OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 21 மார்ச், 2013

இன்னும் எத்தனை பேர் தீக்குழித்து இந்த அரசியல்வாதிகளை காப்பாற்ற போகிறீர்கள்?


 
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மானவர்களின் முதல் கோரிக்கை தனிஈழம், இது எல்முனையளவுக் கூட சாத்தியமில்லை. எந்த ஒரு நாடும் தனது நிலப்பரப்பைப் பிரித்து இன்னொரு நாட்டை ஏற்படுத்திவிட்டு ஒதுங்கிக்கொள்ள வாய்ப்பே இல்லை. அடுத்து அமெரிக்கா கொண்டுவந்துள்ள தேர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பது.

இன்னும் சொல்லப்போனால், இங்கு இவர்கள் போராட்டம் செய்ய செய்ய அங்கு மிச்சம் மீதி இருக்கும் தமிழர்களின் மேல் இன்னும், அடக்குமுறை அதிகரிக்குமே தவிர இவர்கள் வேற எதையும் சாதிக்க போவதில்லை. புலிகளின் காலத்தை விட இன்று மிச்சம் இருக்கும் தமிழர்கள்தான் நிம்மதியாக இருக்கின்றார்கள் எப்போ என்ன நடக்குமோ என்ற நிலை மாறி இன்று அமைதியாக இருக்கிறார்கள், இதனை பொறுக்காமல் இவர்கள் தனி நாடு கோரிக்கை வைத்து போராடி தங்களை தானே ஏமாற்றி வருகிறார்கள்.

திராவிட நாடு கேட்டு அண்ணாத்துரை போராடினார். வடக்கு வாழ்கிறது, தெற்க்கு தேய்கிறது என்றெல்லாம் வசனம் பேசினார், கடைசியில் என்ன ஆச்சு? திராவிடநாடு கோரிக்கையை நாங்கள் கைவிடுகிறோம், ஆனால் அதர்க்காண காரணங்கள் அப்படியேதான் உள்ளன என அந்தர்பல்டி அடித்தார் (எத்தனை போட்டி மாறிச்சோ?). ஆயிரம் கணக்கில் உயிர்களை பளியிட்டும் இன்னும் தெலுங்கானா பிறந்தபாடில்லை.

பாகிஸ்தான் பிரிவினையின் போது இருநாடுகளையும் வெள்ளையர்களே பிரித்துத் தந்துவிடு சென்றதால் பாகிஸ்தான் சாத்தியமானது. இல்லையென்றால் இந்த இரு நாடுகளும் ஒரே நாடாகத்தான் இருந்திருக்கும், இன்று முஸ்லிகளின் நிலையில் ஹிந்துக்கள் இருந்திருப்பார்கள். (சிறுபான்மையினராக)!

பங்களாதேஷ் நாடானது முஜிபுர்ரஹ்மானின் ஆவாமிலீக் கட்சியின் போராட்டங்களாலும், கடும் பதிலடிகளாலும் மட்டுமே உருவானதல்ல. அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி ராணுவத்தை அனுப்பியதால் கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேசாக மாறியது.

இது போன்ற எந்தச் சாதகமான அம்ஸமும் இலங்கையில் இல்லாத போது, இங்கிருந்து தனிநாடு கேட்பதை பார்த்தால் உங்களை விட கேனப்பயலுங்க யாரும் இருக்க முடியாது,.

அடுத்து அமெரிக்க தீர்மானம், இன்று போராட்டம் செய்யும் மாணவர்கள் எவனாவது அந்த தீர்மானத்தின் நகலை படித்திருப்பானா? தனது ஆதாயத்திர்க்காக உலகநாடுகளை மிரட்டி காரியம் சாதித்து கொள்வது அமெரிக்காவிர்க்கு கைவந்த கலையாகும். தீர்மானம் கொண்டு வரப்போகிறோம் என்று பயம்காட்டி புரோக்கர் சும்பிரமணியசாமி மூலம் அமெரிக்காவுக்கு சாதகமாகப் பேசவேண்டியதைப் பேசிமுடிக்கத்தான் அமெரிக்கா இந்த நாடகத்தை நடத்துகிறது.

இலங்கை அரசுடன் அரசியல் புரோக்கர் பெச்ச்வார்த்தை முடிந்துவிட்டதால், ராஜபக்சே அரசு தமிழர்கள்ளுக் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த தீர்மானம் உள்ளது என்று கூறி தமிழக போராளிகளின் மூஞ்சில் கரியை பூசிவிட்டது. இதனால் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக்கி அவரை தூக்கிலட போகிறோம் என்ற தமிழகத் தலைவர்களின் கனவு முற்றிலும் கலைந்துவிட்டது. இப்போது அனைவரும் அந்தர்பல்டி அடித்து அமெரிக்க தீர்மானத்தில் இந்திய அரசு திருத்தம் கொண்டு வார வேண்டும் என்று புரண்டு பேசுகிறார்கள்.

ஒரு தீர்மானத்தை ஆதரிக்கும் முன் அதுக்குறித்து அறிட்ந்துவைத்திருக்க வேண்டும் என்ற சிறிய சிந்திக்கும் திறன் கூட இல்லாத ஊடகங்களும், அறிவுஜீவிகளையும் என்னவென்று சொல்வது.

கல்லூரி மாணவர்கள் இல்லை, இந்தே தமிழகமே கொந்தளித்தாலும் இங்கே உள்ள தமிழர்கள்தான் சாவார்களே தவிர மத்திய அரசு இலங்கைக்கும், ராஜபக்சேவுக்கும் எதிராக ஒன்றுமே செய்யாது. ராஜிகாந்தி படுகொலைக்கு கணக்கு தீற்பதர்க்காக எந்த விலையையும் காங்கிரஸ் தமிழகத்தில் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த மாணவர்களை பெற்றவர்களே, உங்களுக்கு கொல்லி வைக்க பிள்ளை வேண்டுமென்றால் ஒழுங்கா படிக்க சொல்லுங்கள், கல்லூரி நிர்வாகிகளே, கல்லூரிகளை திறந்து இவர்களை வார சொல்லுங்கள், இல்லை வராதவர்களுக்கு TC குடுங்கள். இப்படி செய்தால்தான் இந்த தமிழகத்தை காப்பாற்ற முடியும். 

கருத்துகள் இல்லை: