OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 20 பிப்ரவரி, 2013

இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள்!!!


 
பொதுவாக எல்லோரும் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை, மனிதாபிமான மற்றவைகள் என்று கூறுகின்றனர். இதற்க்கு காரணம் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதே காரணம்.ஆனால் சற்று நடுநிலையோடு சிந்தித்தால் இந்த சட்டங்கள் தான் மனிதனுக்கு நன்மை விளைவிக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மேலும் இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல என்பதை நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். அப்படி என்றால் எதற்காக இப்படியான தண்டனைகள்:-

1.   குடுக்கக் கூடிய தண்டனை மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து தடுக்க வேண்டும்.
2.   ஒரு குற்றவாளிக்கு வழங்க கூடிய தண்டனையைக் கண்டு மற்றவர்கள் அது போல செய்ய பயப்படவேண்டும்.
3.   குற்றவாளியால் பாதிக்கப்பட்டவன் தனக்கு நீதி கிடைத்துவிட்டது என்று மன நிறைவு அடையவேண்டும். 
இதை தவிர வேற காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை.

பெரும்பாலான நாடுகளில் வழங்கப்படும் தண்டனைகள் சில மாதங்களோ அல்லது சில வருடங்களோ சிறை தண்டனை. இந்த தந்தனையில் வெளியே வார முடியாது என்பதை மட்டும் தவிர்த்து பார்த்தால் ஒரு பரம ஏழையின் வாழ்வை விட சிறை வாழ்வு மேலானதாக உள்ளது. அநியாயமாகவும், அயோக்கியதானமாகவும் நடந்து கொண்ட குற்றவாளிகளுக்கு மூன்று வேலை உணவுக்கு உத்தரவாதம் தரப்படுகின்றது. உயர் தரமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குச் செய்து தரப்படுகின்றது. அவர்களின் பொழுதை போக்குவதர்க்காக சினிமா போன்ற வசதிகளும் செய்துதரப்படுகின்றது. இதில் வேதனை என்னவென்றால் எந்த மக்களிடமிருந்து ஒருவன் திடுகிறானோ, எந்த மக்களை கொலை செய்கின்றானோ, எந்த பெண்ணைக் கற்பழிக்கிறானோ அந்த மக்களின் வரிப்பணத்திலிருந்தே தான் இவ்வளவு வசதிகளும் செய்து தருகிறார்கள்.

அன்றாடம் செய்திதாள்களில் படிக்கிறோம், 15 முறை சைக்கிள் திருடியவன் கைது, 50 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது, இதர்க்கெல்லாம் காரணம் என்ன 50 தடவை அவனுக்கு வழங்கப்பட தண்டனைகள் அவனுக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. மேலும் சிறைச்சாலைகள் குற்றவாளிகளின் பல்கலைக்கழகங்களாக திகழ்வதை அனைவரும் அறிவார்.

மனிதாபிமான (?) சட்டங்கள் ஏற்படுத்திய வியலைவுகள் இவை. திருட்டு கொடுத்தவனிடம் போய் திருடியவனை என்ன செய்யலாம் என்று கேட்டால் “ஆறு மாதம் சோறு போடலாம்” என்று சொல்ல மாட்டான். கொல்லப்பட்டவனின் மகனிடம் போய் கொலையாளியை என்ன செய்யலாம் என்று கேட்டால் “பதினான்கு வருடம் அரசாங்க செலவில் அவனை கவனிக்க வேண்டும்” என்று கூறுவானா? தலையை சீவ வேண்டும் என்பானா? பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைச் சீர்த்தூக்கி பார்த்து தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். பாதிக்கபட்டவனின் நிலையில் இருந்து பார்க்காமல் பாதிக்கப்படாத இடத்தில் அமர்ந்து கொண்டு சட்டங்கள்  இயற்றப்படுவதால் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொல்லபடுவதில்லை, இஸ்லாமோ இதை கவனத்தில் கொள்கிறது.

ஒருவன் பத்துப்பேரை கொலை செய்து தூக்குத்தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையைக் கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் எடுத்துக்கொள்ள இவர் என்ன கொல்லப்பட்டவனுக்கு மாமனா? மச்சானா? இவருக்கு எப்படி பாதிக்கப்பட்டவனின் மனநிலை புரியும்?

இஸ்லாம் என்ன சொல்கின்றது, கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், ஒருவன் மற்றொருவனின் கண்ணை குருடாக்கிவிட்டால், இதர்க்காண தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணை இழந்தவன் குற்றவாளியை மன்னித்து விட்டால் குற்றவாளி தந்திக்கபட மாட்டான் அல்லது குற்றவாளியிடம் இழப்பீட்டை கோரிப்பேற்றுக் கொண்டாலும் குற்றவாளி தந்திக்கபட மாட்டான். இதே போல கொலை குற்றமும், கொல்லப்பட்டவரின் வாரிசுகளில் யாரேனும் ஒருவர் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமிய சட்டம், அதாவது உலக நாடுகள் குடியரசு தலைவருக்கு வழங்கிய அதிகாரத்தை இஸ்லாம் பாதிக்க்ப்பட்டவனுக்கு அளிக்கிறது.

சட்டங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது,. திருடினால் கையை மணிக்கட்டு வரை வெட்ட வேண்டும், இதை பாவம் கையை வெட்டுகின்றீர்களே என்று பரிதாபப்படுவது தான் மனிதாபிமானம் என்று சிலர் எண்ணுகின்றனர்.

மரணப்படுக்கையில் கிடக்கும் தான் குழந்தையின் உயிர் காக்கும் மருந்தை வாங்க செல்லும் ஒருவனிடமிருந்து திருடன் பணத்தை பறித்து கொள்கிறான், மேலும் அந்த குழந்தையின் உயிர் போக காரணமாகவும் ஆகின்றான்.

நேர்மையும், ஒழுக்கத்தையும் விரும்பக் கூடியவன் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பதைப் பார்த்து பரிதாபபடாமல் அவனை நடுத்த் தெருவில் நிறுத்திய அயோக்கியனுக்கு பரிதாபடுகிறார்கள் இந்த நல்லவர்கள்!!!!!!!!!!!!!

இந்த நிலை மாறவேண்டுமானால் குற்றவாளிகள் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடமளிக்க கூடாது. இஸ்லாம் சொல்கின்றது என்ற குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்காமல் அதனால் ஏற்படும் விளைவுகளை சிந்திதால் உலகம் அமைதி பூங்காவாக திகழும்.

மேலும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று தண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறவில்லை,. குற்றங்கள் நிறுப்பிக்கபட்ட பின்பே தண்டனை வழங்குமாறு கூறுகின்றது. இஸ்லாமிய ஆட்சி முறையில் தகுந்த சாட்சியங்கலின்றி சில குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ள முடியுமே தவிர நிரபராதிகள் தந்திக்கபடவே முடியாது என்பது தான் உண்மை!!!!!!!!!!!!!!!!

குறிப்புகள்:- திரு குர்ஆன் 02:178-179, 05:33,38,45, 17:33, 24:02, 24:04

நன்றி:- www.onlinepj.com  கருத்துகள் இல்லை: