OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 3 மார்ச், 2013

டாக்டர் பட்டம் (நீ வாங்குற 5, 10 கு இது தேவையா?):-



குச்சி மிட்டாயும், குருவிரோட்டியும்  போல ஆகிவிட்டது இந்த டாக்டர் பட்டம் என்பது. கடந்த சில வருடங்களாக பார்த்தால் யார் யாருக்கோ குடுக்கிறார்கள். கேட்டால் அவர் அது செய்தார் இது செய்தார் என்று கூறுகின்றனர்.

இதுவே கொஞ்சம் பின்னோக்கி பயணித்தால், இந்த படமானது, ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கும், ஏதாவது ஒரு தலைப்பை எடுத்து அதில் சிறந்த முறையில் ஏதாவது புதுமைகளை செய்பவர்களுக்கும்தான் குடுப்பார்கள். ஆனால் இன்றோ இது ஒரு தொழிலாகிவிட்டது என்றால் அது மிகையாகாது. சரி இந்த டாக்டர் படங்கள் ஏன்? எதற்க்கு? இந்த பல்கலைகழகங்கள் குடுக்கின்றன. வேற ஒன்றும் காரணமில்லை நம்ம நகைசுவை நடிகர் செந்தில் அவர்கள் கரக்காட்டக்காரன் படத்தில் சொல்லுகின்ற ஒரு வாக்கியதான் “எல்லாமே ஒரு விளம்பரம்தான்”. 

இந்த பல்கலைக்கழகக்காரங்க என்ன பண்ணுவாங்கன்னா? முதலில் அவங்களுக்கு என்று ஒரு டார்கெட் இருக்கும் இந்த வருடம் இத்தனை பேருக்கு இந்த பட்டம் வழங்கப்பட வேண்டும் என்று. அதர்க்காக அவங்க ஒரு சில வோட்டெடுப்புகள் நடத்துவார்கள் பின்னர் ஏற்கனவே நம்ம அதிமேதாவி ஊடகங்கள் எடுத்த ஆய்வுகளையும் ஒரு வலம் வருவார்கள். கடைசியில் நம்ம ஜிலேபியை பிச்சி போட்ட மாதிரி அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் உள்ள அதிக வோட்டுக்கள் பெற்ற நபர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

இப்படி தேர்ந்தெடுத்த நபர்களை போய் பார்த்து இது போல நாங்க இந்த வருடம் டாக்டர் படத்தை உங்களுக்கு இன்ன இன்ன காரங்களுக்காக குடுக்கிறோம் என்பார்கள். நம்ம ஆளும் ஆஹா நாம பெருசா எதையோ சாதிச்சிட்டோம் போல இருக்கு அப்படின்னு நம்பி சரின்னு சொல்லுவார். அடுத்துதான் அவருக்கு ஆப்பு. உடனே அவர்கள் சில நிபந்தனைகளை வைப்பார்கள், அதாவது இந்த பட்டமளிப்பீர்க்கு ஆகும் செலவீனங்களில் இத்தனை சதவிகிதம் நீங்கள் குடுக்க வேண்டும் என்று!!!!!!!!!! நம்ம ஆள்தான் பெயர், புகழ்ச்சி பிடித்தவராச்சே (நல்ல விசயம்தானே) மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாமே, அதற்க்கும் ஒப்புக் கொள்வார். இதுல மிச்ச மீதி ஆகுற செலவுதான் எங்கிருந்து வருது, யாரு குடுக்கிறது என்பதுதான் இதில் கேள்வி குறியாக உள்ளது!!!!!!!!!!!!!!!!

ஆக இந்த டாக்டர் பட்டம் என்பது இவர்களின் செயல்களுக்காக மட்டும் குடுப்பாதில்லை, இதில் பல்கலைக்கழகத்தின் சுயநலமும் உண்டு. இது போல அவலநிலை இருப்பதால்தான் இன்று கூத்தாடிகளும் இந்த மாதிரியான கவுரவ பட்டங்களை பெறுகின்றனர்.    

கருத்துகள் இல்லை: