OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 17 ஆகஸ்ட், 2011

தெரிந்து கொள்வோம் ஐபோன் பற்றி - 1


நான் ஏற்கனவே என்னுடைய வலைசரத்தில் ஐபோன் பற்றி ஒரு பதிவு எழுதிள்ளேன், அதை தொடர்ந்து..............இன்று ஐபோன் பற்றி ஒரு செய்தி.
இன்று உலகில் எங்கு பார்த்தாலும் இந்த பாலா போன ஐபோன் மோகம் அதிகரித்து கொண்டே வருகின்றது. என்னதான் சாம்சங், எல்ஜி, ஹச்டிசீ போன்ற நிறுவனங்கள் எல்லாம் பலமாதிரியான மொபைல்கள்  தயாரித்தாலும் அது என்னவோ தெரியலை இந்த ஐபோனுக்குதான் ரொம்ப மௌஸ் அதிகமாகி கொண்டே வருகின்றது................அப்படி என்னதான் என்று பார்க்க http://flypno.blogspot.com/2011/06/blog-post_390.html இங்கே கிளிக் செய்து பார்க்கவும். நாம் இப்போது பதிவிற்கு போவோம்,

புதியதாக இந்த ஐபோனை உபயோகபடுதுவோர் அதை முழுவதும் அறிந்து கொள்ள சிறிது காலம் வேண்டும்,..........எனக்கு தெரிந்து  இந்த ஐபோனில் ஈமெயில் உபயோகபடுத்தும் பெரும்பாலானோருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்காது சோம்பல் காரணமாக கூட மாற்றமால் இருப்பார்கள், அது என்னவென்றால் நீங்கள் ஐபோனில் இருந்து ஈமெயில் அனுப்பினால் அதில் பொதுவாக உங்கள் கையெழுத்து பகுதியில் இப்படி இருக்கும் "Sent from iphone" இதனை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதை பற்றி இங்கே பாப்போம்.

முதலில் உங்கள் ஐபோன் ஹோம் ஸ்க்ரீனுக்கு போங்கள், பிறகு அங்குள்ள செட்டிங்க்ஸ் திறங்க, அதில் ஈமெயில், காண்டக்ட்ஸ், காலேண்டேர்ஸ் என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள் இப்பொழுது பார்த்தால் அதில் கையெழுத்து (signature) பகுதியில் உங்களுக்கு வேண்டியாவாறு டைப் செய்து கொள்ளுங்கள்.........அவ்வளவுதான்.............மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள படங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.................




2 கருத்துகள்:

Mohamed Faaique சொன்னது…

என்னை பொறுத்தவரை ஐ போன்`ஐ விட நோக்கியா, இதர போன்களில் வசதிகள் அதிகமே!!!

நான் பெரிய பார்டி`ய்யானு காட்டுரதுக்கு ஐ போன் ஒ.கே. ஆனால், சேவையில் 00

காந்தி பனங்கூர் சொன்னது…

நல்லதொரு செய்தியை கொடுத்திருக்கின்றீர். நன்றி நண்பா.