OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 6 மார்ச், 2013

நான் நினைக்கும் மனிதர்கள்!!!!!!!!!!



நாம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பல விதமான மனிதர்களை சந்திப்போம், கடந்து போவோம், ரோடுகளில், டீ கடையில், துணிக்கடையில், மருத்துவமனையில் இன்னும் ஏராளமான இடங்களில். ஆனால் அந்த அத்தனை பேரையும் நம்மால் நியாபகம் வைத்துக்கொள்ள முடியாது. ஒரு சிலர் மட்டுமே நியாபகம் வைத்திருப்போம் அதுவும் சில நாளில் மறந்துவிடும்.


ஆனால் நான் நினைத்துப்பார்க்கும் மனிதர்கள் இந்த வழிபோக்கர்கள் அல்ல, வலியால் துடிப்பவர்கள். ஆம், தினம் தினம் இந்த உலகில் எத்தனையோ கண்டுபிடிப்புகள் உருவாகினாலும், அதை எல்லாம் வைத்து நம் பசியை போக்க முடியாது, அந்த பசியை போக்க விவசாயி ஒருத்தனால் மட்டும்தான் முடியும், உலகிலேயே அதிகப்படியாக விவசாயம் செய்யக்கூடிய நாடுகளில் இந்தியாவும் உள்ளது. ஆனால் இந்த இந்தியாவில் 2008 முதல் இன்று வரை 2 லச்சத்திர்க்கும்  மேலான விவசாயிகள் தற்கொலை செய்து இறந்துவிட்டார்கள் ஏன்? எல்லாம் இந்த மக்கள் அக்கறை இல்லாத அரசால்.


அந்நிய வர்த்தகத்தை இந்தியாவில் விதைத்து இந்த விவசாயிகளை புதைத்து விட்டார்கள். இந்த வெளிநாட்டு வர்த்தகம் தரக்கூடிய அந்த விதை நெல்லை வாங்கித்தான் இவர்கள் விவசாயம் செய்யும் கேவலமான நிலை இன்று. “why this kolaveri” அப்படின்னு பாடினால் அதை YouTube இல் 6 லட்ச நபர்கள் பார்க்கிறார்கள், ஆனால் ஒரு விவசாயி தற்கொலை செய்துக்கொண்டால், ஒருத்தன் கூட கேட்பதில்லை. இவர்களை நினைத்துப்பார்க்கிறேன்!

நான் என்னுடைய ஒரு பதிவில் குறிப்பிட்டதை போன்று, //உலகிலேயே சினிமா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடுதான், சினிமாவையும் வாழ்வையும் பிரித்துப் பார்க்கத் தெரியாத ஒரே இனம் தமிழ் இனமே, இங்குதான் சினிமாவில் வள்ளலாக நடித்தவர் முதல்வராக முடியும், ஒரு கதாநாயகர் நினைத்தால் ஆட்சிமாற்றமே கொண்டு வார முடியும். அது அறிவு வளர்ச்சியா? அறிவு வீழ்ச்சியா?// இங்கு தங்கள் அபிமான நடிகர் நடித்த படம் வந்தால் அவருக்கு கட்டவுட் வைத்து பாலை வீணாக்கும் ரசிகர்களே, உங்கள் வீட்களுக்கு அருகிலேயே ஒரு வேலை பாலுக்கு கூட வழியில்லாத குழந்தைகள் இருக்கலாம். அவர்களை என்றைக்காவது நினைத்தது உண்டா?? அவர்களை நினைத்துப்பார்க்கிறேன்!!!

அடுத்து இந்த மீனவர்கள், இதில் அதிகம் பாதிக்கபடுவோர் நம்ம தமீழக மீனவர்கள்தான், ஒரு வேலை சொத்திர்க்காக தான் உயிரை பணயம் வைத்து கடலில் போயி வார வரைக்கும் அவனுடைய தாயிம், மனைவியும், பெற்ற பிள்ளைகளும் கரையில் தவம்கிடக்கின்றன, அவனிற்க்கு மீங்கிடைக்கவில்லை என்றாலும் திரும்பிவந்து விட வேண்டும் என்ற எண்ணம், ஆனால் அவனுக்கு அவன் உயிர் கூட மிஞ்சுவதில்லை என்பதை நினைத்தால்????? அட அப்படியே அவன் எல்லை தாண்டி போனாலும் அதற்க்கு  விலை என்ன மனித உயிரா? அட இதுக்கூட பரவாயில்லை, இதுக்குறித்து இந்த ஊடகங்கள் எழுதும் எழுத்து இருக்கே, “தமீழக மீனவர்கள்”  தமீழகம் இந்தியாவில் இல்லையா? இவர்களை நினைத்துப்பார்க்கிறேன்.

எந்த ஒரு புரட்சி படையாக இருந்தாலும் சரி அதன் பின்னனியில் ஒரு சோக கதை இருக்கும், அதில் கண்டிப்பாக அரசாங்கத்தின் கையாலாகாத தனம் இருக்கும், அப்படி இருக்கும் ஒரு குழுத்தான் இந்த மாவேஸ்ட்டுகள், இவர்கள் குறித்து அரசு தீர்மானம் “தாழ்த்தபட்டவர்களுக்கு வாழ்வாதாராம் வழங்கப்படும், மாவேஸ்ட்டுகள் ஒடுக்கபடுவார்கள்” அப்ப இதுவரை அவர்களுக்கு  இன்னும் வாழ்வாதாரம் வழங்கபடவில்லை என்றுதானே அர்த்தம்!!!!!!!! இவர்களை நினைத்துப்பார்க்கிறேன்.

இப்படி உலகில் ஏகப்பட்ட மனிதர்கள் நினைத்துபார்க்க இருக்கும் போது, நாமும் நமது ஊடகமும், சிறந்த பாடகரையும், நடனமாடக்கூடியவரையும் தேடி ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறோம், வருடா வருடம், பல அவார்ட் நிகழ்ச்சிகள் இந்த விபச்சார கலைக்கு குடுத்துக்கொண்டு திரிகிறார்கள் (மாமா வேலை மாதிரி). இவர்கள் என்றாவது மாநிலத்தில் 10, 12 வகுப்பில் முதல் பத்து அல்லது இருபது மானவர்களை தேர்வு செய்து இது போல விழா நடத்துகிறார்களா? இல்லை கணிதம், தமிழ், அறிவியல் என்று தனித்து விளங்கிய மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விழா நடத்துகிறார்களா? இவர்களை நினைத்துப்பார்க்கிறேன்.

என்ன இல்லை என் திருநாட்டில் என்று யாரோ பாடியது ஏனோ நியாபகம் வந்து போகிறது, அவர் சொன்ன மாதிரி என்ன இல்லை இந்த திருநாட்டில், எத்தனை கற்பழிப்புகள், கள்ள காதல்கள், கொலைகள், கொள்ளைகள், அத்தனையும் நேரடியாக தெரிந்தாலும், இந்த நீதிமன்றங்களில்தான் எத்தனை வாய்தாக்கள்..........!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இவர்களை நினைத்துப்பார்க்கிறேன்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  

கருத்துகள் இல்லை: