OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

சுதந்திரதின வாழ்த்து கூற நமக்கெல்லாம் வெட்கமா இல்லை?????


இன்று இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபத்துநான்கு ஆண்டுகள் ஆயிற்று, அதனை முன்னிட்டு இன்று எங்கு பார்த்தாலும் ஒரே மாதிரி நிகழ்வுகள், அதே வந்தே மாதரம், அதே இனிப்புகள்............சரி அதை விடுவோம், தீபாவளி, பொங்கல் போன்று அதையும் ஒரு பண்டிகையாக கொண்டாடுகிறார்கள், இன்னும் பலர் வாழ்த்து தெரிவிகிறார்கள்.

உண்மையிலேயே இந்த வாழ்த்து தெரிவிப்பதற்கு நாம் தகுதியானவர்களா? அப்படி நம் இந்தியா சுதந்திரம் அடைந்து என்னத்த சாதித்து விட்டது.......? இந்த நாட்டில் அனைவருக்கு ஒரு வேலை உணவு கிடைக்கின்றதா? பிச்சைகாரர்கள் இல்லாத தெரு உண்டா? சேரி இல்லாத ஊரு உண்டா? அட சுத்தமான ஒரு பொதுகழிப்பிடம்  எங்கேயாவது உண்டா???? என்றாவது கற்பழிப்பு செய்தி வராத நாள் உண்டா? கொலை நடக்காத நாட்கள்தான் உண்டா?இப்படி இன்னும் பல அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் நாம் அடுக்கும் எந்த ஒரு கேள்விக்கும், இங்கே யாராலும் பதில் கூற முடியாது ஏன் என்றால் அதுதான் நாம் கண்ட சுதந்திரம். இன்னும் சொல்ல போனால் இந்த சுதந்திரம் யாரால் கிடைத்தது என்பதில் கூட நமக்குள் சண்டை, அதனால் பல வரலாறுகள் திரிக்க பட்டன, பல வரலாறுகள் மறைக்கப்பட்டன, 

அன்று ஆங்கிலேயனிடம் அடிமையாக இருந்தோம், அதையாவது பொருத்து கொள்ளலாம், ஆனால் இன்று இந்த நாட்டு குடிமகனாகிய நாம் இந்த குடிமகங்களிடமே அடிமையாக இருக்கிறோம், அவன் நம் கண் முன்னே நம்மை திருடினான், அதையாவது ஏற்று கொள்ளலாம், ஆனால் இன்று இந்த அரசியல் (அயோக்கிய) வாதிகள், நம்மை முதுகில் குத்துகிறார்கள், ஒட்டு கேட்க்கும் பொது பேசும் பேச்சை ஓவர் நைட்லே மறந்துடுறான். இங்கு மக்களை சுரண்டி அவன் அவன் சேர்த்த சொத்துக்களின் விபரம் நம் இந்திய நாட்டை விட மிக பெரிதாக நீண்டு கொண்டே போகின்றது, இங்குள்ள ஆறுகளில் அவர்கள் கொள்ளை அடித்த பணத்தை போட்டால் இந்தியாவில் இன்னொரு சுனாமி வருவது நிச்சயம்....... அது மட்டுமா இந்த கொள்ளை காரர்கள் மட்டுமின்றி மதத்தின் பெயரால் சாமியார்கள் செய்யும் அட்டுழியங்களை என்னவென்று சொல்வது...............முடியலை!!!!!!!

தினதோறும் செய்திகளில் வெறும் கற்பழிப்பு, கொலை, கள்ளகாதல், ஊழல், கடத்தல், சிசு கொலை, இதை தவிர வேற என்னவென்று பார்த்தல் விளையாட்டு மற்றும் சினிமா??????????????? இங்கே கண்டிப்பாக இந்த விளையாட்டு சினிமாவை பற்றி சொல்லியே ஆக வேண்டும், 

முதலில் இந்த விளையாட்டை பாப்போம், இங்கே இந்தியாவில் மட்டும்தாங்க, விளையாட்டு என்றால் அது கிரிக்கெட்டை தவிர வேற எதுவுமில்லை,,,,,,,,,,,,,,என்ன கொடுமைடா சாமி.......................???????இதனால் தான் நாம் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் கூட பெற முடியவில்லை, ஏன் ஒரு டென்னிஸ், கால்பந்து எதுக்கும், லாயக்கு இல்லை.................ஏன், இந்த நாட்டில் ஸ்பொன்சர் செய்யும் அமைப்புகள் கிரிக்கெட் தறுதலைகளுக்கு தவிர வேற யாருக்கும், செய்வது கிடையாது, இதில் கொடுமை என்னவென்றால் இந்திய அரசாங்கம் கூட இதற்க்கு ஒரு முயற்சி எடுப்பது இல்லை என்று நினைக்கும் போது..............நாம் பெற்ற சுதந்திரத்தை நினைத்தால் பெருமையாகத்தான் இருக்கிறது.............அப்புறம் இந்த ரசிகர்கள்...............ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை!!!!!!!!!!!!!!!!!!

அப்புறம் இந்த சினிமா? உலகமெங்கும் சினிமா இருக்கிறதுதான், சினிமா காரங்க இருகிறாங்க தான், ஆனா இந்த இந்தியாவில் மட்டும் தான் நடிகைக்கு கோவில் கட்டுவானுங்க, நடிகருக்கு உடம் சரியில்லை என்றால்..............மொட்டை போடுவாங்க..................பாதயாத்திரை போவாங்க..............மூதேவிங்க என்னைக்குதான் திருந்த போகுதுன்னு தெரியலை....................!!!!!!!!!!!

இதையெல்லாம், நான் ஏன் கூறுகிறேன் என்றால், இந்த அரசியல் வாதிகள் நம்மை இந்த சினிமா மோகத்திலும், கிரிக்கெட் மோகத்திலும் திளைக்க வைத்துதான் நம்மை அடிமை படுத்தி வைத்திருகிறார்கள்,.................இதை எல்லாம், எதிர்த்து உண்ணா விரதமிருக்கிறார் ஒரு அறிவு ஜீவி................அவரும் ஒரு காலத்தில் இதே போன்று கொள்ளை அடித்தவர்தான்..................அப்புறம் இங்குள்ள செய்திதாள்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒரு ஊடகம் வைத்து இருகிறார்கள், அதன் மூலம் அவனவன் மாறி மாறி திட்டி கொள்கிறான் கேட்டால் இதற்க்கு பெயர்தான் செய்தியாம்..............அப்புறம் சுதந்திரதினம் வந்து விட்டால் போதும், ,,,,,,,,,,,,,அன்று முழுவதும் சிறப்பு நிகழ்சிகள் அட அது என்னவென்று பார்த்தால் , வெறும் சினிமாகாரர்களின்  பேட்டியும், புது படமும், மற்றும் வெட்டி அரட்டைகளும்தான் இடம் பெரும்.............இதுக்கும் நம் சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது..................இவர்கள் பேட்டிகாணும் இவர்கள் என்ன செய்தார்கள் இந்த சுதந்திரத்துக்காக..........எந்த ஒரு ஊடகமாவது ஒரு சுதந்திர போராட்ட தியாகியின் வாழ்கை வரலாறு என்று எதாவது காண்பித்தது உண்டா................இல்லை இன்று அவர்களின் சந்ததியினர் படும் அவஸ்தைகளை ஆராய்ந்தது உண்டா..................????????????????

இப்படி நமக்குள் பல கேள்விகளை வைத்து கொண்டு...............இன்னும் கொடிஏத்தி வந்தே மாதரம் பாடி இனிப்பு குடுத்து கொண்டே இருந்தால்................கிடைத்து விடுமா இந்த சுதந்திரம்??????????????????????? சிந்திக்கும் மக்களுக்கு இந்த பதிவு!!!!!!!!!!!!!!. பிடித்திருந்தால் மறக்காம ஒட்டு போடுங்க....................உங்கள் கருத்தக்களை வரவேற்கிறேன்........

1 கருத்து:

காந்தி பனங்கூர் சொன்னது…

//வெறும் சினிமாகாரர்களின் பேட்டியும், புது படமும், மற்றும் வெட்டி அரட்டைகளும்தான் இடம் பெரும்.............இதுக்கும் நம் சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம் //இருக்கிறது..................இவர்கள் பேட்டிகாணும் இவர்கள் என்ன செய்தார்கள் இந்த சுதந்திரத்துக்காக..........எந்த ஒரு ஊடகமாவது ஒரு சுதந்திர போராட்ட தியாகியின் வாழ்கை வரலாறு என்று எதாவது காண்பித்தது உண்டா................இல்லை இன்று அவர்களின் சந்ததியினர் படும் அவஸ்தைகளை ஆராய்ந்தது உண்டா..................????????????????//

சரியா கேட்டீங்க, சுதந்திர தினத்திலாவது சுதந்திரம் வாங்க பாடுபட்ட எதாவது ஒரு தியாகியை பற்றி பேசலாம். இவனுங்களை கூப்பிட்டு எதுக்கு பேட்டி எடுக்கிறானுங்கனு தான் புரியல.