இன்று உலகத்தில் எங்கு எடுத்து கொண்டாலும், ரத்த சொந்தமே இல்லாத ஒரு உறவு என்றாள் அது நட்பு என்கின்ற உறவுதான். இதை யாராலும் மறுக்கமுடியாது, உலகில் எவ்வளவு பெரிய கெட்டவனாக ஒருவன் இருந்தாலும், அவனையும் நேசிக்கும் ஒரு நண்பன் இருப்பான்.
இப்படி
நட்பு என்பது எந்த ஒரு எதிர்பார்ப்புமில்லாமல் வரும். ஆனால் இந்த நட்பை
பார்தீங்கன்னா மூன்று காலகட்டமாக பிரிக்கலாம். முதலில் நாம் வீட்டை விட்டு
வெளியில் விளையாட ஆரம்பிப்போம், அப்பொழுது
நமக்கும் பக்கத்து வீட்டில் உள்ளவனுக்கும் இடையில் ஏற்படும் அதுவே காலப்போக்கில்
பள்ளிக்கூட நட்பாக மாறிவிடும், இந்த
நட்பானது எப்படியும் பள்ளிக்கூட வாழ்க்கை முடியும்வரை தொடரும், அதாவது 12-ம வகுப்பு வரை, பிறகு சில பேர் அதை அப்படியே
கல்லூரிகளிலும் தொடர்வார்கள், இது
இரண்டாம் கட்டம், கல்லூரிகளில்
இன்னும் வெவ்வேறு திசைகளில் உள்ளவர்களும் நட்ப்பாவார்கள், ஆனால் அவர்கள் எல்லாம் கல்லூரி நாட்கள்
முடிந்தவுடன், வெறும்
தொலைபேசியிலும், இமெயில்
களிலும்தான் தொடர்வார்கள் அதுவும் காலபோக்கில் குறைந்துவிடும் ஆனால் மறைந்து
விடாது, இதில்
கடைசியாக பார்த்தால் கல்லூரி முடிந்து வேலைக்கு போகுமிடத்தில், இதில் வயதுவித்தியாசம் எல்லாம்
கிடையாது, இப்படி
இந்த மூன்றிலும், கடைசிவரை
நிலைத்து நிற்பது, நமது
பள்ளிக்கூட காலங்களில் நமக்கு கிடைத்த
சொந்த ஊர் நண்பர்கள்தான், இந்த
மூன்று நிலை நட்பில் பலப்பிரச்சினைகள் வரும், மனிதன் அத்தனை பெரும் ஒரு மாதிரி
இருப்பதில்லை என்கின்ற கருதுப்படி பிரச்சினைகள் மாறி மாறி வரும்.
சில
நண்பர்கள் எதற்கெடுத்தாலும் குறைகூறிக்கொண்டே இருப்பார்கள், நான் உனக்கு கால் பண்னினேன், நீ எனக்கு திரும்பி பண்ணலையே, சிலபேர் எப்ப எது சொன்னாலும்
வெறும் பொய் மட்டும்தான் பேசுவார்கள், இன்னும் சிலர் நிறையவிசயங்களை
பகிர்ந்துகொள்ளவே மாட்டார்கள், ஒரு
நல்ல விஷயம் நடந்தாலும் தெரிவிக்கமாட்டார்கள், இன்னும் சில பேர் இருக்கிறார்கள், நண்பர்களிடையில் போட்டுக்குடுத்து
கொண்டு குளிர்காய்வார்கள், இது
போல நிறைய விஷயங்கள், இதுல
உண்மையான நண்பன் புரிந்துகொள்வான். கடைசில
பார்த்தா இதுல உண்மையா நட்பா இருக்கிறவங்க மட்டும்தான் மிஞ்சுவாங்க, மற்ற எல்லோரும்
பிச்சிப்பாங்க.....................!!!!!!!!!!!!!!!!!!!!!
மேலும் ஒரு
உதாரணம், இரண்டு
நண்பர்கள் ஒன்றாக இருந்தாலும், ஒருத்தன்
இன்னொருதனுடைய தங்கையை காதலித்தால் நண்பந்தான் என்று ஏற்றுக்கொள்ள மறுப்பான்,ஏன் இந்த முரண்பாடு? ஒண்ணுமே
தெரியாத ஒருத்தனுக்கு கட்டிக்குடுப்பதைவிட உன் நண்பனுக்கு கட்டிகுடுத்தால் குறைந்தா போய்விடுவாய்? இதுல நம்பிக்கைதுரோகம் என்றெல்லாம்
புழம்புவர்களும் உண்டு, இதில்
கொடுமை என்னவென்றால் அவனும் யாரையாவது லவ் பண்ணுவான் அதற்க்கும் இவன்தான் உதவி
செய்திருப்பான். அடுதவன் தங்கச்சியை பண்ணினால் லவ், இவன் தங்கச்சியை செய்தால்
நம்பிக்கைதுரோகம், உங்க
நேர்மை எனக்குக் பிடிதிருக்கு.
மற்றொன்று
உயிருக்குயிராய் நட்பாய் இருப்பார்கள், சரி இவனுக்கு நமது தங்கையை கட்டிகுடுக்கலாம்
என்று செய்தபின்பு, அவன்
இவனிடத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுவான், இப்போ நட்பு என்ற பார்வையை
விடுத்து மச்சான் (மனைவியின் அண்ணன்) என்று பார்ப்பான், இங்கே தான் மிக பெரிய பிரச்சனை
ஆரம்பிக்கும், முன்னர்
நண்பனாக தெரிந்தவன் இப்பொழுது உறவுக்காரன், இப்போ இவன் எது சொன்னாலும்
கேட்கமாட்டான். நான் புடிச்ச முயலுக்கு மூணு காலூன்னு நிப்பாங்க.
அதனால
நட்புன்னு வந்துட்டா, பிரித்து
பார்க்க கூடாது, அதுக்காக
கூட இருந்துகொண்டே கழுத்தை அறுக்கும் நண்பர்கள் சிலர் இருப்பார்கள் அவர்களை
பிரித்துதான் பார்க்கவேண்டும், உதவி
செய்ய முடியாலைனாலும், கெடுதல்
நினைக்காமல் இருந்தாலே போதும், அதுவே
மிக பெரிய உதவி.
என்றும்
நட்புடன்...........................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக