OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 8 டிசம்பர், 2011

தெரிந்து கொள்வோம் இன்று ஒரு தகவல்

இன்று உலகத்துல எங்கு பார்த்தாலும் இந்த கள்ள காதலும், பள்ளி பெண்கள் தப்பான வழியில் சென்று அதனால  உண்டான கருவை கலைப்பதும் தான் இன்று மிக பெரிய செய்தியாக அன்றாடம் நாம் காண்கிறோம். இதை பற்றி நாம் இங்கே பார்க்க போறதில்லை, இதனுடன் தொடர்பான ஒரு விசயத்தைதான் பார்க்க போகின்றோம் அப்படி என்னதாங்க அதுவென்றால், வேற ஒன்னுமில்லைங்க இந்த கரு கலைப்ப பத்திதான் பார்க்க போறோம்........................மேல இல்லை கீழ படிங்க.






கருகலைப்பு:-

அதாவது எனக்கு தெரிந்து எந்த நாட்டு சட்டத்திலும் கருகலைப்பு செய்வது குற்றம் அதற்க்கு சரியான தண்டனைகள் உண்டு, ஒரு சிலவற்றை தவிர அதாவது தாய்க்கு ஆபத்து என்றாலே தவிர மற்ற படி கருகலைப்பு செய்தால் குற்றமே, சரி இது எப்போது குற்றமாகும் என்பதை பார்க்கலாம்.

முதலாவது இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று டி அண்ட் சி மற்றொன்று அபார்சன், அதாவது கரு உண்டாகி பத்து வாரங்களுக்குள் செய்தால் அதுக்கு பெயர் டி அண்ட் சி அதுக்கு அப்புறம் செய்தால் அதுக்கு பெயர் அபார்சன். இதுல இந்த டி அண்ட் சி என்பது கரு சரியாக வளரவில்லை, துடிப்பு இல்லை போன்ற பிரச்சினைகள் வந்தால் தான் இந்த டி அண்ட் சி செய்ய முடியும் அதுவும் எல்லாம் இந்த பத்து வாரங்களுக்குள் தான் அதுக்கு மேல போயிட்டா அதுக்கு ஏகப்பட்ட பார்மாலிடிஸ் இருக்கு அதுக்கு பேர்தான் அபார்சன், ஆனால் டாக்டர்ஸ் எல்லாம் அதையும் டி அண்ட் சி தான் சொல்லுவாங்க, இந்த அபார்சன் கூட பன்னிரண்டில் இருந்து இருபது வாரங்கள் வரைதான் செய்யலாம் அதற்க்கு மேல போச்சுன்னா அதுக்கு பேர் கொலை..............

சரி உலக சட்டத்தை விட்டுடுவோம், இந்திய சட்டப்படி பன்னிரண்டு வாரத்திற்கு அப்புறம் ஒருத்தருக்கு அபார்சன் செய்தால் அது இல்லீகல். அப்படி ஒருத்தருக்கு செய்ய வேண்டுமென்றால் இரண்டு டாக்டர்ஸ் கையெழுத்து போடா வேண்டும், இந்த ஆக்ட்டுக்கு   பேர் எம்.டி.பி. கருவில் குழந்தை இருபது வாரத்திற்கு மேல் அபார்சன் செய்தால் அதற்க்கு பெயர் கொலை.


ஆனால் இந்த கொலைய சில டாக்டர்ஸ் வெறும் பணத்திற்காக செய்கிறார்கள் சர்வசாதரணமாக..................இதுதான் கொடுமையே..............
எனவே இந்த மாதிரி அதிகமா கொலை செய்கின்ற டாக்டர்ஸ் கிட்டே இந்த சட்டத்தை அடிகடி நியாபகம் செய்யுங்கள்................

அப்புறம் படித்து விட்டு ஒட்டு போடதவங்களுக்காக ஒரு சட்டம் வருதுங்க............கொஞ்சம் ஜாக்கிரதை...............


1 கருத்து:

Mohamed Faaique சொன்னது…

எங்க ப்லாக் பக்கம் வராதவங்களுக்கு எதாவது தண்டனை கிடையாதா???