காதல் கண்டிப்பாக சினிமாவில் இருப்பது
போன்று நிஜத்தில் ஒரு போதும் இருக்காது என்பதற்க்கு இதோ திரைப்பட இயக்குனர் சேரன் மிக
சரியான ஒரு உதாரணம். இவர்கள் சொல்லும் காரணம் மாப்பிள்ளை ஒழுக்கமற்றவன், சின்ன பொண்ணுக்கு எண்ணத்தெரியும்?? இதெல்லாம் ஏட்டு சுரக்காய் கரிக்கு உதவாது போன்ற தத்துவங்கள் மட்டுமே.
ஆனால் அதே ஒழுக்கமற்றவன், குடிக்காரன், பொம்பளை
பொறுக்கியைதான் ஆண்மைதானம் என்று காட்டியது இந்த கூறுகெட்ட தமிழ் சினிமா!. அதையே பார்த்து
பார்த்து வளர்ந்த சமூகம் அதே போன்று தங்கள் வாழ்க்கைத்துணையை தேடிக்கொள்ளத்தானே செய்வார்கள்.
டாக்மார்க்கில் குடிக்காத ஹீரோவை எப்படி உங்களால் காட்டாமல் இருக்க முடியாதோ அதே மாதிரி
பூமியில் போதையில் தள்ளாடாத மனிதனை நீங்கள் பார்க்க முடியாது.
ஒழுக்கமுள்ள பைய்யனை தேடும் ஒவ்வொருவர்
தந்தையர்களும், ஒரு படைப்பாளிக்குரிய
பொறுப்புடன் என்றாவது ஒரு படம் எடுத்தார்களா? பள்ளி சீருடையுடன்
காதலிக்கும் சிறுமி உங்கள் படத்தின் கதாநாயகி, இதை கண்டித்த சமூக
ஆர்வலர்களை பார்த்து “நாட்டில் நடக்காததையா நாங்கள் காட்டிவிட்டோம் என்று வேற கூப்பாடுகள்”
இதே சேரன் தன்னுடைய படங்களில் திருமணம்
ஆனா பின்பு கூட தான் முன்னாள் காதலியை தேடி அலைகிறார் கேட்டால் காதல் புனிதமாம். அங்கே
புனிதமாக பட்டது நிஜத்தில் அசிங்கமா தெரியுதா? இயல்பாக காதல் வருவது வேறு. ஆனால் தமிழ் சினிமா காதலிக்க தூண்டுகிறது, காதலிக்காதவன் முட்டாள், முற்றும் துணிந்த முனிவர்கள்
என்றெல்லாம் பாடமெடுக்கிறது, அதன் தாக்கம் இங்கே யாராவது யாரையாவது
காதலித்துக்கொண்டே இருக்கிறார்கள் அதனால் அவன் எப்படி பட்டவனாக இருந்தாலும் வீட்டை
விட்டு ஓடுகிறார்கள். அவர்களின் குறிக்கோள் எப்படியாவது ஒரு காதல் வேண்டும். அப்படி
காதலிக்க முற்பட்டவர்கள் இந்த மாதிரி படங்களை எடுத்தவர்களின் மகனோ, மகளாக இருக்கும் பட்சத்தில் வலிக்கிறது. உங்களால் எத்தனை குடும்பத்தார்களுக்கு
வலித்திருக்கும். உங்களுக்கு வந்தா வலி அடுத்தவர்களுக்கு வந்தால் அது என்ன சலியா???
நல்லவனோ கேட்டவனோ நம் மனதிர்க்கு பிடித்தவனோடு
ஒரு நொடி வாழ்ந்தால் போதும் என்பதை பல படங்களில் கேட்டு கேட்டு நாம் மூளை சலவை செய்யப்பட்டு
இருக்கிறோம். நீங்கள் எப்படி உங்கள் படங்கள் வெற்றி பெற பாவ புன்னீயம் பார்ப்பதில்லையோ
அதே மாதிரிதான் நிஜத்தில் காதலர்களும் அதை ஏறுடுத்துக்கூட பார்க்கமாட்டார்கள்.
போங்க சார் இனியாவது உண்மையை உலகிற்க்கு
சொல்லும் உன்னத சினிமாக்களை எடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக