OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 14 ஆகஸ்ட், 2013

உட்கார்ந்து யோசிச்சது_14/08/2013

அன்பு வாசக பெருமக்களே, உங்களை மீண்டும் இந்த தலைப்பில் சந்திக்க சந்தோசபடுகிறேன். உலகிலேயே மிகவும் கஷ்டமான விஷயம் அடுத்தவர்களை சிரிக்க வைப்பதுதான். அந்த விஷயத்தை சொந்தமாக செய்தாலும் காப்பி அடித்து செய்தாலும் நன்றே (காப்பி அடித்தேன் என்பதை எப்படி நாசூக்காக சொல்ல வேண்டியுள்ளது)!!!!!!!!!!!!விகடன் வலை பாயுதேவில் ரசித்தது 

"
சைலன்ஸ் ப்ளீஸ் சொல்லாமலே நம்மாளுங்க அமைதியா இருக்கும் ஒரே இடம் லிப்ட் # ஏன்னே புரியலே !
*********
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண " இன்னாபா இப்படி பண்ணிப்புட்டியே " என்று கேட்டு விடல்
*********
உன் நல்லதுக்கு தான் சொல்றேன் என தொடங்குபவர்கள் எல்லாம் ஏனோ கெட்டவர்களாகவே தெரிகிறார்கள்
*********
லிப்டில் கதவு மட்டும் இல்லாட்டி, புட் போர்டு அடிப்பாய்ங்க போல!!!!


சில மொக்கைகள்

1. குழவி கொட்டினா வலிக்கும், தேள் கொட்டினா வலிக்கும் ஆனால் முடி கொட்டினா வலிக்குமா?
2. இன்னைக்கு வைக்கிற மீனு நாளைக்கு கருவாடாகும், ஆனால் இன்னைக்கு வைக்கிற மீன் குழம்பு நாளைக்கு கருவாட்டுக் குழம்பு ஆகுமா????
3. கர்நாடகா தண்ணீரும்கேர்ள்'சின் கண்ணீரும் ஒண்ணுதான்..ரெண்டுமே கொஞ்சமாத்தான் வரும்... ஆனா பல பிரச்சனைய கொண்டு வரும்..

4. படகில் நீங்கள் சென்று கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள். ஒர் இடத்தில் சிக்கிவிடுகிறீர்கள். உங்களைச்சுற்றி சுறாமீன்கள். தப்பிக்க என்ன செய்வீர்கள்?
ரொம்ப சிம்பிள். கற்பனை செய்வதை நிறுத்திவிடுவேன்.5. மாசக் கடைசில பர்ஸும் வெங்காயமும் ஒண்ணுதான். பிரிச்சுப் பாத்தா ஒண்ணுமில்லாததோட கண்ணுல தண்ணியையும் வரவச்சிடுது.!

இதுவும் கடந்து போகும் :- 
சீதை வேடத்தில் நயன்தாரா # போற போக்க பாத்தா
“அனிருத்தும் ஆண்டிரியாவும்” அண்ணன் தங்கச்சியா நடிப்பாங்கன்னு நினைக்கிறேன்.


சந்தானம் ராக்ஸ்:- 
நாடாளுமன்றம் வழக்கம்போல் ஒத்திவைப்பு # விடுப்பா விடுப்பா பூஜை அறைன்னா பத்தி வைக்கிறதும், நாடாளுமன்றம்னா ஒத்தி வைக்கிறதும் சகஜம் தான.

விளையாட வந்தவர்களைத் திருப்பி அனுப்பியது முறையல்ல - மு.கருணாநிதி
# வேணும்ன்னா பஜ்ஜியும் கொஞ்சம் கெட்டி சட்டினியும் வாங்கி தாறேன் அப்படியே அப்பீட் ஆகிக்காங்கோ.


தண்ணி அடிக்க ஒயின்சாப்க்கு போன ஆம்பளயும்,
தண்ணி பிடிக்க குழாயடிக்கு போன பொம்பளயும்
சண்ட போடம வந்ததா சரித்திரமே இல்ல.


நோ லாஜிக்:- 

“விளம்பரம் செய்யாதீர்கள்” என்று சுவர் முழுவதும் விளம்பரம் செய்து வைக்கிறார்கள் நம் மக்கள்.

இப்படி எவ்வளவுதான் மொக்கைகள் இருந்தாலும் வழக்கம் போல ஏதாவது ஒரு செய்தியை சொல்லி முடிப்பதுதான் என்னுடைய ஸ்டைல் :- 


சிந்திக்க வேண்டிய விடயம்...!

1.
ஒரு ஏக்கர் கரும்பு போட்டா - 6,000 ரூபாய்.
2.
ஒரு ஏக்கர் வாழை போட்டா - 9,000 ரூபாய்.
3.
ஒரு ஏக்கர் நெல் போட்டா - 15,000 ரூபாய்.
4.
ஒரு ஏக்கர் பிளாட்டா (PLOTS) போட்டா - 1.6 கோடி ரூபாய்

நானும் நீயும் படித்து விட்டதால் இதில் உள்ள நான்காம் திட்டத்தை தேர்ந்து எடுத்து, கணக்கு போட்டு பட்டா (patta) போடுவோம்...

அவன் படிக்காததாலோ என்னவோ அதில் தன் வியர்வையை போட்டு நமக்கு சோறு போடுகிறான்.

அங்கீகரிக்கப் பட்ட தகவலின் படி வருடத்திற்கு 17500 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது ஆய்வு.

சோறு போடும் விவசாயியை அங்கீகரிக்காத சமூகம், அழிவை நோக்கி செல்வது உறுதி.

டாலருக்காக அடகு வைக்கப் படும் படிப்பும் அறிவும், என்றுமே இவன் வியர்வைக்கு முன் மண்டி இடும்...!

கருத்துகள் இல்லை: