OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 10 நவம்பர், 2013

பிரிவுகளும், இழப்புகளும்.


இந்த உலகில் ஒவ்வொரு நொடியும் ஒரு உயிரிழப்பு நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது அது நம்ம படைத்த இறைவனின் நாட்டப்படி. இன்னும் சொல்லப்போனால் மக்கள் கூட்டம் கூட்டமாகவும் உயிரிழக்கிறார்கள் கொல்லபடுகிறார்கள். ஆனால் நான் இங்கு சொல்ல வருவது ஒவ்வொரு தனிமனிதனும் நினைக்கின்ற பிரிவுகளும், இழப்புகளை பற்றிதான்.

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் எதையும் இழக்காமல் அதையும் பெற முடியாது என்பதே மறுக்க முடியாத உண்மை. இருந்தாலும் பெரும்பான்மையான (90%) மனிதர்களுக்கு அந்த இழப்பானது அல்லது பிரிவானது அவர்களின் மனதை விட்டு அவ்வளவு சீக்கிரம் போகாது. எல்லாமே இறைவனின் நாட்டப்படிதான் நடக்கின்றது என்று சொல்லிக்கொண்டாலும் மனம் வேதனை அடைவது என்னவோ உண்மை.

பொதுவாக எடுத்துக்கொள்வோம் சிறிய விசயத்திர்க்கு கூட நொந்துக்கொள்வோம், உதாரணமாக சாப்பாடு விஷயத்தில், ஆடைகள் விஷயத்தில், சில பேர் அழகான மனைவி அமையவில்லை, பரீச்சையில் தோல்வி,வெற்றி அடைந்தவன் மார்க் குறைவு, காதல் தோல்வி, வியாபார தோல்வி இப்படி பல, பிரிவுகள் என்று பார்த்தால் குடும்பத்தாரை விட்டு வெளிநாட்டுக்கு வேற வழியின்றி பிரிவது இப்படி ஏகப்பட்ட பிரிவுகள்.

இன்று நம்மில் பலபேர் சாப்பாட்டில் குறை சொல்லாமல் சாபிட்டதாக சரித்திரம் கிடையாது, அதே சமயம் நமக்கு அந்த சாபாடாவது கிடைக்கிறதே என்று யாரும் நினைக்க மாட்டேண்கிறோம், சற்று சிந்தித்து பாருங்கள் சோமாலியா போன்ற நாடுகளில் மக்கள் நாம் குறைக்கூறி சாப்பிடும் சாப்பாடு கூட கிடைக்காமல் மாட்டு சாணத்தை திங்க கூடிய காட்சியை பார்க்கிறோம், பரீச்சையில் தோல்வி என்றதும் சில முட்டாள்கள் தூக்கில் தொங்குகின்றனர் வெற்றி அடைந்தவனுக்கும் உனக்கும் ஒன்றும் வித்தியாசமில்லை, அவன் இன்று நீ நாளை அவ்வளவுதான், அதே வெற்றிபெற்றவனுக்கு இன்னும் ஒரு படி கவலை என்னடா மார்க் இவ்வளவு குறைவாக இருக்கே என்று மனிதன் எதை கொண்டும் திருப்தி அடைவதில்லை. காதல் தோல்வி சொல்லவே தேவை இல்லை.


உண்மையான பிரிவும், இழப்பும் நாம் நேசிக்கும் ஒன்றை பிரிவதும் இழப்பதும்தான். இதுல இழப்பை விட பிரிவுதான் ரொம்ப கொடுமை, ஒன்றை இழந்தால் அது சிறிது காலத்தில் மறைந்து விடும், ஆனால் பிரிவு சும்மா புற்றுநோய் மாதிரி நம்ம கூட இருந்தே நம்மை அழித்திடும், உதாரணம் குடும்பத்தையே பிரிந்து வெளிநாடுகளில் வாழும் மனிதர்கள், கைக்கு எட்டாது என்று தெரிந்தும் ஸ்கைப்பில் குடும்பம் நடத்தும் குற்றவாளிகள் ஆனால் குடும்பத்தையே பிரிந்தது அவர்கள் செய்த குற்றமில்லை!!!.

பிரிவு என்பது நிரந்தரம் கிடையாதுதான் ஆனால் ஒரு சில பிரிவிகள் நிரந்தரம்தான் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது தான் ஆசைப்பட்ட பெண் அவள் தன் வாழ்வில் இருந்தால் இன்னும் நல்ல இருந்திருக்குமே என்று எண்ணக்கூடிய ஒருத்தி கிடக்காமல் போனால் அந்த பிரிவு என்றுமே நிரந்தரம்தான். அந்த பழகிய நாட்களை நினைக்கும் பொது சில சமயம் சந்தோஷமாக இருந்தாலும் அந்த நாட்கள் அமையாமல் போய்விட்டன என்கின்ற ஏக்கம்தான் அதிகமே தவிர வேறொன்றுமில்லை. அது ஏன் இந்த மனிதர்கள் தான் ஆசைப்பட்ட பெண் கிடைக்காமல் போனால் மட்டும் ரொம்ப வேதனை அடைகிறார்கள்???? ஆனால் நிறைய பேர் வேதனை மனதோடு புதைதுவிடுவார்கள், இன்னும் சில பேர் புதைக்கபடுகிறார்கள் தற்கொலையால்!!!!!!!!!!!!!!   

ஆனால் இந்த உலகில் எந்த ஒரு இழப்பும் சரி பிரிவும் அடுத்தவர்களுக்கு நடக்கும் வரை செய்திதான் தனக்கு நடந்தாதான் அது முக்கிய செய்தியாக மாறுகிறது. எல்லோருடைய வாழ்க்கையிலும் சில இழப்புகள் இருக்கத்தான் செய்கிறது என்ன செய்வது அதுதான் நம்மை படைத்தவனின் சோதனை அந்த சோதனைகளை தாண்டி வெற்றி பெறத்தான் இந்த உலகம் வாழ்க்கை.

உண்மை என்னவென்றால் இழப்பை தாண்டியும் ஒரு வாழ்க்கை நமக்கு இருக்கின்றது.

இறைவன் எந்த ஒரு உயிரையும் சக்திக்கு மீறி சோதிப்பதில்லை. இறைவன் மீது நம்பிக்கை வைப்போம். 

கருத்துகள் இல்லை: