OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

நீண்ட வரிசைக்கும், குற்ற செயல்களுக்கும் முற்றுப்புள்ளி.


நான் ஏற்கனவே நம்ம சென்னையில் இருக்கும் பாஸ்போர்ட் அலுவலகத்தின் அவல நிலையை பற்றி ஒரு பதிவு போட்டு இருந்தேன்................அது எந்த புண்ணியவான் படித்தார் என்று தெரியவில்லை.................இதோ ஒரு நற்செய்தி................இது வெறும் செய்தியாக மட்டுமில்லாமல் செம்மையாக செயல்பட்டால் சரி.................


சாலிகிராமம் : ""நீண்ட வரிசைக்கும், குற்ற செயல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்படுவது சிறப்பு'' என, தலைமை பாஸ்போர்ட் அதிகாரி முக்தேஷ் குமார் மிஸ்ரா பேசினார். ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையில், சென்னையில் அமைந்தகரை, சாலிகிராமம், தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் புதிதாக, பாஸ்போர்ட் சேவை மையங்கள் நேற்று சென்னையில் துவங்கின. சென்னை சாலிகிராமத்தின் புதிய பாஸ்போர்ட் சேவை மையத்தை, உள்துறை அமைச்சகத்தின் முதன்மை செயலர் ரமேஷ் ராம் மிஸ்ரா மற்றும் தலைமை பாஸ்போர்ட் அதிகாரி முக்தேஷ் குமார் பர்தேசி ஆகியோர் திறந்து வைத்தனர்...

இவ்விழாவில், தலைமை பாஸ்போர்ட் அதிகாரி முக்தேஷ் குமார் பேசியதாவது: நாட்டில் இந்த ஆண்டிற்குள், மொத்தம் 77 சேவை மையங்கள் செயல்படவுள்ள நிலையில், தற்போது சென்னையின் புதிய மூன்று சேவை மையங்களையும் சேர்த்து, நாட்டில் 18 சேவை மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் மூன்று, திருச்சியில் இரண்டு, மதுரையில் இரண்டு, கோவையில் ஒன்று என, மொத்தம் எட்டு சேவை மையங்கள் செயல்படுவது சிறப்பு. மற்ற மாநிலங்களில், மீதமுள்ள சேவை மையங்கள் விரைவில் திறக்கப்படும். சென்னையைப் பொறுத்தவரை ஒரு பாஸ்போர்ட் அலுவலகம் என்ற நிலை மாறி, இன்றைக்கு நான்கு அலுவலகங்களாக விரிந்துள்ளன. இதன் மூலம், சாஸ்திரி பவன் அலுவலகத்தில் நீண்ட வரிசையில் விண்ணப்பதாரர்கள் அதிக நேரம் காத்திருப்பதை, இனி தவிர்க்கலாம். சேவையையும் அதிகரிக்க முடியும்.


இந்த சேவை மையங்களில் விண்ணப்பதாரர்களின் கைரேகை பதிவு செய்யப்படுவதால், ஒன்றுக்கு மேல் பாஸ்போர்ட் பெறும் குற்றச் செயலை தடுக்க முடியும். இப்படி நீண்ட வரிசைக்கும், குற்ற செயல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்படுவது சிறப்பு. புதுச்சேரியில் தற்போது இயங்கும் பாஸ்போர்ட்டிற்கான விண்ணப்பங்களை பெறும் மையம், அடுத்த ஆண்டில் சேவை மையமாக மாற்றப்படும். இவ்வாறு முக்தேஷ் குமார் பர்தேசி பேசினார். நிகழ்ச்சியில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி, சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி., சைலேந்திர பாபு, சென்னை மண்டல அதிகாரி செந்தில் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.


ஆன்-லைனில் விண்ணப்பிக்க தெரியாதா? : விண்ணப்பதாரர்கள் ஆன்-லைனில் விண்ணப்பித்த பின், சேவை மையத்திற்குச் செல்வதற்கான தேதி, நேரம் இரண்டையும் பெற முடியும். இதன் மூலம், குறிப்பிட்ட நேரத்திற்கு 15 நிமிடத்திற்கு முன்பாக சேவை மையத்திற்குச் சென்றால் போதுமானது. ஆன்-லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள், நேரடியாக சேவை மையங்களுக்குச் சென்று, அங்கே மண்டல அலுவலர்களின் உதவியுடன் ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயங்களை, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி செந்தில் பாண்டியன் உறுதிப்படுத்தினார். 

source: dinamalar

கருத்துகள் இல்லை: