OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 15 மே, 2012

ரொம்ப நேரம் உட்கார்ந்து யோசிச்சது!!!!!!!!!!!!!!ரொம்ப நாள் ஆச்சு இந்த மாதிரி மொக்கை பதிவு போட்டு, கொஞ்சம் சோம்பரிதனத்தின் காரணமாக போட முடியவில்லை, அதுவுமில்லாமல் என்னுடைய நண்பர்களில் சிலர் ஓசில வாழ்க்கையை ஒட்டினாலும், நம்முடைய பதிவை வைத்து கிண்டலடிப்பது குறையவில்லை, அதனால இந்த முறை அவர்களை வெறியேத்தவே கொஞ்சம் நீளமாக இந்த பதிவு.
முதல்ல ஒரு சில தத்துவதில் இருந்து ஆரம்பிப்போம்:-
தத்துவம் 1:-
என்னதான் கொசு எல்லாவகையான ரத்தத்தை குடித்தாலும், அதனால் ரத்ததானம் செய்ய முடியுமா??

தத்துவம் 2:-
என்னதான் டி‌வி ராத்திரி முழுதும் ஓடினாலும், அதனால ஒரு இன்ச் கூட நகர முடியாது!!

தத்துவம் 3:-
கோழி முட்டை போட்டா கோழி குஞ்சு வெளியில் வரும், ஆனால் வாத்தியார் முட்டை போட்டா வாத்தியார் குஞ்சு வெளியில் வருமா??? (சிரிக்காதீங்க, சிந்தியுங்கள்)!!

தத்துவம் 4:-
என்னதான் நாம வெட்டியா இருந்தாலும், நாமே நம்ம மொபைளுக்கு போன் பண்ணினால் பிசிண்ணுதான் வரும்.............இதுதான் வாழ்க்கை!!! (பார்த்தீங்களா உடனே செக் பண்றீங்க)

தத்துவம் 5:-
ஒரு சைக்கிள் போகும்போது சைக்கிள் ஸ்டண்ட் கூடவே போகும், ஆனா ஒரு பஸ் போகும்போது பஸ் ஸ்டண்ட் கூட போகுமா??
இப்படிக்கு:- பஸ் ஸ்டாண்டில சைக்கிள் ஸ்டண்ட் போட்டு யோசிக்கிறவங்க சங்கம்.

தத்துவம் 6:-
என்னதான் மண்டையில் வழுக்கை விழுந்தவன் முடிவெட்ட போனாலும், அவனுக்கு மட்டும் என்ன சேவிங் பண்ணின சார்ஜா வாங்குவான்???
இப்படிக்கு:- யோசிச்சு யோசிச்சு மண்டையில் வழுக்கை விழுந்தவர்கள் சங்கம்.

தத்துவம் 7:-
ஒவ்வொரு நாளும் பூ குடுத்தேன் அவளுக்கு, ஒரே ஒரு பூ குடுத்தால் எனக்கு “ஆப்பூ”.
ரொம்ப ஜாக்கிரதை மாப்பூ
லவுன்னா “டூப்பூ
நமக்கு நண்பன்தான் “டாப்பூ

கடைசியாக:-
வாழ்க்கையில் தடுமாறி கொண்டு இருப்பதை விட, ஒரு முறை விழுந்து எழுவதே சிறந்தது.

ஒரு பஸ் ஜோக்:-
பஸ்ல உட்காரமா நின்னுக்கிட்டு வந்தேன்
ஏன் தெரியுமா? சீட்ல எல்லோரும் உட்கார்ந்து இருந்தாங்க, என்ன கடுப்பாவுதா?
எனக்கும் இப்படிதான் ஆச்சு உட்கார்ந்து வந்தவங்களை பார்த்து!!!!!!!!!!!

ஒரு எல்கெஜி ஜோக்:-
பையன் 1:- டேய் மச்சான் நேத்து பரீச்சைக்கு பிட்டு எடுதுகிட்டு போனியே என்ன ஆச்சு.
பையன் 2:- அட போடா பிட்ட ஜட்டில வைச்சு எடுதுட்டு போனேன் அதை மறந்து ஜட்டிலேயே ஊச்சா போயிட்டேன்!!!!!
இப்படிக்கு:- ஜட்டிலேயே ஊச்சா போற சங்கம் (இந்த ஜோக் என்னுடைய நண்பன் ஒருவனுக்கு மேட்ச் ஆகும்)

ஒரு குடிமகன் ஜோக்:-
காதலித்து பார் என்று சொன்னவர்கள், காதலித்தால் BAR என்பதை சொல்லவில்லையே (மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்)

ஒரு சிபிஐ ஜோக்:-
ஸ்ரீசாந்த் வீட்லே சிபிஐ சோதனையிலே ஒரு புத்தகம் கிடைத்து,
புத்தகத்தின் பெயர் என்ன?
10 நாளில் பௌலிங் போடுவது எப்படி?
இப்படிக்கு:- ஆஷிஷ் நெஹ்ரா

மலையாளி ஜோக் 1:-
ஒரு மலையாளியும், அவனது மனைவியும் ஆட்டோவில் போனார்கள்,
அப்போ ஆட்டோ டிரைவர் கண்ணாடியை சரி செய்தான்,
இதை பார்த்த அந்த மலையாளி உடனே டிரைவரை சத்தம் போட்டான் என்ன என் பொண்டாட்டியே பார்க்கிறாய் என்று சொல்லிவிட்டு சொன்னான், நீ போயி பின்னாலே உட்காரு நான் ஆட்டோ ஒட்டுறேன் என்று!!!!!!!!!!!!!!!!!!!!
மலையாளி ஜோக் 2:-
ஒரு மலையாளி ஆட்டோவில் இருந்து ரெண்டு சக்கரங்களை கலட்டிக்கொண்டு இருந்தான், அப்போ இன்னொருத்தான் கேட்டான், ஏன் இப்போ சக்கரத்தை கலட்டுறே?
அதற்க்கு அவன் சொன்னா இங்கே இரண்டு சக்கர வாகனம் மட்டும் நிறுத்த வேண்டுமாம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!
இப்படிக்கு:- சக்கரமே இல்லாமல் வண்டியோட்டும் சங்கம்.

ஒரு டாக்டர் ஜோக்:-
டாக்டர்:- சீ இவ்வளவு கஷ்டப்பட்டு ஆபரேஷன் பண்ணியும் இவரை காப்பாத்த முடியலையே?
நர்ஸ்:- போடா முட்டா பயலே, நீ பண்ணினது ஆபரேஷன் இல்லை, போஸ்ட் மார்டம் !!!!!!!!!!!!!!!!

ஒரு எஸ்‌எம்‌எஸ் ஜோக்:-
நான் அனுப்பின எஸ்‌எம்‌எஸ் டெலீட் பண்ணினால்,
உடம்பில கையிருக்கும், காலிருக்கும், தலையிருக்கும், மூக்கிருக்கும் ஆனா
.
.
.
படிக்கிறதுக்கு எஸ்‌எம்‌எஸ் இருக்காது, அதான் மூதேவி டெலீட் பண்ணிட்டியே!!!!!!!!!!!

ஒரு டிரைவர் ஜோக்:-
போலீஸ்:- எப்படியா விபத்து நடந்தது?
டிரைவர்:- அதான் சார் எனக்கும் தெரியலை, நான் தூங்கிட்டு இருந்தேன்!!!!!!!
போலீஸ்: !!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒரு மனைவி ஜோக்:-
மனைவி:- ஏங்க இப்படியே நான் சமைத்து போட்டுகிட்டு இருந்தா எனக்கு என்ன கிடைக்கும்??
புருஷன்:- கொலை குற்றதுக்காக மரண தண்டனைதான் கிடைக்கும்.
மனைவி:- !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒரு கணவன் ஜோக்:-
கணவன்:- மச்சான் தொட்டதுக்கெல்லாம் என் மனைவி கோபிசிக்கிறாடா?
நண்பன்:- அப்படி என்னடா தொட்ட?
கணவன்:- என் மனைவியோட தங்கச்சியதான்
நண்பன்:- !!!!!!!!!!!!!!!!!!!!!!   

ஒரு இடுப்பு ஜோக்:-
மனைவி:- வேலை செய்யும்போது இடுப்பை கில்லாதீங்கன்னு எத்தினை தடவை சொல்றது.
வேலைக்காரி:- நல்ல சொல்லுங்கம்மா நானும் பல முறை சொல்லிட்டேன்
கணவன்:- !!!!!!!!!!!!!!!!!!!!

ஒரு சேவிங்க் ஜோக்:-
பஸ் பின்னாலே ஓடினாள் ரூபாய் 3 சேவிங்க் பண்ணலாம்,
ஆட்டோ பின்னாலே போனால் ரூபை 30 சேவிங்க் பண்ணலாம்,  
டாக்சி பின்னாலே போன ரூபாய் 300 சேவிங்க் பண்ணலாம்,  
ஆனா
பொண்ணுங்க பின்னாடி போனா மவன உன் தாடிய கூட சேவ் பண்ண முடியாது?????? பார்த்து ஒழுங்கா நடந்துக்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒரு புரியாத புதிர்:-
கலிலியோ இரண்டு சின்ன விளக்குகளை வைத்து படித்தார்!
கிரகாம்பேல் மெழுகுவர்த்தி வைத்து படித்தார்!
ஷேக்ஸ்பியர் தெருவிளக்கில் படித்தார்!
ஒண்ணும் மட்டும் புரியலை, “பகல்ல படிச்சா பதிப்பு வராதா என்ன?”

இரண்டு மூக்குடைப்புகள்:--

1. டாக்டர்:- நீங்க இவரை ஒரு நேரதிற்க்கு்கு முன்னாடி கொண்டு வந்திருந்தால் காப்பாத்திருக்கலாம்?
வந்தவர்:- கொண்டு வந்திருக்கலாம், என்ன விபத்து நடந்து பத்து நிமிசம்தான் ஆச்சு!!!!!!!!!!!!!!!!
2. அப்பா:- ஏண்டா நேத்து ராத்திரி செமெஸ்டருக்கு படிச்சேன்னு சொன்னே, உன் ரூம்லா லைட்டே எரியலையே?
மகன்:- போங்கப்பா படிக்கிற ஆர்வத்துல அதை எல்லாம் கவனிக்கலை
அப்பா:- !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கடைசியாக ஒரு கருத்து (வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம்)

வாழ்க்கையில், மச்சானை நண்பனாக்கி கொள்ளுங்கள்,
நண்பனை மச்சானாக்கி கொள்ளாதீர்கள்………………….!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கருத்துகள் இல்லை: