இன்று முஸ்லீம்களை வேரோடு அழிக்க நினைக்கும் யாருமே அவர்களுக்கே உரித்தான இந்த பிரியாணியை கண்டால் வியர்க்க வியர்க்க தின்பதை பார்க்கிறோம், இதில் அவாளும் அடங்குவார்கள்..!!! சரி இந்தே பிரியாணியின் பிறப்பிடம் எதுவென்று நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும்??
பிரியாணி என்பது அரிசி, மசாலாப்
பொருட்களுடன் முட்டை, ஆடு, கோழி, மீன் அல்லது காய்கறிகள் சேர்த்து
சமைக்கும் உணவை குறிக்கும். பொதுவாக, பிரியாணி செய்ய பாசுமதி
அரிசியைப் பயன்படுத்துவார்கள். பிரியாணி என்னும் சொல் வறுத்த என்ற
பொருள் தரும் bery(பெ) (بریان) என்னும் பாரசீகச் சொல்லில் இருந்து
வந்தது.
பிரியாணி சமைக்கும் முறை
பாரசீகத்தில் தோன்றி அந்நாட்டு வணிகர்கள், உலகம் சுற்றுவோர்
மூலம் தெற்காசியாவுக்கு வந்தது.
இன்று நாம் பிரியாணியைச் சமைக்கும் முறை இந்தியாவிலேயே உருவானது. தெற்காசியாவில் மட்டுமல்லாது, தென் கிழக்கு ஆசியாவிலும் அரபு நாடுகளிலும் மேலை நாடுகளில்
வாழும் புலம்பெயர்ந்த தெற்காசியர்களும் பிரியாணியின் உள்ளூர் வகைகளை விரும்பி உண்கிறார்கள்.
இதை தயாரிக்க தேவையான பொருள்கள்:-
நெய், ஜாதிக்காய்,
மின், மிளகு, கிராம்பு, ஏலக்காய், கறுவா, பட்டை இலைகள், கொத்தமல்லி, புதினா இலைகள், இஞ்சி, வெங்காயம், மற்றும் பூண்டுஎன்பன பிரியாணியில் பயன்படுத்தப்படும் சில நறுமணப்
பொருள்களும் தாளிதப் பொருள்களும் ஆகும். உயர்ந்த வகைகளில் குங்குமப்பூவும் சேர்க்கப்படும். சிலர் நறுமணப் பொருட்களை
ஒரு துணியில் முடிந்து பிரியாணி வேகும்போது போட்டுவைத்துவிட்டு, சாறு இறங்கியதும் எடுத்துவிடுகிறார்கள். அசைவ பிரியாணிகளில்
இந்த நறுமணப் பொருட்களுடன் முதன்மை சேர்பொருளாக இறைச்சி—மாட்டிறைச்சி, கோழிக் கறி,ஆட்டு இறைச்சி, மீன் அல்லது இறால் இருக்கும். பிரியாணியுடன் தயிர் பச்சடி(இது
ராய்த்தா(கன்னடம்) எனவும் வழங்கப்படுகிறது.), குருமா, கறிகள்,சாலட், சுட்ட கத்தரித் துவையல் அல்லது அவித்த முட்டை ஆகியனவும் துணை உணவாகத் தரப்படும்.
நறுமணமிக்க
பாசுமதி அரிசியைத் தனியாக வேகவிட்டு இறைச்சி அல்லது தாவரக் கறிகள் தனியாக
சமைக்கப்பட்டு இரண்டையும் ஒன்றன் மேல் ஒன்றாக விரவிப் பரிமாறுவது பிரியாணித்
தயாரிப்பின் தனித்தன்மையாகும். உண்பவர் நறுமணமுள்ள சோறு, அடுத்து சுவையூட்டப்பட்ட கறிகள் என மாறி மாறி உண்பதில் இன்பம்
பெறுகிறார்.
பிரியாணியின் வகைகள்:-
இந்திய வகைகள்
ஆம்பூர் பிரியாணி
ஐதராபாத் பிரியாணி
தலைப்பாக்கட்டி பிரியாணி
திண்டுக்கல் பிரியாணி
சங்கரன்கோவில் பிரியாணி
பட்கல்
பிரியாணி
கச்சி பிரியாணி
இலக்னோவி (அவத்) பிரியாணி
கொல்கத்தா பிரியாணி
தலைச்சேரி அல்லது கண்ணூர் பிரியாணி
ஏனைய நாடுகளில்
சிந்தி பிரியாணி
மெமோனி பிரியாணி
தஹரி
பர்மிய பிரியாணி
தாய்லாந்து பிரியாணி
இலங்கை பிரியாணி
ஈரானிய பிரியாணி
மத்திய கிழக்கில் பிரியாணி
மலேசியாவில் நாசி பெரியாணி
சிங்கப்பூர்
பிலிப்பைனில்
மொரீசியசு பிரியாணி
நாசி கெபூலி
பொதுவான வகைகளாக
மட்டன் பிரியாணி
சிக்கன் பிரியாணி
இறால் பிரியாணி
மீன் பிரியாணி
தால் பிரியாணி
வெஜிடபிள் பிரியாணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக