OnlinePJ

Thanks for Visiting my Page

சனி, 28 மே, 2011

495 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்த சதாம் உசேன்!

மேலப்பாளையம்: எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் நெல்லை மேலப்பாளையம் பீடி கம்பெனி கூலித் தொழிலாளி மகன் 495 மார்க் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மேலப்பாளையம் மேல்நிலைப்பள்ளி மாணவன் சதாம் உசேன் 495 மார்க் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

இவர் தமிழ் 98, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 99 என மொத்தம் 495 மார்க் பெற்றுள்ளார். இவரது தந்தை அப்துல்ரகுமான். மேலப்பாளையம் பீடிக்கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றிவருகிறார். தாய் சுலைகாபீவி பீடி சுற்றும் தொழிலாளி. மாணவனின் தங்கை சாஜிதா பானு 6ம் வகுப்பும், மற்றொரு தங்கை பாஸின் பாத்திமா 8ம் வகுப்பும் படித்து வருகிறார். தம்பி செய்யது சக்காரியா 1ம் வகுப்பு படித்து வருகிறார்...

சாதனை குறித்து மாணவன் சதாம் உசேன் கூறும்போது, "பள்ளியில் தினந்தோறும் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை அன்றே படிப்பேன். பள்ளி முடிந்தவுடன் தினமும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 11 மணி வரையிலும் படிப்பேன். எனது வெற்றிக்கு பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், நண்பர்கள், பெற்றோர் நல்ல ஊக்கம் அளித்தனர். மாநில அளவில் 2வது ரேங்க் கிடைக்க செய்த இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்...

பிளஸ் 2 தேர்வில் அதிக மார்க் எடுத்து மெக்கானிக்கல் இன்ஜினியராக விரும்புகிறேன் என்றார்'. பள்ளித் தலைமை ஆசிரியர் ஷேக்முகம்மது கூறுகையில், "மாநில அளவில் எங்கள் பள்ளி மாணவன் இரண்டாமிடம் பெற்றது மகிழ்ச்சியை தந்துள்ளது. பீடி கம்பெனியில் பணியாற்றும் ஏழை கூலித் தொழிலாளியின் மகனான சதாம் உசேன் கஷ்டப்பட்டு படித்து ரேங்க் பெற்றுள்ளார். பிளஸ் 2 தேர்விலும் மாநில ரேங்க் பெற பயிற்சி அளிப்போம் என்றார்.

இறைவா!அணைத்து மாணவர்களுக்கும் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவயாக!



Thanks www.tntjpno.tk

கருத்துகள் இல்லை: