என் அன்பு சகோதர சொந்தங்களே!!
பணதுக்குதான் ரசிகன் – நாம்
உதவிக்குத்தேவை ஒரு நண்பன் (அவன் ஒரு முஸ்லிமா கூட இருக்கலாம்).
நடிகனை நினைத்து உன் நண்பனை இழந்துவிடாதே!
இன்னைக்கு முஸ்லிம் மாதம், நாளைக்கு இந்துமதம், நாளான்னைக்கு கிறிஸ்துவ மாதம் இதுதான் இவர்களின் பொழைப்பு.
எத்தனை பேர் ஒரு முஸ்லிம் நண்பனுக்கு வருத்தம்
தெரிவித்திருக்கிறீர்கள்? இது முஸ்லிமுக்கும் பொருந்தும் பிறர் கஷ்டத்தில் இருக்கும்போது (இது
இஸ்லாத்தின் பண்பு) மற்றும் அனைவருக்கும் பொருந்தும்-நம்மீது தவறு இருப்பின்?
நம்ம கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கி – நாமலே சண்டை போடலாமா?
படம் எத்தனை வேண்டுமென்றாலும் வரும் போகும்? எதர்க்காக ஒரு குறிப்பிட்ட மததினரை மட்டும் காயப்படுத்த வேண்டும். இவர்கள்
கூறும் தீவிரவாதிகள் வேற எந்த மதத்திலேயும் இல்லையா?
ஒரு திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி மற்ற
மாநிலங்களிலும், மற்ற நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் அப்படம் எவ்வளவு நச்சு
கருத்து நிறைந்ததாக இருக்கும். உங்கள் சகோதர மததினருடைய உணர்வுகளுக்கு
மதிப்பளியுங்கள்.
சிலர் கூறுகின்றனர் படத்தை பார்க்காமலேயே ஏன் எதிர்க்கிறீர்கள்
என்று? விஷம் என்று தெரிந்துகொண்டு குடித்து பார்த்துத்தான் தூக்கி போடுவேன்
என்பதில் எந்த அறிவும் இல்லை. தமிழக திரைப்பட வரலாற்றில் தொடர்ந்து ஒரு சிறுபான்மை
இனம் கடுமையாக தாக்கப்படு, கேவலபடுத்தப்பட்டு வரும் போக்கின் உச்சக்கட்டம்தான் இந்த விஸ்வரூபம். இன்னும்
சிலர் கேட்கிறார்கள் இது வரை இந்த மாதிரி படமே வரவில்லையா அப்பவெல்லாம் சும்மா
இருந்துட்டு இப்ப மட்டும் என்ன?
அப்படியில்லை, சமீபத்தில் டெல்லியில்
நடந்த கொடூரமான கற்பழிப்பு சம்பவத்தை ஒட்டி கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன, ஏன் இதற்க்கு மட்டும் இவ்வளவு போராட்டம், இதுவரை இந்தியாவில்
கர்ப்ழிப்பே நடக்கவில்லையா என்று கேட்பது போன்றுதான் உள்ளது. அன்று நடந்த
போராட்டம் இதுவரை நடந்தேறிய அனைத்து கற்பழிப்புக்கும் சேர்த்து மக்கள்
கொந்தளிதாதன் விளைவே அது. அதே போல தான் இந்த விஸ்வரூபம், பொறுத்து பொறுத்து பொங்கி எழுந்துள்ளோம். புரிந்துகொள்ளவும்.
வெறும் பக்ரீத் பண்டிகையில் முஸ்லிகளிடம் பிரியாணி வாங்கி
சாப்பிடுவதிலும் வாழ்த்து சொல்வதிலும் மட்டும் இல்லை மதநல்லிணக்கம், அவர்களின் பாயும் அநியாயமான, நேர்மையற்ற தாக்குதல்களை தட்டி
கேட்பதும் தான் உண்மையான சகோதராதுவம், அதர்க்காக உங்களை அடி
உடை வாங்க சொல்லவில்லை, அதற்க்கு நாங்கள் இருக்கின்றோம், நேர்மையாக உள்ள
குமுறல்களை புரிந்தவர்களாக நீங்கள் செய்யவேண்டியது ஒரு சில நிமிடங்கள் சிலவு
செய்து உங்கள் முக புத்தகத்தில் “I AM STRONGLY AGAINST VISHVARUBAM AS ITS
BADLY HURTS MY MUSLIM BROTHERS FEELINGS” என்று பதிவிடுங்கள்
நாங்கள் உங்களை போலவே கௌரவத்துடனும் சகோதராதுவதுடனும் வாழவேண்டும் என்பதுதான்.
அவ்வாறே வாழ்ந்தும் வருகிறோம். அதில் எந்த விட சந்தேகமும் இல்லை. ஆனால் இது போன்ற கேவலமான படங்களினால் தமிழ்நாட்டில் பல கசப்பான
நிகழ்வுகளுக்கு பிறகு மீண்டும் தலைத்தோங்கிய சகோதர்த்துவம் செத்துவிடுமோ என்று
இஸ்லாமியர்களாகிய நாங்கள் அஞ்சுகிறோம்.
இதுவரை என்னுடைய நட்பு வட்டாரத்தில் உள்ள எனக்கு தெரிந்த
நேர்மையாக சிந்திக்கும், பிரச்சனைகளை அறிவுபூர்வமாக அணுகும் மாற்று மாத நண்பர்கள், இவ்விசாயத்தில் சமூக அக்கறை இல்லாமல் இதுவரை மௌனம் காப்பதுதான் மனதிர்க்கு
வேதனையாக இருக்கின்றது.
சற்று நேரம் எங்கள் பக்கம் இருந்து புரிந்து கொள்ள
முயலுங்கள். காயப்பட்டுக்கிடக்கும் ஒரு சமூகத்தை இப்படி அன்னியபடுத்தாதீர்கள், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வக்கிரங்களை ஆதரிக்காதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக