ஏன் இந்த பாரபட்சம்? (எங்கே போனார்கள் இந்த மமக )
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செய்தியில் உள்ள இரண்டு விபத்துகளும் அடுத்தடுத்த நாட்களில் தமிழ்நாட்டில் நிகழ்ந்ததாகும். இரண்டிலும் அப்பாவி மக்கள் சிலர் உயிரிழந்தனர். ஆனால் அதற்கு அரசு கொடுத்த முக்கியத்துவம் தான் பாரபட்சமாக உள்ளது.
மே 1 ம் தேதி நிகழ்ந்த விபத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா உடனடியாக உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு 25000 மற்றும் 10000 வீதமும் நிவாரன நிதி அறிவித்துள்ளார். அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் அடுத்த நாளே நாகூரில் நட்ந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து அரசு எந்த செய்தியும் வெளியிடவில்லை. எந்த நிவாரனமும் அறிவிக்கவில்லை.
நம்மைப் பொறுத்தவரை எல்லா உயிரும் விலை மதிப்பில்லாதது தான். ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்துக்கு மிக மிக முக்கியமானவர்தான். உயிர்களுக்
எல்லோரையும் போலத்தான் நாமும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்துகிறோம். அரசாங்க விதிமுறைகளை பின்பற்றுகிறோம். சட்டத்தை மதிக்கின்றோம். எதிலுமே நாம் வித்தியாசம் காட்டுவதில்லை. ஆனால் நம் விஷயத்தில் அரசாங்கம்....?
பொதுவாகவே எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அ.தி.மு.க. முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி எனவும், தி.மு.க. முஸ்லிம்களுக்கு நன்பனாகவும் உருவகம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இஸ்லாமிய சமுதாயத்தை பார்க்கும், பயன்படு
தினமும் சூரியன் உதிக்கிறதோ இல்லையோ, நமது சமுதாயத்தில் ஒரு புதிய கட்சியோ / இயக்கமோ உதயமாகி விடுகிறது.
ஒரு காலத்தில் காங்கிரஸ், தி.மு.க. வுக்கு இணையாக இருந்த முஸ்லிம் லீக் இன்று எத்தனை எத்தனை லீக் காக உருவெடுத்துள்ளது. மொத்தம் எத்தனை லீக் கட்சிகள் உள்ளது என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு அறிவிக்கலாம். ஆக மொத்தத்தில் எல்லாமே வீக்காகி போய் உள்ளது. பழைய பெருமை பேசுவதிலும், மற்ற இயக்கங்களும், கட்சிகளும், தங் கள் எதிர் அணி தலைவர்களும், தொண்டர்களும் செ ய்த தவறுகளை கண்டுபிடித்து விளம்பரப்படுத்துவதிலேயே மூழ்கியுள்ளன.மொத்தத்தில் சமுதாயத்தைப் பற்றி யாருக்கும் அக்கறையில்லை என்பதே நிஜம்.
நாகூரில் நடந்த விபத்தில் இறந்தவர்கள் தங்களது கொள்கையை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் கண்டு கொள்ளவில்லையா? அல்லது எந்த லீக்கிலும் உறுப்பினர் இல்லை என்பதால் விட்டுவிட்டார்களா? நமது சமுதாய தலைவர்கள் அனைவரும் எல்லா முஸ்லிம்களையும் எப்போது ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கிறார்களோ, அப்போதுதான் சமுதாயத்திற்காக சிந்திப்பார்கள். சமுதாய நலனுக்காக உழைப்பார்கள்.
சமுதா யமும் உருப்படும். மீண்டும் முன்னேற துவங்கும். மற்ற சமுதாய, கட்சிகளின் பார்வையில் மதிப்புமிக்கதாக உயரும். எப்போது வரும் அந்த நாள்?
அடுத்து இப்போது மே 3 ஆம் தேதி வேலூர் குடியாத்தம் அருகில் கோயில் திருவிழாவில், நாகூரில் நடந்ததை போலவே மின்சாரம் தாக்கி 5 பேர் பலியாகியுள்ளனர். உடனடியாக அரசாங்கம் அங்கு இறந்தவர்களுக்காக நிவாரண தொகையை அறிவித்துள்ளது. ஆனால் அதற்கு முதல் நாள் நாகூரில் நடந்த விபத்தில் இறந்தவர்களுக்காக இதுவரை நிவாரணம் அறிவித்ததாக தெரியவில்லை.
நமது தலைவர்களின் உறக்கமும் இன்னும் கலையவில்லை. எப்போது கலையும் இவர்களது உறக்கம். எப்போது நமது சமுதாயம் ஈடேறும்....? விடையில்லாத விணாக்கள்...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக