர்களுடன் வடமேற்கு மாகாணத்தில் பாபர் போரிட்டுக் கொண்டிருந்தார் என்றும் குறிப்பிடுகிறார்.

பாபர்-கோயிலை இடித்தாரா?


பாபர் வாழ்ந்த காலத்தில் பாபரை கடுமையாக எதிர்த்தவர் விமர்சித்தவர், சீக்கிய மதத்தைச் சேர்ந்த குருநானக். இவர் தான் சீக்கியர்களின் வேத நூலான குரு கிரஹந்த் சாஹிபை எழுதியவர். பாபர் எதைச் செய்தாலும், அதை உன்னிப்பாக கவனிக்கும் குருநானக், பாபர் வாழ்ந்த காலத்திலேயே அயோத்திக்கு வருகை புரிகிறார். பாபர் பள்ளிவாசலையும் பார்வையிடுகிறார். பாபர் அங்கு ஒரு கோயிலை இடித்துப் பள்ளிவாசலை கட்டியிருந்தால் அதை அவரது சீடர்கள் குருநானக்கிடம் சொல்­யிருப்பார்கள். பாபர் இறந்த பிறகு 9 ஆண்டுகள் வரை வாழ்ந்த குருநானக், தனது நூ­ல் பாபரின் அனைத்து நடவடிக்கைகளையும் விமர்சித்துள்ளார். ஆனால், பாபர் அயோத்தியில் கோயிலை இடித்துத் தான் பள்ளிவாசலைக் கட்டினார் என அவரது நூ­ல் எங்கும் குறிப்பிடவில்லை. ஒரு கோயில் இடிக்கப்பட்டது போன்ற மாபெரும் சம்பவத்தை பாபர் செய்திருந்தால் குருநானக் அதை விமர்சிக்காதது ஏன்?

ராமாயணத்தை இந்தியில் எழுதியவர் துளசிதாசர். ராமர் கோயில் இடிக்கப்பட்டதாக பயங்கரவாதிகள் கூறும் அதே 1528 ஆம் வருடத்தில் 30 வயது இளைஞராக அயோத்தியில் வாழ்ந்து வந்தவர் தான் துளசிதாசர்.

ராமர் கோயில் இடிக்கப்பட்டிருந்தால் துளசிதாசர் சும்மா இருந்திருப்பாரா? அவர் தமது ''ஸ்ரீராமசரித் மானஸ்'' எனும் காவியத்தில் எந்தப் பக்கத்திலும் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகக் குறிப்பிடவே இல்லையே ஏன்?

பாபருக்குப் பிறகு அவரது பேரன் அக்பர் காலம் வரை வாழ்ந்து, அவரது ஆதரவோடு தான் துளசிதாசர் தனது காவியத்தையே எழுதி முடிக்கிறார். பாபர் கோயிலை இடித்திருந்தால், இந்துக்களின் உற்ற நண்பராக இருந்த மன்னர் அக்பரின் காலத்திலேயே அயோத்தி இந்துக்களின் துணையோடு துளசிதாசர் அதை மீட்டு கோயிலாக மாற்றியிருப்பாரே!

யார் இந்த பாபர்?


டாக்டர் ராதி சியாம் சுக்லா எனும் ஹிந்து மத அறிஞர் ''சச்தித்தரர் பரமாணிக் இத்திஹாஸ்'' எனும் நூ­ல் 458லிஆம் பக்கத்தில் ''ராமர் கோயிலை பாபர் இடித்தார் எனக் கூறுவதே அநீதியாகும்'' எனக் குறிப்பிடுகிறார். அதே நூ­ன் 16லிம் பக்கத்தில் அயோத்திலுள்ள ''தாண்ட்தவான் குண்ட்'' என்ற கோயிலுக்கு பாபர் 500 ''பிகாஸ்'' நிலம் வழங்கியதாக குறிப்பிடுகிறார். அதற்கான ஆதார ஆவணம் இப்போதும் உள்ள அதே கோயி­ல் இருக்கிறது என டாக்டர் சுக்லா என்பவர் குறிப்பிடுகிறார். தவிர, அயோத்தியிலுள்ள வேறு பல கோயில்களுக்கும் பாபர் நில தானங்களை வழங்கியிருக்கிறார்.

பாபர் தன் மகன் ஹுமாயுனுக்கு எழுதிய கடிதத்தில், ''உன் குடிமக்கள் வணங்கும் ஆலயங்களை மதித்து நட'' என்றும் ''உன் குடிமக்கள் (இந்துக்கள்) மனதைக் கவர மாட்டிறைச்சி உண்பதை கைவிடு'' என்றும் எழுதியிருக்கிறார். இக்கடிதம் டெல்­யில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இப்போதும் இருக்கிறது. இவர் தான் பாபர்!

அயோத்தி - ராமர் - கோயில்?

ஆர்.எஸ். சர்மா எனும் வரலாற்றாசிரியர் கூறுகிறார்: ''அயோத்தியில் 15, 16 கோயில்கள் உள்ளன. இதன் பூஜாரிகள் ஒவ்வொருவரும் தங்களது கோயி­ல்தான் ராமர் பிறந்தார் எனக் கூறுகிறார்கள்'' என தெளிவுபடுத்துகிறார். (ஆதாரம்: New Age - Oct 8, 1989)


புகழ்பெற்ற அகழ்வாராய்ச்சி நிபுணரான ஹெச்.டி. சங்கா­யாவிடம்.

''அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தைச் சுட்டிக் காட்ட முடியுமா?'' என்று வினவியதற்கு அவர் ''இயலாது'' என்று பதிலுரைத்தார். (சன்டே, மார்ச் 27, 1988)

அப்போது பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தற்போதைய பிரதமர் ஏ.பி. வாஜ்பேயி, மூத்த கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஹீரன் முகர்ஜீக்கு எழுதிய கடிதத்திலும், ''""It is not possible to pinpoint the exact spot where Rama was born'' ''ராமர் பிறந்த அந்தக் குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக் காட்டுவது முடியக்கூடியது அல்ல'' என்று குறிப்பிட்டுள்ளார். (பார்க்க: Muslim India, Nov Nov 89, Page 502))

பிரச்சினையும் - திருட்டு சிலையும்

இந்திய சுதந்திரப் போரில் இந்துக்களும், முஸ்­ம்களும் இணைந்து போராடத் தொடங்கிய காலத்தில், அவர்களை பிரிப்பதற்காகவும், விடுதலைப் போரை நசுக்குவதற்காகவும் ஆங்கிலேயர்கள் வரலாற்றில் செய்த பித்தலாட்டங்கள் தான் பிரச்சினைகளுக்குக் காரணங்களாகும். இதை ''இஸ்லாமும் லி இந்தியக் கலாச்சாரமும்'' என்ற நூலை எழுதிய முன்னாள் ஒரிஸ்ஸா மாநில ஆளுநரும், வரலாற்று ஆய்வாளருமான பி.என். பாண்டே தனது நூ­ல் குறிப்பிடுகிறார்.

450 ஆண்டு கால பள்ளிவாச­ல் 1949 டிசம்பர் 22 வரை இரவு நேர இஷா தொழுகையை அயோத்தி முஸ்­ம்கள் நடத்தி வந்துள்ளார்கள். அன்றைய நள்ளிரவில் தான் ''மத பயங்கரவாதிகள்'' பாபர் பள்ளிவாச­ன் பூட்டை உடைத்து, திருட்டுத்தனமாக ராமர் சிலைகளை உள்ளே வைத்தனர்.

அன்றை பிரதமர் நேருவும், உ.பி. மாநில காங்கிரஸ் முதல்வர் கோவிந்த பல்லப பந்துலுவும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், பாபர் பள்ளிவாசல் முஸ்­ம்களின் கட்டுப்பாட்டில் மீண்டும் வந்திருக்கும். வன்முறை நெருப்பும் வளர்ந்திருக்காது.

கருத்துகள் இல்லை: