OnlinePJ

Thanks for Visiting my Page

சனி, 9 மார்ச், 2013

மாத்தி யோசிச்சா இப்படிதாங்க!!!!!!!!


பதிவரானதுக்கு அப்புறம்தான் எத்தன எத்தன பிரச்சினை. முன்பெல்லாம் பதிவுகள படிக்கறப்போ ஒரு சந்தோஷம் இருக்கும், இப்போல்லாம் இந்த பக்கம் வந்தாலே ஒரே மன உளைச்சல், தலைவலி, வயிற்ருப் போக்கு, வாந்தி பேதிதான். ஏதாவது ஒரு சின்ன காரணம் கெடைச்சா போதும் அடிச்சிக்கறதுக்குன்னு ஒரு கூட்டமே இருக்கு, இதுக்கு நடுவுல எரியற நெருப்புல எண்ணைய ஊத்திவிட்டு குளிர் காயறதுக்குன்னு ஒரு கூட்டம், நமக்கு சம்பந்தமே இல்லையின்னாலும் ஒரு நாலு பதிவ போட்டு ஹிட்டு வாங்குறதுக்கும் சண்டைய மூட்டி விடுரதுக்கும்ன்னு. இதெயெல்லாம் படிக்கறப்போ இதுல எல்லாம் இருந்து ஒதுங்கியே இருக்கலாம்ன்னு நினைச்சா, நீயும் ஒரு பதிவர், உனக்கும் சில சமுதாய பொறுப்பு இருக்குன்னு நம்மளையும் இழுத்து விடுறதுக்குன்னு நாலு நண்பர்கள். இந்த சின்ன வயசுல இத்தன பிரச்சினைகளையும் நான் எப்படித்தான் சமாளிக்க போறேனோ? என்ன நடந்தாலும் சரி (சண்டைன்னு வந்தா சட்டை கிழியத்தானே செய்யும்).

நானும் எத்தன நாளைக்குத்தான் மொக்க பதிவாவே போட்டுக்கிட்டு இருக்கறது. சமுகப் பிரச்சினைகள்ள கருத்து சொல்லன்னும்கற ஆர்வம் எல்லாம் எனக்கும் வராதா? என்ன விடுங்கங்க, நான் எல்லாம் மொக்கப் பதிவர்ன்னு தெரிஞ்சே வாழ்ந்துக்கிட்டிருக்கேன், அவனவன் ஒளிவட்டப் பதிவர்ன்னு நெனச்சிக்கிட்டு மொக்க போட்டுக்கிட்டிருக்கான், அதான் கொஞ்சம் மாத்தி யோசிச்சேன்!!!!!!!!!!!!!! இப்படி ஆகிவிட்டது.

தத்துவம்:-

அதிகமான பொண்ணுக பின்னாடி சுத்துனவனும், ஒரே ஒரு பொன்னை மட்டும் காதலிச்சவனும் சந்தோசமா இருந்ததா சரித்திரம் இல்லை..." 

நம்பிக்கை:-
முன்பின் அறியாத கடவுளை நான் நம்புவதில்லை என்றார் அந்த ரயில் பயணி...
அருகிலிருந்த சக பயணி, அதனாலென்ன! நீங்கள் கடவுள் தன்மையை நம்புகிறீர்களே, அது போதும் என்றார்...
நாத்திகருக்குப் புரியவில்லை...

இந்த ரயிலை இயக்குபவரை நீங்கள் முன் பின் அறிந்ததில்லை. ஆனால் பயணம் செய்கிறீர்கள். சற்று முன் நீங்கள் அருந்திய தேநீரை விற்பனை செய்தவரை உங்களுக்குத் தெரியாது. நம்பி வாங்கினீர்கள்...உலகில் உள்ள நல்ல தன்மைகளை நம்புவதே கடவுளை நம்புவதற்குச் சமம் என்றார் சகபயணி...
அம்மாக்களே ஜாக்கிரதை:-
அடிப்பாவி மகளே...
எவனையோ லவ் பண்றேன்னு என்கிட்டயே வந்து சொல்லுறியே...
கொஞ்சம் கூட ' அம்மா ' ன்னு ஒரு மரியாதை இல்லாம...
"
சும்மா கத்தாதேம்மா...
இன்னும் ஆறு மாசத்துல நானும் தான் அம்மா ஆகப்போறேன்!!..."
ஒரு விவாகரத்து வழக்கு:-
கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.
அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”
அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க
ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”
எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”
அடாடாஉங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது
தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்
கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”
அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதானஅதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க
வீட்டுக்காரரோட என்ன சண்டை?”
வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு
இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.
எதுக்காக விவாகரத்து கேட்கிறார்என்று அலறி விட்டு இருமினார்.
ஓ..அதுவாஎன்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்கஉங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?”

கடைசியாக பெண்களுக்காக:-
பெண்கள் கவனமாக இருக்க
வேண்டிய தருணங்களில் ஒன்று,
உங்கள் இடுப்பில் உள்ள
குழந்தையை அந்நிய ஆடவர்
கொஞ்சும் நேரம்!


கருத்துகள் இல்லை: