OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 16 டிசம்பர், 2013

இட ஒதுக்கீடும், இஸ்லாமியர் பொறுப்பும் - மீள் பதிவு

இட ஒதுக்கீடும், இஸ்லாமியர் பொறுப்பும்.



இந்த கட்டுரை இனிய திசைகள் என்கின்ற மாத இதழில் வெளிவந்தது, உங்கள் பார்வைக்காக!!!! இஸ்லாமியகள் இட ஒதுதுக்கீடு என்றதும், பலபேர் பலவிதமாக பேசுவார்கள் ஆனால் இந்த கட்டுரை எழுதியவர் மிகவும் சரியான கருத்துக்களை அலசி ஆராய்ந்து கூறியுள்ளார் என்றே தோன்றுகிறது.ஏன் முஸ்லிம்களிலேயே சில பேர் இது தேவையில்லை என்ற ஒரு கருத்தை பரப்பி வருகிறார்கள், அவர்களுக்கு ஒன்று புரியவில்லை, இந்தியாவில் இடஒதுக்கீடு இல்லாமல் ஒரு சமுதாயம் முன்னுக்கு வராது என்று!!!!!



யூதர்களை பற்றி சிறு குறிப்பு:-



இன்று உலகில் இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மக்கா, மதீனாவிர்க்கு முஸ்லீம்கள் மட்டுமே நுழைவதுர்க்கு அனுமதியுண்டு. பிற மதத்தவர் குறிப்பிட்ட எல்லைக்குள் நுழைய முடியாது. ஆனால் யூதர்களின் மறைமுக நுழைவு இவ்விரு நகரங்களுள் உள்ளதெனில் எவராலும் ஜீரணிக்க முடியாது. இவ்விரு நகரங்களிலுள்ள ஸ்டார் அந்தஸ்து பெற்ற பெரிய ஹோட்டல்கள் அரபியருக்கு சொந்தமானவை, ஆனால் அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பைத் தாங்களே மேற்கொள்ளாமல் அரபியர், அமெரிக்க யூத நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ஒரு பெரும்தோகை என பெற்றுக்கொண்டு விட்டுவிடுகிறார்கள். அந்த அமெரிக்க யூதர்கள் தங்களுடைய நிறுவனங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கும் முஸ்லிம்களைக் கொண்டு இந்த ஓட்டல்களை நிவகித்துக்கொண்டிருக்கிறார்கள். ஓட்டல்களில் தங்கும் முஸ்லிம்களின் பணம் யூதர்களுக்கு மிகுந்த லாபமாகச்சென்று கொண்டிருக்கிறது. இவ்விரு நகரங்களுக்குள் யூதர்களின் மறைமுக நுழைவும், முஸ்லிகளிடமே இருந்து பெரும் லாபம் சம்பாதித்துக்கொண்டிருக்கும் திறனும் இப்போது புரிகிறதா!!
அமெரிக்க நாட்டில் மூன்று விழுக்காட்டிற்க்கும் குறைவான எண்ணிக்கையிலுள்ள யூதர்கள் தங்களது அறிவுத்திறனால் உலகையே ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.தகவல்தொடர்புத்துறையில் முக்கியமான செய்தி நிறுவனங்கள், வணிகத்துறையில் உலகளாவிய முக்கிய வணிக நிறுவனங்கள் முதலானவை யூதர்களுக்கே சொந்தமானவை. உலக அரசியலையே ஆட்டிப்படைதிடும் அமெரிக்க அரசையே ஆட்டிப்படைப்பவர்கள் யூதர்கள் என்றாள் அது மிகையாகாது. சிறுபான்மைச்சமூகம் தனது அறிவுக்கூர்மைக்கொண்டு அகில உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது.


இனி முஸ்லீம்கள் பற்றி:-



ஒரு சமுதாயம் எழுச்சியுர வேண்டுமெனில் அதற்க்கு அடிபடையாக அமைவது கல்வியே ஆகும். 57 முஸ்லிம் நாடுகளில் உள்ள பல்கலைக்கழங்களின் எண்ணிக்கை சுமார் 500 ஆகும். ஆனால் உலகளாவிய நிலையில் தரமுள்ள பல்கழைகழகங்களாக தேர்ந்தெடுப்பட்டுள்ள முதல் 500 பல்கழைகலங்களில் ஒன்று கூட முஸ்லிம்களுடையது இல்லை என்பது வெட்கத்திர்க்கும், வேதனைக்குமுரிய செய்தியாகும்.
கிருத்துவ நாடுகளில் படித்தவர்களின் விழுக்காடு 90 ஆகும்அதே சமயம் முஸ்லிம் நாடுகளில் படித்தவர்களின் விழுக்காடு 40 ஆகும். கிருத்தவர்கள் அதிகமாக வாழும் 15 நாடுகளில் படித்தவர்கள் விழுக்காடு 100 ஆகும். அதேசமயம் 100 விழுக்காடு படித்தவர்கள் உள்ள ஒரு முஸ்லிம் நாடுகூட இல்லை என்பது மிகவும் கேவலமான செய்தியாகும்.


உலக அளவில்தான் முஸ்லிம்களின் கல்விநிலை இப்படி என்றால், சரி நாம் இந்தியாவில் பார்போம்:-
கல்விநிலை:-


இந்தியாவிலும் அதே நிலைதான், இந்தியச்சிறுபான்மை இனத்தவர்களாகிய ஜெயின் மக்களில் எழுத படிக்க தெரிந்தோர் 94.1 விழுக்காடு, எழுத படிக்க தெரிந்த கிருத்துவர்கள் 80.3 விழுக்காடு, ஆனால் முஸ்லீம்கள் வெறும் 59.1 விழுக்காடு மட்டுமே.
இந்திய முஸ்லிம் குழந்தைகளில் ஏறக்குறைய 35 விழுக்காட்டினார் பள்ளிக்கூடம் பக்கமே செல்லாத நிலை இன்னுமும் நீடிக்கின்றது. பள்ளிக்கூடங்களில் சேரும் சகோதர சமுதாய குழந்தைகள் 100 விழுக்காடும் பள்ளிப்படிப்பை முடித்தே வருகின்றனர். ஆனால் பள்ளியில் சேரும் முஸ்லிம் குழந்தைகள் 44 விழுக்காட்டினாரே பள்ளிப்படிப்பை முடிக்கின்றார்கள். மீதி பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். கிராமப்புற முஸ்லிம்களுக்குள் பட்டபடிப்பை பயின்றோர் எண்ணிக்கை 0.8 விழுக்காடு, நகர்புரத்தில் 3.1 விழுக்காடு, மேற்பட்டபடிப்பை முடித்தோர் எண்ணிக்கை 1.2 ஆகும், இந்திய அளவில் முஸ்லிம் பட்டதாரிகள் எண்ணிக்கை 3.6 விழுக்காடே ஆகும்.


பொருளாதார நிலை:-


பொருளாதார நிலையில் இந்திய கிராமப்புற முஸ்லிம்களுக்குள் 64.9 விழுக்காடு பேர் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாடிக்கொண்டிருக்கிறார்கள். 45 விழுக்காடு நகர்புற முஸ்லீம்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாடிக்கொண்டிருக்கிறார்கள், இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள், கிராமங்களில் உள்ள விவசாயத்தை நம்பியே உணவு உற்பத்தி இருந்து வரும் சூழல்; விவசாயத்துறையிலாவது விற்பன்னர்களாக முஸ்லீம்கள் இருக்கின்றார்களா என்றால் அதிலும் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
இந்தியாவில் ஏறக்குறைய 2 கோடி விவசாயிகள் சொந்தமாக டிராக்டர்கள் வைத்துள்ளனர்,அதில் சொந்த டிராக்டர் வைத்துள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையோ 2.1 விழுக்காடேயாகும். இதிலும் முஸ்லிம்களின் நிலை பாவமாகதான் உள்ளது. மிகப்பெரும் இந்தியத்தொழில் நிறுவனங்களுக்குள் முஸ்லிம் நிறுவனங்கள் ஒரு கை விரலுக்கும் குறைந்த எண்ணிக்கை எனில் இந்திய முஸ்லிம்களின் பொருளாதார நிலை எப்படி என்று உணரலாம்.

மதிய மற்றும் மாநில அரசு துறை:-

இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 22 முதல் 25 விழுக்காடாகும்;தமிழக முஸ்லீம்கள் 13 முதல் 15 விழுக்காடாகும் நமது கணிப்பு. அரசின் புள்ளி விவரங்கள் முறையே 16.25 என்றும் 6.25 என்றும் கூறுகின்றன. சமீபத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இவை மேலும் குறைந்து கானபடுகின்றன. இந்தியநாடாளமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகும், 10 விழுக்காடு என்று அடிமட்டக் கணக்கு வைத்துக்கொண்டாலும், 54 முஸ்லிம் எம்பிக்கள் இருக்க வேண்டும், காங்கிரஸ்-11, முஸ்லில்ம் லீக்-3, ஜம்மு & காஷ்மீர் தேசியவாத காங்கிரஸ்-3, பகுஜன் சமாஜ் கட்சி-4,திரிணாமுல் காங்கிரஸ்-3, ஆந்திரா மஜ்லிஸ் முஸ்லிமீன்-1, அசாம் ஒருகினைந்த குடியரசு அணி-1, இடது கம்நியூஸ்ட்டு-1, ஜனதாதளம்-1, பிஜேபி-1, ஜம்மு-காஷ்மீர் ஸூயேட்சை-1 ஆக முஸ்லிம் 30 எம்பிக்களே உள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். தமிழகத்தில் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் 6 விழுக்காடு என்று கணக்கு வைத்தாலும் 14 முஸ்லீம்கள் இருக்க வேண்டும் ஆனால் இன்று இருப்பதோ 5 சட்டமன்ற உறுப்பினர்களே ஆவார். ஆக அரசியல் ரீதியாக முஸ்லிம்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது.


ஜனநாயக தூண்களுள் ஒன்றாக கருதப்படும் ஊடகத் துறையில் தமிழகத்தில் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் ஆசிரியர், துணையாசிரியர், உரிமையாளர் போன்ற நிலைகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஏறகுறைய 3 விழுக்காடே ஆகும். அதே சமயம் 3 விழுக்காட்டிர்க்கும் குறைவாக உள்ள ஒரு குறிப்பிட்ட சகோதர சமுதாயத்தவர்கள் ஊடக துறையில் 72 விழுக்காடு உள்ளனர். உயர் சாதியினராக கருதப்படும் சகோதர சமுதாயத்தவர் 13 விழுக்காடு உள்ளனர். தமிழக அளவிலோ,இந்தியா அளவிலோ ஊடகத்துறைக்கு செய்திகளை வழங்கும் எந்தவொரு பெரிய நிறுவனமும் முஸ்லிம்களின் கையில் இல்லை.
இந்திய ஆட்சித்துறைப் (..எஸ்) பணியில் 1990 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் மத்திய தேர்வாணையமூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்அதிகாரிகளின் எண்ணிக்கை 1609 ஆகும். இதில் 9 பெண்கள் உள்பட முஸ்லிம்களின் எண்ணிக்கை 47 ஆகும், அதாவது 2.92 விழுக்காடே ஆகும். அகில இந்த்திய அளவில் இன்றைக்கும் யூனியன் பிரதேசங்கள் உள்பட அனைத்து மாநிலங்களிலுள்ள ஐ.ஏ.எஸ் அந்தஸ்தில் பணியாற்றி கொண்டிருப்போர் எண்ணிக்கை 4456 ஆகும். இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 132 அதாவது 2.96 விழுக்காகும். இந்திய அளவில் தலைமை செயலாளர் என்ற அந்தஸ்தில் ஒரு முஸ்லிம்கூட, 01.08.2010 ஆண்டு எடுத்த கணக்கின்படி இல்லையென்பது மிக மிக கேவலமான ஒன்று.


இந்திய அயலக பணிக்காக (ஐ.எஃப்.எஸ்) 2002 முதல் 2010 வரை 9 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 407 பேரில் 9 பேர் மட்டுமே முஸ்லீம்கள்; இது 2.2 விழுக்காடாகும். மத்திய தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி) மூலம் 2001 முதல் 2010 வரை 10 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ், ஐ.எஃப்,எஸ் மற்றும் குருப் ஏ மணியிடங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டோர் எண்ணிக்கை 3240 ஆகும், இதில் முஸ்லீம்கள் 170 பேர் அதாவது 3.2 விழுக்காடாகும், இந்திய ரிசர்வ் வங்கி உள்பட வங்கிப்பணிகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 2.2 விழுக்காடாகும். மத்தியத்தேர்வாணயம் மூலம் இந்திய மிலிட்டரி அகாடெமிக்கு 2011 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 242 பேரில் 2 பேரே முஸ்லீம்கள்,அதாவது 0.8 விழுக்காடே ஆகும். அதே போல் ஒருங்கிணைத பாதுகாப்பு பணிக்காக தேர்ந்தெடுக்கபட்ட 579 பேரில் 3 பேரே முஸ்லீம்கள் அதாவது 0.5 விழுக்காடே ஆகும்.

த்திய அரசின் ஆறாம் மத்திய சம்பளக்குழுவின் பரிந்துரைபடி உயர்பதவி வகிக்கும் அதிகார்களின் அடிப்படைச்சம்பளம் ரூபாய் 80,000 என் நிர்ணயிக்கப்பட்டது. அடிப்படை சம்பளம் 80,000 பெரும் அதிகாரிகளின் எண்ணிக்கை 208, இதில் முஸ்லீம்கள் வெறும் 4 பேர் மட்டுமே. அதாவது 1.92 விழுக்காடாகும். மத்திய அரசுச்செயலாளர்களாக பணிபுரியும் ஐ..எஸ் அதிகாரிகள் 78 பேர்கள். அவர்களுள் ஒருவர் மட்டுமே முஸ்லிம். அதாவது 1.28 விழுக்காடு ஆகும்.



மேலே கூறிய புள்ளி விபரங்களிலிருது முஸ்லீம்கள் யென் இடஒதுக்கீட்டை இன்னமும்கேட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது புரியக்கூடும்  முஸ்லீம்கள் முன்பைக்காட்டிலும் வளர்ச்சி பெற்றுவிட்டார்கள்; ஒருங்கிணைந்த இதியாவில் முஸ்லீம்கள் மட்டும் எதர்க்காக தனி இடஒதுக்கீடு?”  என்றெல்லாம் உண்மை உணராது உள்ள நிலை அறியாது – வாதாடுபவர்கள் இவைகளை புரிந்துகொள்ள வேண்டும். மேலும் முஸ்லிம் சமுதாயம் முன்பைக்காட்டிலும் முழுவீச்சாக ஒன்றுப்பட்டு இந்திய அளவில் குறைந்த பட்ச 10 விழுக்காடு, தமிழக அளவில் 7 விழுக்காடு தனி இடஒதுக்கீடு பெறத்தளராது முனைந்து செயலாற்றிட வேண்டும்.

தனி இடஒதுக்கீட்டுக்கோரிக்கையை முன்வைத்து வீரியதோடும் விவேகத்தோடும்போராடுகிற அதே சமயம் இன்னொரு மாபெரும் பொறுப்பும் முஸ்லிம்களுக்கு உண்டென்பதை ஆழமாக அழுத்தமாக உள்ளத்தில் கொண்டு பணியாற்றிட வேண்டும், அது யாதெனில் முஸ்லீம்கள் தங்களை தாங்களே உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதில் வெற்றி காண வெறிக்கொண்டு செயலாற்ற வேண்டும்.

ஏறக்குறைய விழுக்காடே கொண்ட ஒரு சமுதாயம் உலகை ஆள்கிறது; அதே அளவு விழுக்காடுகொண்ட மற்றொரு சமுதாயம் இந்தியாவைத் தனது ஆதிக்கத்தில்வைத்திருக்கிறது; இந்திய  சிறுபான்மையினருள் பெரும்பான்மையாக விளங்குகிறமுஸ்லீம்கள் அத்தகைய நிலைக்கு உயர இடஒதுகீடு மட்டுமல்ல, தங்களை தாங்களே உயர்த்தி கொள்வதும்தான் உதவ முடியும்.


ஒருபுறம் இடஒதுக்கீட்டிற்காக உரிய வகையில் அறவழிகளில் போராடுவோம், மற்றொரு புறம் நன்மை நாமே உயர்த்திக்கொள்ளத் தகுந்த பாதையில் பயணம் விரைவோம்,

கருத்துகள் இல்லை: