ஒரு காலம் இருந்தது, பல குடும்பங்கள் அப்பொழுது கூட்டு குடும்பமாகதான் இருந்தார்கள். அப்பொழுது கூட ஏற்படவில்லை இந்த நிலை. அப்பொழுதெல்லாம் அவரவர் வீட்டில் தான் குடும்பங்களின் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடைபெறும், அப்பொழுதும் இது ஏற்படவில்லை..................என்று விஞ்ஞானம் வளர்ந்ததோ, என்று தனி குடித்தனம் ஆரம்பித்ததோ அன்றிலிருந்தே இது மிகவும் அதிகமாக வளர்ந்து விட்டது...................அது வேற ஒண்ணுமில்லை.................உணவுகள் வீணாக்க படுவது.................பட்டினி சாவு...................போன்றவைகள்....
கூட்டு குடும்பம் இருந்த பொது யாராவது விருந்தாளி வந்தால் அவுங்களுக்காக செய்யகூடிய உணவுகள் மீதமிருந்தாலும் அது வீணாக போகாது அது அந்த குடும்பத்தின் அடுத்த வேலை உணவாக மாறிவிடும் ஆனால் இன்று நடப்பதோ வேறு..................வீட்டில் இருப்பதோ இரண்டு மூன்று பேர்தான் அன்றால் உணவுகள் வீணாகாமல் என்னவாகும், அதுவும் பெரிய பெரிய நகரங்களில் இருக்கு தனி குடிதனமேன்றால் அவ்வளவுதான். அந்த காலத்தில் கலயனங்கள் வீடுகளில் நடக்கும், அங்கு தயாரிக்கப்படும் உணவுகள் அவர்களின் சொந்தங்களுக்கு பகிர்ந்து குடுக்கப்படும், ஆனால் இன்று கலையான மண்டபங்களில் நடக்கும் கல்யாணங்களில் இது போல எதுவும் நடப்பதில்லை, ஒரு சிலர் மீதுவிட்ட உணவுகளை எதாவது அநாதை ஆசிரமங்களுக்கோ அல்லது அங்குள்ள ஏழை மக்களை வாழும் பகுதிக்கோ அனுப்பிவிடுகிறார்கள் அதுவும் ஒரு சிலரே. பெரும்பாலான இடங்களில் அது கூப்பி தொட்டிக்குதான் போகின்றது.................????????????? இந்த நிலை ஏன் இதை நாம் கட்டு படுத்த என்ன வழி?.
இது சம்பந்தமாக குரானில் அழகான ஒரு ஆயித்து உண்டு:
"உண்ணுங்கள் பருகுங்கள், வீண் விரயம் செயாதீர்கள்"
இந்த வரிகள் இன்று அந்த அளவுக்கு இன்றியமையாதது என்றால் அது மிகையாகாது.
சமீபத்தில் இந்தியாவில் உணவு பொருட்கள் வீணாவது குறித்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் லோக்சபாவில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்திய உணவு சேமிக்கும் கிடங்கில் போதிய இடவசதி இல்லாததால் பெரும்பாலான உணவுகள் வீனடிக்கபடுவதாக செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்க்கு வந்தது, உணவு பொருட்கள் வீணாவதை தடுக்க அளவுக்கு அதிகமான உணவு பொருட்களை ஏழை மக்களுக்கு வழங்குமாறு கோர்ட் உத்தரவுவிட்டது........! கண்டிப்பாக இந்தியாவில் இது வரவேற்க்கதக்க ஒன்றுதான்!
மேலும் எதியோபியா, சோமாலியா போன்ற ஆப்ரிக்க நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஒரு வேலை சோறு கிடைப்பதே மிகவும் அரிதான ஒன்றாக உள்ளது என ஐ நா புல்லின் விபரம் தெரிவிக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் சென்ற ஆண்டு 53 லட்சம் டன் உணவுகள் குப்பையில் போடப்பட்டதாக கணக்கிட்டுள்ளனர், இதன் மதிப்பு சுமார் ௧௦ ஆயிரம் கோடி ரூபாய், அதாவது இங்கிலாத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் சாபிடாத உணவுக்காக 37440 லட்ச ரூபாய் செலவு செய்கிறார்கள். இப்படி வீணாக்கிய உணவை சமைக்க ௨௪௩ லிட்டர் நல்ல தண்ணீரை ஒவ்வொருவரும் காலி செய்துள்ளனர், இது சராசரியாக ஒரு மனிதன் உபயோகப்படுத்துவதில் ஒன்னரை மடங்கு அதிகம். அதுமட்டுமில்லாமல், இதனால் வீணான மின்சாரம், காஸ், நேரம் மற்றும் உழைப்பு போன்றவற்றையும் கணக்கிட்டால் தலை சுற்றுகிறது. இது இங்கிலாந்தின் நிலைமை,
சரி நாம் நம்முடைய வளைகுடா நாடுகளை பற்றி பாப்போம்,
வளைகுடா நாடுகளை பொறுத்தவரை, இன்டுள்ள பெரும்பாலனவர்களுக்கு தெரியும் அளவுக்கு அதிகமான உணவுகள் குப்பைக்கு போவது இங்குதான் என்று, அதற்க்கு சான்றாக சில சாம்பிள் படங்கள் கீழே.
இந்த படங்களை பார்த்தாலே உங்களுக்கு தெரியும், இருந்தாலும் இதோ உங்களுக்காக ஒரு புள்ளி விபரம்,
முதலில் நம்ம அமீரக தலைநகர் அபுதாபியில் மட்டும், 500 ௦௦ டன் அளவுள்ள உணவுகள் வீனடிக்கபடுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது, இந்த 500 டன் வெறும் ரமலான் மாதத்தில் மட்டுமே என்கிறது அந்த ஆய்வு. அப்படியென்றால் மற்ற நாட்களில் எவ்வளவு என்று நீங்களே ஒரு ஆய்வு நடத்தி பாருங்கள்.................
அடுத்து நம்ம பஹ்ரைனில் பார்த்தால், 100 டன் க்கு மேல உணவு பொருட்கள் வீனடிகபடுவாதாக ஒரு புள்ளி விபரம் கூறுகின்றது, இது சும்மா நியூ இயர் பார்ட்டி கேன்சல் செய்வதால் மட்டும் என்கிறது. இதே மாதிரிதான் இங்குள்ள துபாய், ஜோர்டான், எகிப்து மற்றும் சிரியா போன்ற நாடுகளிலும் வீனடிக்கபடுகின்றது என்கிறது இதே ஆய்வு.
அடுத்து நம்ம அமெரிக்காவை எடுத்துகொண்டால், அவிங்க இவிங்களோட ரொம்ப மோசம், அதாவது அவனுக தயாரிக்கிற உணவுகளில் பாதி குப்பைதொட்டிதான் சாபிடுகிறதாம். மேலும் UN Food & Agriculture அமைப்பு என்ன சொல்கிறது தெரியுமா?, உலகம் முழுவதும் தயாரிக்க கூடிய உணவுகளில் குப்பைக்கு போவது மட்டும் 1.3 பில்லியன் டன்ஸ்.!!!!!!!!!!!!!!! என்னங்க தலைய சுத்துதுதா? கொஞ்சம் பொறுங்க அடுத்த பாராவை படிங்க..................ஹார்ட் அட்டாக்கே வரும்.
உலகம் முழுவதும், பட்டினியால் அவதிபடுவோர் எவ்வளவு தெரியுமா? சுமார் 925 மில்லியன் மக்கள் என்கிறது இதே அமைப்பு.
கொடிகனகான மக்கள் ஒரு வேலை சோத்துக்கே கச்டபடுவதற்க்கு இது போன்ற அதிகாரவர்க்க நாடுகளே காரணம் என்று நாம் மொத்த பழியையும் அவர்கள் போட்டு விட முடியாது, இதற்கெல்லாம் நாம் அரசாங்கத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் குறை கூற முடியாது, மக்களாகிய நாம் தான் பொறுபேற்க வேண்டும், நம்மில் எத்தினை பேர் (என்னையும் சேர்த்துதான்) தினமும் உணவுகளை தூகிபோடாமல் சரியாக சாப்பிட்டு இருக்கிறோம்?????????? உங்களை நீங்களே கேட்டு பாருங்கள்......................அப்பொழுது தெரியும் நாம் எவ்வளவு மக்களை தினம் தினம் பட்டினியால் சாகடிகிறோம் என்று................................அதற்காக நம்மால் உலகில் பட்டினியால் சாகும் அனைவரையும் காப்பாற்ற முடியாது, நம்மக்கு பக்கத்தில் இருப்பவரை காப்பாற்றலாமே..............அவரவர் பக்கத்தில் இருக்கும் ஏழைகளுக்கு உணவளிதாலே, உலகத்தில் பட்டினி சாவையும், உணவுகள் வீணடிக்க படுவதையும் தவிர்கலாம்..........................
என் அருமை வலைபூ ஆசிரியர்களே..........................இதை பற்றி நீங்களும் உங்களுடைய வலைப்பூவில் பதிவுகள் மூலம் நம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு அளிக்கலாம். நாமெல்லாம் ஆரறிவு படைத்த மனிதர்கள்..................என்பதை மனிதில் கொண்டு சிந்தித்து செயல் படுவோம்..............................நிச்சயமாக அந்த ஆறாவது அறிவு சிந்திபதர்க்கு மட்டுமே.....................
நம்ம குழந்தைகளை இதுபோல உண்பதற்கு...............??????????????????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக