OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

இதை யாரும் படிக்காதீங்க!!!!!!!!!



இந்தியா மதசார்பற்ற நாடு இது என்னுடைய பள்ளிக்காலங்களில் நான் படித்தது. ஆனால் அந்த மதசார்பற்ற என்ற வார்த்தை இங்கு டாஸ்க்மார்க்கில் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது என்றால் அது மிகையாகாது.

ஆம் இன்று இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள், கிறிஸ்துவர்கள் சிலுவை அணித்து பள்ளிக்கு வரலாம், இந்துக்கள் பொட்டு வைத்துக்கொண்டு பள்ளிக்கு வரலாம், ஏன் சீக்கியர்கள் கத்திக்கூட வைத்துக்கொள்ளலாம் ஆனால் ஒரு இஸ்லாமிய பெண் தான் இஸ்லாமிய கோட்பாடு படி பர்தா அணிந்து பள்ளிக்கு அமரக்கூடாது ஏன் இந்த பாகுபாடு?? எங்கே போனது மதசார்பற்ற கொள்கை. ஏன் இன்னும் சொல்லப்போனால் இந்திய ராணுவத்தில் கூட ஒரு சீக்கியன் தாடிவைத்துக்கொள்ளாம் ஆனால் ஒரு இஸ்லாமியன் தாடி வைக்க தடை, எங்கேடா போச்சு மதசார்பின்மை. இன்று இந்தியாவில் இஸ்லாமிய கல்விக்கூடங்களை தவிர மற்ற எந்த ஒரு கல்விக்கூடங்களிலும் இஸ்லாமியர்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று அவர்களின் தொழுகையை நிறைவேற்ற சரியான நேரம் குடுக்கப்படுவதில்லை.

அடுத்து இந்த தர்தலை சினிமாக்கள், இந்தியா சினிமாக்களில் வரும் அனைத்து வில்லன்களும் இஸ்லாமியர்கள்தான். இதற்க்கும் இந்த சினிமாக்களை பார்த்து சான்றிதழ் வழங்கும் மத்திய அரசாங்கமும் கடைப்பிடிப்பதில்லை இந்த மதசார்பற்ற கொள்கையை. கொடுமைடா!!!!!!!!!!

அடுத்து மின்சாரம், இங்கே அனைத்து இந்துக்ககளின் பண்டிகைகளுக்கும் இந்த மின்சாரம் 24 மணி நேரத்தை தாண்டியும் போகாது ஆனால் பாருங்க இந்த இஸ்லாமியர்களின் பண்டிகையான இரண்டு பெருநாள் அன்றும் இந்த மின்சாரத்தை இந்த அரசாங்கம் தொலைத்துவிடும். காணாமல் போனவர்கள் பற்றி அறிவிப்பு குடுத்தாலும் கிடைக்காது இவர்களிடத்தில் மதசார்பின்மை.

அடுத்து இந்த அரசியல், எங்கே இஸ்லாமியர்கள் தனி தொகுதி வாங்கி வென்று விடுவார்களோ என்கின்ற பயத்தில், இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள பகுதிகளை தனி தனி தொகுதியாக அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று பிரித்து மிக அழகாக மதசார்பற்ற கொள்கையை வலியுறுத்துகிறார்கள்.

இதை எல்லாம் விட கொடுமை இந்தியாவில் எங்கே எந்த ஒரு மூலையில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தாலும் அடுத்த 5 நிமிடத்தில் என்னமோ இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் மாதிரியே ஒரு பதில் இந்தியா முஜாஹிதீன் அமைப்பு.

ரொம்ப அழகா மதசார்பின்மையை கடைபிடிக்கிறீங்கடா!!!!!!!!!! உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா????????????

கருத்துகள் இல்லை: