OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 7 மே, 2012

நன்றி சகோதரி - ஷர்மிளா ஹமீத்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கின்றேன்.....ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாவதாக ஆமீன்....!!
ஏங்க இந்த கொலவெறி? இல்ல தெரியாமதான் கேக்குறேன் ஏன் இந்த கொலவெறி? யார கேக்குறா இவ' அப்டின்னு யோசிக்கிறீங்களா? வேற யார???  ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்தின் மேல தீவிரவாதின்னு முத்திர குத்துற உங்கள மாதிரி ஆட்கள பார்த்துதான் கேக்குறேன்...!!! ஊர்ல உலகத்துல ஒரு குண்டுவெடிப்பு நடந்துட கூடாதே... உடனே எங்க இருந்துதான் இவங்களுக்கு தகவல் கிடைக்குமோ தெரியாது ...
இந்த தாக்குதலுக்கு இன்ன இஸ்லாமிய இயக்கம் பொறுப்பேற்றது அப்டின்னு ரேடியோவிலும் டிவியிலும் மாத்தி மாத்தி பிளாஷ் நியூஸ் போட்டு இதுக்கு காரணம் இஸ்லாமிய இயக்கங்கள்தான்னு மக்களை கண்மூடித்தனமா நம்ப வச்சுடுறாங்க.....அப்பப்பப்பா ..... என்ன ஒரு கடமை உணர்ச்சி....... புல்லரிக்குதுங்கண்ணா...!!

சரி இவ்ளோ உறுதியா சொல்றிங்களே!!  யாரு ராசா உங்களுக்கு தகவல் தந்தாங்க?ன்னு கேட்டா கொடுக்குறாய்ங்க பாருங்க ஒரு டீடெய்லு...!! அப்பப்பப்பா.........  அந்த இயக்கத்தோட பேருல எஸ்.எம்.எஸ் வந்துச்சு ஈமெயில் வந்துச்சுன்னு சொல்லுவாங்க..... எப்பா ராசா!!! எந்த காலத்துலப்பா இருக்கீங்க? இப்பல்லாம் யாரு வேணாலும் யாரோட பேர்ல வேணும்னாலும் இதெல்லாம் அனுப்ப முடியும் ... இஸ்லாத்திற்கெதிரான வன்முறையை தூண்ட உங்கள சார்ந்த யாரோ ஒருத்தன் செஞ்ச வேலையா கூட இருக்கும்!(சமீபத்துல கூட கோவில்ல மாட்டுகறிய வீசி மதக்கலவரத்த கெளப்பி விடலாம்ன்னு கேனத்தனமா பிளான் பண்ணி அதுல சொதப்பி ஒருத்தன் கோக்கு மாக்கா சிக்குனானே அந்த மாதிரியான ஆட்களோட வேலையா கூட இருக்கலாம் ) இதெல்லாம் ப்ளாஸ் நியூஸில் வராது! செய்திதாளின் வேண்டாவெறுப்பா செய்தியாக எங்கோ ஒரு மூலையில் போட்டு வச்சுருப்பாய்ங்க! சில நேரத்துல பூதகண்ணாடி போட்டாலும் தேட முடியாது!!

என்னமோ நாங்க எல்லாம் எங்க வீட்ல பாம் பாக்டரி வச்சு நடத்துற மாதிரியும்.....எங்க பிள்ளைங்கள டெர்ரரிஸ்ட் ஆவது எப்படின்னு கோர்ஸ்ல சேர்த்து படிக்க வைக்குற மாதிரி இல்ல இருக்கு இஸ்லாமியர்களை பத்துன உங்களோட கணிப்பு.....!!

சும்மா பரபரப்பை கிளப்புவதற்காக மீடியாக்கள் சொல்ற தகவல்களை மட்டும் கண்மூடித்தனமா நம்பி ஏமாறாதிங்க மக்கா....



இஸ்லாத்த பத்தியோ அல்லது எந்த ஒரு விஷயத்த பத்தியோ விமர்சிக்க அல்லது ஒரு முடிவுக்கு வர மொதல்ல அந்த விஷயத்த பத்தி ஆராய்ஞ்சு பாருங்க......  பல உண்மைகள் உங்களுக்கே தெரிய வரும்............!! ( இந்த வரியானது எந்த விஷயத்திலேயும் நடுநிலையோட யோசிக்கிறவங்களுக்கு மட்டுமே (நடுநிலைமை என்ற சொல் உலகத்தில் இல்லைன்னு சொல்றீங்களா??? அட .. மனசாட்சின்னு ஒன்னு இருக்குதானே?) மனசுக்குள்ள இஸ்லாத்து மேல வன்மத்த வச்சுக்கிட்டு யோசிச்சா உண்மை தெரியாது மக்கா.... அதுக்கு கம்பெனி பொறுப்பில்ல ஆமா சொல்லிப்புட்டேன் )

இஸ்லாம் தீவிரவாதத்த வன்மையா கண்டிக்குது... அட தீவிரவாதம் என்னங்க...  ஒரு உயிரை தகுந்த காரணம் இல்லாம கொல்றதுக்குக்கூட இஸ்லாம் தடை விதிச்சு இருக்கு தெரியுமா??
இதுக்கு ஆதாரம் இருக்கான்னு இப்போ கேப்பீங்களே??? வெரி குட்..
இப்போதான் கொஞ்சமா யோசிக்க ஆரம்பிச்சு இருக்கீங்க..... கீழ போட்டு இருக்குற அல்
குர்ஆன் வசனங்கள கொஞ்சம் பாருங்க......



"ஒரு கூட்டத்தார் மீது நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு காரணமாக நீதி செய்யாமலிருக்க உங்களை தூண்ட வேண்டாம். நீங்கள் நீதியுடன் நடங்கள்". அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானதாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)

ஒரு போர்க்களத்தில் பெண்ணொருத்தி கொல்லப்பட்டுத் கிடப்பதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அதை ஆட்சேபித்து பெண்களையும், சிறுவர்களையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) – நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
போர்க்களத்தில் வரம்புமீறாதீர்கள்! சிறுவர்களையும், மத குருமார்களையும் கொல்லாதீர்கள் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: புரைதா(ரலி) நூல்கள்: முஸ்லிம்)

"பெண்களையும் ,குழந்தைகளையும், மதகுருமார்களையும்" கொல்லக் கூடாதாம்....!!! நோட் திஸ் பாயிண்ட் மக்காஸ்.... போரின் போதும்  கூட  வரைமுறை வைக்கிறாங்க...
இணை வைப்பவர்களில்(அதாவது மாற்று மதத்தவர்களில்) உள்ள எவரேனும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் இறைவனின் வார்த்தையை அவர் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் கொடுப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்த்து விடுவீராக! ஏனெனில் அவர்கள் அறியாத மக்களாக உள்ளனர். (அல்குர்ஆன் 9:6)
 வேற மதத்தை சார்ந்தவங்கன்னாலும் அவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணுமாம்...!!!

5:32. இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”


இப்ப சொல்லுங்க மக்கா..... ஒரு உயிரை கொல்றது மனித இனத்தையே கொலை செஞ்சதுக்கு சமம்ன்னு போதிக்கிற இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்குதா?

இல்ல இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள்ன்னு சொல்லி தேவ இல்லாம அவங்க மேல தாக்குதல நடத்துற அமெரிக்கா போன்ற நாடுகள் தீவிரவாதத்ததை  ஆதரிக்குதா?

இதெல்லாம் படிச்சா எங்க கொழந்தைங்களாம் தீவிரவாதியாக போகுதுங்க??? ஹா..ஹா..ஹா... வாட் எ ஜோக்... வாட் எ ஜோக்...

Terrorist Attacks on U.S. Soil by Group, From 1980 to 2005, According to FBI Database

 
சமீபத்துல வெளியான சி.என்.என் ரிப்போர்ட் என்ன சொல்லுதுன்னா.... அமெரிக்காவுல 
1980 ல இருந்து 2005 வரை நடந்த பெரும்பான்மையான பயங்கரவாத தாக்குதல்களை நடத்துனது முஸ்லிம்கள் இல்லையாம்..... இந்த மாதிரி சம்பவங்கள்ள ஈடுபட்ட முஸ்லிம்கள் வெறும் ஆறு சதவிகிதம் பேர்தானாம்...  மீதி 94%  முஸ்லிம் அல்லாதவர்களாம்.... ஆனா பயங்கரவாத முத்திரை குத்தப்படுவது என்னமோ 100 சதவீதம் முஸ்லிம்கள் மேலதான்....!!

 ஒரு தவற முஸ்லிம் அல்லாத ஒருத்தர் செஞ்சா அங்க அந்த தனிமனிதனோட பேரு இல்லன்னா அவன் சார்ந்து இருக்குற இயக்கத்தோட பேருதான் பிரதானப்படுத்தப்படுது.
அதே தவற ஒரு முஸ்லிம் செஞ்சா அங்க இஸ்லாத்தின் பேரே முன்னிறுத்தப்படுது...  அந்த தவறு மேல மதச்சாயம் பூசப்படுது....ஏன் இந்த பாகுபாடு?

வாள் முனையில் பரப்பப்பட்டதாம் இஸ்லாம்... அப்படி சொல்றவங்களாம் அப்படியே இந்த பக்கம் வாங்க! படிக்கிற காலத்துல வரலாறுன்னு ஒரு சப்ஜெக்ட் வருமே... பாத்திருக்கீயளா? அதேதான்.. அந்த காலத்துல இந்தியாவுல அரசர்கள் ஒரு நாட்டை கைப்பற்ற  போர் செய்ததெல்லாம் எந்த லிஸ்ட்ல சேர்ப்பீங்க சகோக்களா???? தன் எல்லையை பாதுகாக்க போர் செய்ததை எந்த லிஸ்ட்ல சேர்ப்பீங்க மக்களா!!   இந்திய அரசர்களுக்கு ஒரு நியாயம்? முஸ்லீம் களுக்கு ஒரு நியாயமா? அடகொடுமைகளா... பூவோட சேர்ந்தும்  நாரும் மணக்கத்தான்ய்யா செய்யும்! வலுக்கட்டாயமா  மதத்தை திணிக்க வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு?? இன்னைக்கு உலகிலேயே அதிகமா பரவும் மதமே இஸ்லாம் தான்!  எல்லாரும் கத்தியும் கடப்பாரையும் எடுத்துகொண்டுட்டு போயி மெரட்டியா கலிமா சொல்ல வச்சு முஸ்லீமாக்கினோ??

பிரிவினைவாதத்தை தூண்டுவது நாங்களா இல்லை நீங்கள் சார்ந்து வாழும் இந்த சமூகமா?

  • திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான்.
  • திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்.”

இத சொன்னவர் யார் தெரியுமோ? மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்கள்....!! நாங்க சொன்னாதான் நம்ப மாட்றிங்க.. சுஜாதா சொல்லிட்டாரு நம்புவீங்களா? 


முடிவை அறிவுள்ள ,சிந்திக்கும்திறன் பெற்ற உங்கள் கைகளில் விட்டு விடுகிறேன்............  

          நன்றி :)

தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்மந்தமே இல்லைன்னு கேக்க போறீங்களா? வாங்க உங்களத்தான் எதிர்பார்த்தேன்...... கொஞ்சம் கீழ பாருங்க :)
ஆம் நாங்கள் தீவிரவாதிகள்தான்.......!!!
அன்பை காட்டுவதிலும்.....அமைதியை காப்பதிலும்....நேர்மை காப்பதிலும்.......

அறத்தை நிலை நாட்டுவதிலும்....பண்பை பேணுவதிலும்......

நாங்கள் தீவிரவாதிகள்தான்...!!! 

சக உயிர்களை வதைப்பதிலோ....
படுகொலைகள் செய்வதிலோ அல்ல....!!!



நன்றி சகோதரி  - ஷர்மிளா ஹமீத்

கருத்துகள் இல்லை: