இன்றைய நாளில் உலகின் ஹாட் டாபிக் இந்த அங்கோலாதான்!!!!!!! ஆனால் அதில் எந்த அளவிர்க்கு உண்மை என்பதை கொஞ்சும் அலசுவோம் அந்த நாட்டின் அமெரிக்க தூதரின் வாயிலாக ..!!!!!!!!!!!!!!
வாசிங்க்டன் D.C உள்ள அங்கோலாவின் தூதரக அதிகாரி ஒருவர் தொலைபேசி வாயிலாக தெரிவித்த செய்தி என்னவென்றால்,அங்கோலாவில் இஸ்லாத்திற்கு மட்டுமல்ல எந்த ஒரு மதத்திற்கும் தடை இல்லை, இஸ்லாத்திற்கு தடை என்ற செய்தி வெறும் வதந்தி தான் என்றார்.அங்கோலா எந்த ஒரு மதத்தின் விசயங்களுக்கும் உள் நுழையாது.எங்களது நாட்டில் காதொலிக்,பாப்டிஸ்ட்,ப்ரோடோஸ்டேன்ட், முஸ்லிம் என்று பல மதத்தவர்களும் இங்கு வாழ்கிறார்கள்.எங்கள் நாடு அணைத்து மதத்தவர்களுக்கும் சுதந்திர நாடு என்று தெரிவித்து இருந்தார் என்று International Business Times மேற்கோள் காட்டியுள்ளது.
மேலும் இது சம்பந்தமாக இவர்கள் வெளியிடும் புகைபடங்கள் எல்லாம் உண்மைதான் ஆனால் இவர்கள் நினைப்பது போன்று தற்பொழுது எடுத்தது அல்ல மாறாக அது எல்லாம் 2008 ஆம் ஆண்டு எடுத்தது!!!!!!!!!!!! (International Business Times)..
ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்; உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்;இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்”.
அல் குர்ஆன் :2:217
தான் காதில் கேட்டதை எல்லாம் உண்மை எது பொய் எது என்று அறியும் முன்னரே பரப்புபவர்களை பொய்யர்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறியுள்ளதை கூட நம் சகோதரர்கள் அறியவில்லையா?அல்லது அறிந்தும் அறியாததுபோல உள்ளார்களா??????
இஸ்லாத்திற்கு எதிராக எந்த செய்தி வந்தாலும் முதலில் பரப்புபவர்கள் நம் இஸ்லாமிய சகோதரர்களாக தன உள்ளார்கள்...என்று இவர்கள் திருந்துவார்களோ!!!!!!
இதில் கொடுமை என்னவென்றால் தௌஹீத் கொள்கையில் உள்ளவர்களும் இதை பரப்பியுள்ளார்கள்!!!!!!!!!!!!!
குறிப்பு:- இதை நான் சில ஆதரத்துடன் எழுதியுள்ளேன் இதில் அந்த அங்கோலா தூதர் பொய்யுரைத்திருந்தால் அதை அல்லாஹ் பார்த்துக்கொள்வான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக