OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

நாம் உண்மையாக இருக்கோமா??



இன்று உலகில் உள்ள எவரும் சொல்ல முடியாது நான் பொய்யே சொன்னதில்லை என்று!!!!!!!!!! இன்று ஒவ்வொரு வாழ்க்கையிலும் இந்த பொய்யானது ஒரு அத்தியாவசிய பொருள் ஆகிவிட்டது. பொய் சொல்லாமல் வாழவே முடியாது என்ற நிலையில்தான் இருக்கிறான் மனிதன்.

ஏன் நம்மால் பொய் சொல்லாமல் இருக்கவே முடியாதா?? கண்டிப்பாக முடியாது...!!! ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நம்மை அறியாமலே சொல்லிவிடுவோம். இந்த பொய் சொல்லும் பழக்கம் நம்முடைய குழந்தைப்பருவத்தில் இருந்தே நமக்கு நிலாச்சோருடன் ஊட்டப்படுகின்றது ஆம் அன்று நம் அன்னை நிலாவைக்காட்டி அதில் பாட்டி வடைசுடுகிறாள் பார் என்று பொய்ய்யான ஒன்றை சொல்லித்தான் நமக்கு சோத்துடன் சேர்த்து பொய்யும் ஊட்டப்படுகிறது…!!!!!

இந்த பொய் எப்படியெல்லாம் சொல்லப்படுகின்றது என்று பார்த்தால், பள்ளியில் வாத்தியாரிடம், பெற்றோர்கள் பிள்ளைகளிடம், பிள்ளைகள் பெற்றோரிடம் கணவன் மனைவியிடம், மனைவி கணவனிடம், நண்பர்கள் மத்தியில் என்று எந்த ஒரு பாராப்சமுமின்றி சொல்லப்படுகின்றது..!!!!!!!!!! இதில் 90% சதவிகித பொய்கள் பெரும்பாலும் சின்ன சின்ன விசயங்களுக்கு மட்டுமே சொல்லப்படுகின்றன. அதுவும் இந்த மொபைல் டெக்னாலஜி வந்த பிறகு முகம்தெரியாது என்பதால் இந்த விளையாட்டுப்பொய்கள் இன்னும் அதிகமாகிவிட்டன...!!!!!!!!!!!!!!

இப்படி நாம் சொல்லும் பொய்களானது மூன்றாவது நபர்கள் வேண்டுமென்றால் கண்டுக்காம இருந்துவிடுவார்கள், ஆனால் உங்களையே ரொம்ப நேசிக்கும் ஒருத்தரிடம் நீங்கள் விளையாட்டாய் சொல்லும் இந்த பொய்யானது அது ஒரு வகையில் நீங்கள் உங்களை நம்பியவருக்கு செய்யும் நம்பிக்கை துரோகம்...!!!!!!!!!!! எதிரியை கூட மன்னிக்கலாம் ஆனால் துரோகியை மன்னிக்க கூடாது என்று பேச்சு பழக்கத்தில் உண்டு....!!!!!!!!!!!! அந்த மாதிரி ஒரு நிலை நமக்கும் நாம் உயிராய் நேசிக்கும் உறவுக்கும் வர வேண்டுமா?????

நேசிப்பவருக்கும் நெருக்கமாய் இருப்பவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு, ஆனால் நெருக்கமாய் நேசிப்பவர்களை வெறுக்காமல் இருக்க இந்த விளையாட்டாய் சொல்லும் பொய்களை தவிர்ப்போமே!!!!!!!!!!!!!

பொய்ய்யான இந்த உலகவாழ்வில் உண்மையாக வாழ்வோமே!!!!!!!!!

1 கருத்து:

சேக்காளி சொன்னது…

பொய்தான சொல்றீங்க