நாங்கள் எந்த இயக்கத்தையும் சாராதவர்கள் என்று சொல்லும்
தௌஹீத்வாதிகள்
TNTJ வை
மட்டும் மறைமுகமாகவோ, நேரடியாகவோ வேறுபடும், சாடுவதுமாக
உள்ளனரே ஏன்?
எந்த
இயக்கத்தையும் சாராதவர்கள் என்பது ஒரு போர்வை தான்.
தௌஹீத்
ஜமாஅத்தின் பக்கம் மக்கள் நம்பிக்கை வைத்து செல்வதைப்பார்த்து பிடிக்காத சிலர்
அவதூறு பரப்பி மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பார்கள்.
அதை சாதாரண
மக்களும் புரிந்து கொள்வதால் உரிய முறையில் இதை நாம் எதிர்கொள்ள முடியும்.
தௌஹீத் ஜமாஅத்
மீது அவதூறு பரப்பினாலும் அதன் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை என்பதை காணும் சிலர்
தந்திரமான முறையில் மக்களை தௌஹீத் ஜமாத்தில் இருந்து அப்புறப்படுத்தும் வேலையை
செய்வார்கள்.
நமக்கு யாரும் வேண்டாம், நாம் எதிலும்
சேராமல் இருப்போம் என்று கூறுவது தான் அந்த தந்திரம். இவர்கள் அவர்களை குறை
சொல்கிறார்கள், அவர்கள் இவர்களை குறை சொல்கிறார்கள். நாம்
இவர்களை விட நல்லவர்களாக எதிலும் சேராமல் இருப்போம் என கூறி நடிப்பார்கள்.
ஆனால்
இவர்களுக்கும் தோல்விதான் கிடைத்து வருகிறது. என்ன தான் மறைக்க
முயன்றாலும் அவர்களின் உண்மையான தோலை வெளிபடுத்தும் வகையில் தௌஹீத் ஜமாத்துக்கு
எதிராக இயக்கங்களின் நிகழ்ச்சிக்கு ஆள் பிடிக்கும் போதும், அது போன்ற பிரசூரங்கள்
வெளியிடும் போதும் இவர்கள் முனாஃபிக்குகள் என்பது வெளிச்சமாகிவிடுகிறது. மக்களும்
இவர்களை அடையாளம் கண்டு கொள்கின்றனர்.
ஒருவன் மோசடி செய்கிறான். இவன் செய்வது மோசடி என்று
இன்னொருவன் சொல்கிறான். இதைப்பார்க்கும் இந்த நரிகள் கூட்டம் மோசடி செய்பவனுக்கு எதிராக
இருக்காமல் இருவரும் சண்டையிடுவதால் நான் நடுநிலை வகிக்கப்போகிறேன் என்று கூறினால்
இவனும் திருடந்தானே?
திருட்டில் பங்கு
போடுவதர்க்காக அல்லது நாளை நாம் திருடும் போது மற்றவர்கள் சப்போர்ட் செய்ய
வேண்டுமென்பதர்க்காக நாங்கள் நடுநிலை என கூறிக்கொண்டு தௌஹீத் ஜமாத்தை மட்டும்
எதிர்பதற்க்கு காரணம் இதுதான்.
நடுநிலை வேஷம்
போடுவோரில் ஆயிரத்தில் ஒருவர் அனைவரையும் சம்தூரத்தில் வைத்து நடந்து கொள்கிறார். அவர் துரோகம் செய்யவில்லை,
நடிக்கவில்லை, ஆனாலும் நல்லவர்களையும்
கேட்டவர்களையும் சம தூரத்தில் வைக்கும் குற்றம் செய்தவராக ஆகிறார். ஆனால் அதிகமான
நடுநிலைவாதிகள் சந்தர்ப்பவாதிகளாகவும் சத்தியதுக்கு எதிராக காலம்
இறங்கியவர்களுக்கு பலம் சேர்ப்பவர்களாகவும் தான் உள்ளனர்.
தௌஹீத் ஜமாத்துக்கும்
மற்ற இயக்கங்களுக்கும் போராட்ட வழிமுறைகள் உள்பட பல வேறுபாடுகள் உள்ளன.
போராட்டம்
நடத்துவது நம்முடைய இருப்பைக்காட்டி கொள்வதற்க்கு அல்ல. கோரிக்கைகளை வென்றெடுக்க
தான் போராட்டம் நடத்த வேண்டும். ஆனால், அதிகமான முஸ்லிம்
இயக்கங்களை எடுத்து கொண்டால் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு பெரிய கட்சியுடன்
கூட்டணி வைக்கிறார்கள். தேர்தலின் பொது ஆதரவு அளிப்பதுடன் நீர்க்காமல் தொடர்ந்து
அதில் நீடிக்கிறார்கள்.
இவர்கள் திமுக
கூட்டணியில் இருந்தால் அந்த கட்சியின் கேடுகளை எதிர்த்து போராட மாட்டார்கள்.
அதிமுக கூட்டணியில் இருந்தால் அதன் தீமைகளை எதிர்த்து போராட மாட்டார்கள்.
திமுக ஆட்சி
நடக்கும் பொது அக்கட்சியுடன் கூட்டணி கண்டவர்கள் இட ஒதுக்கீட்டுக்காக கூட
போராடியதில்லை,.
அதிமுகவுடன்
கூட்டணி கண்டவர்கள் அக்கட்சியின் முஸ்லிம் விரோத நடவடிக்கைக்காக போராடியதில்லை.
இரண்டு
கூட்டணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டால்தான் போராட்டகாலத்திருக்கே வருகிறார்கள்.
அப்படியானால்
இவர்களின் நோக்கம் கோரிக்கைகள் அல்ல, தாங்கள் கூட்டணிக்கட்சிக்கு
ஆதரவாக மக்களை மாற்றுவதும் அதைக்காட்டி அரசியல் ஆதாயம் அடைவதும் தான்.
இப்படி நன்றாக
தெரியும் போது நாம் எப்படி அவர்களுடன் சேர்ந்து போராட முடியும்? நாளைக்கு
கோரிக்கைகளை கைகழுவி விட்டு நீர்த்து போக செய்து விட்டால் நடத்திய போராட்டம் அர்த்தமில்லாமல்
போய்விடும்.
தௌஹீத்
ஜமாத்தும் ஒரு நேரத்தில் அதிமுகவை ஆதரித்துள்ளது, ஒரு கட்டத்தில்
திமுகவை ஆதரித்ட்டுள்ளது ஆனால் தேர்தல் முடிந்த கணமே ஆதரித்த கட்சி தவறு செய்யும்
போது எதிர்த்து களமிறங்க தயங்கவில்லை.
ஜெயலலிதாவை
2001 சட்டமன்ற தேர்தலில் ஆதரித்தோம், தேர்தல்
முடிந்தவுடன் நரேந்திர மோடிக்கு 64 வகையான உணவளித்து விருந்து அளித்த போது உடனே
ஜெயலைத்தாவை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்தினோம். அது போல சென்ற நாடாலாமன்ற
தேர்தலில் திமுகவை ஆதரித்தோம் ஆனால் அதை தொடர்ந்து முதல்வர் வீடு முற்றுகை
உள்ளிட்ட பலபோராட்டளை தௌஹீத் ஜமாஅத் நடத்த தயங்கவில்லை.
இது போல
ஒருபக்க சார்பு இல்லாமல் முஸ்லிம் இயக்கங்கள் செயல்படுவதில்லை என்பதால் அவர்களின்
சுயநலனுக்கு நாம் உதவ கூடாது என்பதர்க்காக நாம் மற்றவர்களின் போராட்டங்களில்
கலந்து கொள்வதில்லை.
சில லெட்டர்
பேடு இயக்கங்கள் தங்களை வளர்த்து கொள்வதர்க்காக சார்பற்ற போராட்டங்கள்
நடத்தினாலும் அவர்கள் மார்க்கத்தில் சமரசம் செய்கின்றனர். தாரை தப்பட்டை அடித்தும், தனிநபர் துதி
பாடியும் இன்னும் பல சமரசங்களை செய்வதையும் பார்க்கிறோம். முஸ்லிம்
அல்லாதவர்களையும் இஸ்லாம் பற்றி அறியாதவர்களையும் அழைத்து
கவுரவப்படுத்தும்வகையிலும் அவர்களை சமுதாயத்தின் காவலர்களாகவும் சித்தரிக்க முயல்கின்றனர்.
இவற்றில்
தௌஹீத் ஜமாத்த்ரிக்கு கடுகல்வும் உடன்பாடு இல்லாததால் மற்றவர்களின் போராட்டங்களில்
கலந்து கொள்வதில்லை.
சுருக்கமா சொல்லனும்னா!!!!!!!!! தூங்குறவனை
எழுப்பிடலாம், தூங்குற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியாது.
இந்த நடுநிலைவாதி, போலி ஒற்றுமை பேசுறவாதிகள் இவர்கள்
எல்லாம் ஒரே வகைதான்.................
1 கருத்து:
brother.. எந்த இயக்கத்தையும் சாராதவர்கள் என்றால்... இயக்கம் அற்றவர்கள் என்றே பொருள். நீங்கள் பதிவு செய்து இருபது இயக்கத்தில் இருப்பவர்களை பற்றி. ஒரு இயக்கத்தை சார்ந்து இருப்பவர்கள் எப்படி நாடு நிலையாளர்களாக இருக்க முடியும் என்று சற்று சிந்தித்து பாருங்கள். உங்கள் ஜமாத்தின் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லாமல்.... எங்களை எதிர்கிறார்கள்.. எங்களை எதிர்கிறார்கள் என்று எழுது இருப்பதில் இருந்து நீங்கள் ஒரு வட்டத்தில் மட்டுமே வாழ்ந்து கொண்டு இருகிறீர்கள் எனபது வெட்ட வெளிச்சம். அவசரத்தில் எழுதுவதை விட்டு விட்டு நிதானத்தை கடைபிடியுங்கள். இதை படித்து விட்டு உடனே.. என்னை எதிர்கிறார்.. எங்கள் சமாதி எதிர்கிறார் என்று நெனைகாதீர்கள். என்னுடைய கருத்து உங்களுடைய பதிவுக்குதான்.
கருத்துரையிடுக