OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 7 மே, 2012

பிஞ்சுகளின் சுமையைக் குறைக்க அரசு முன்வருமா?

ரு காலத்தில் ஐந்து வயதில் தான் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பார்கள். இன்றோ தாய்மையின் அரவணைப்பு தேவைப்படும் இரண்டு வயது மூன்று வயதிலெல்லாம் பிள்ளைகளை ஆங்கில வழிக்கல்வியில் சேர்த்துவிட்டு விடுகிறார்கள். மேலும், ஐந்தாம் வகுப்புவரை ஒரு சிலேட்டும், சில புத்தகங்களும், ஒன்றிரண்டு நோட்டுகளும் இருந்த நிலை மாறி, இன்று 
L .K .G. பிள்ளைகள் கூட ஒரு பொதி அளவு புத்தகங்களை சுமக்க முடியாமல் சுமத்து செல்வதைக் காணமுடிகிறது. இவ்வாறு பிஞ்சுகள் கஷ்டப்படுவதை யாரும் பெரிய அளவில் அலட்டிகொள்வதில்லை. ஆனால் இவ்வாறு பிள்ளைகள் புத்தகச் சுமையை சுமப்பது அந்த குழந்தைக்கு பாதிப்பை உண்டாக்கும் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.



பள்ளி செல்லும் சிறுவர்கள் புத்தகபை சுமந்து செல்வதால் ஏற்படும் பாதிப்பை கண்டறிவதற்காக சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட 10 முக்கிய நகரங்களில் வசிக்கும் பள்ளிச்சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் அஸ்சோசம் என்ற சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில் 5 முதல் 12 வயதுள்ள பள்ளிச்சிறுவர்கள் அளவுக்கு அதிகமாக முதுகில் புத்தக சுமையை தினமும் சுமந்தபடி செல்வதால் அவர்கள் கடுமையான முதுகுவலியால் அவதிப்படுவதாகவும், முதுகில் சுமை ஏற்றப்பட்டு குனிந்தவாறு செல்வதால் 12 வயதுக்குட்பட்ட 1500 குழந்தைகள் முதுகெலும்பு பாதிக்கப்பட்டு அவதிப்படுவதாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் குறைந்த வயதில் அதிக சுமையை சுமப்பதன் மூலம் அந்த குழந்தைகளின் முதுகு தண்டு வடம் பாதிக்கப்படும் அபாயமும், சதைபிடிப்பால் பாதிக்கப்படும் அபாயமும் இருப்பதாக சுகாதார ஆய்வு நிறுவன கமிட்டி தலைவர் பி.கே.ராவ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் குழந்தைகள் நலனில் அக்கறை காட்டும் வகையில் வெளிநாடுகளில் இருப்பதுபோன்று பாடத்திட்டங்களை நவீனப்படுத்தி, புத்தகங்களை குறைப்பதன் மூலம் பிஞ்சுகளின் சுமையைக் குறைக்க அரசு முன்வருமா?

கருத்துகள் இல்லை: