OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 5 செப்டம்பர், 2011

பயனுள்ள குறிப்புகள்

01) அரிசி, காய்கறிகள் கழுவிய நீரை வீட்டிலுள்ள செடிகளுக்கு கொட்டினால் செடிகள் செழிப்பாய் வளரும்.

02) மிதமான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்த பின்பு நறுக்கினால் கண்கள் எரியாது.

03) சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எறும்பு வராமல் இருக்க, அந்த பாத்திரத்தினுள் சில கிராம்புகளை போட்டால் எறும்புகள் வராது.

04) உபயோகப்படுத்தாமல் இருக்கும் பிளாஸ்டிக் குடங்களை பாதிக்கு மேல் வெட்டி விட்டு அதனை குப்பைக் கூடையாகவோ அல்லது அதில் செடிகளை வளர்க்கவோ செய்யலாம்.

05) ரப்பர் பேண்டு வைத்திருக்கும் டப்பாவில் சிறிது டால்கம் பவுடரை போட்டு வைத்திருந்தால் ரப்பர் பேண்ட் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.

06) டூல் பாக்சில் ஒரு சாக்பீசை போட்டு வைத்தால், அதில் உள்ள டூல்ஸ் துருப்பிடிக்காமல் இருக்கும்.

07) பாச்சா உருண்டைகளை போடுவதை விட கற்பூர கட்டிகளை புத்தக அலமாரிகளில் போட்டு வைத்தால் எந்த பூச்சிகளும் வராது. மேலும் அந்த அலமாரிகளில் ந்ல்ல வாசனையும் வரும்.

08) வாட்டர் பில்டரில் சிறிது துளசியை போட்டு வைத்தால் தண்ணீர் மணமாக இருக்கும்.

09) தேங்காயை சரிபாதியாக உடைக்க, தண்ணீரில் ந்னைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

10) பீட்ரூட்டை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால், நரம்புகளுக்கு வலிமை உண்டாகும்.

11) சுக்கில் நீர் விட்டு நன்றாக அரைத்து பின்பு அதனை கொதிக்க வைத்து சூட்டுடன் மூட்டுகளில் பூசி வந்தால் மூட்டு வலி, வீக்கம் குறையும்.

12) ஒன்று அல்லது இரண்டு பேரீச்சம் பழத்தினை முதல் நாள் தேனில் ஊறவைத்து பின் மறுநாள் காலை உணவுக்கு முன் சாப்பிட்டால் இதய பலவீனம், படபடப்பு நீங்கும்.

13) சிறிது வெந்தய பொடியை மோரில் கலந்து குடித்தால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

14) கொத்தமல்லி விதையை வெந்நீரில் ஊறவைத்து காலையில் குடித்து வந்தால் தலைச்சுற்றல், கிறுகிறுப்பு நீங்கும்.

15) ஆரோக்கியமாக வாழ சில வழிகள்:
அ) காலை உணவை கட்டாயம் உண்ண வேண்டும்.
ஆ) தயிர், கீரை போன்றவற்றை இரவில் தவிர்க்க வேண்டும்.
இ) பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
ஈ) வடக்கு த்சையில் தலை வைத்து தூங்கக் கூடாது.
உ) உணவு உண்டவுடனேயே உறங்கக் கூடாது.
ஊ) தொடர்ந்து அதிக நேரம் படிக்கவோ, ஒரு பொருளை உற்று பார்க்கவோ கூடாது. அடிக்கடி கண்களுக்கு அசைவு கொடுக்க வேண்டும்.

16) வீட்டில் உபயோகிக்காத பொருட்களை தகுதி உள்ளவர்களுக்கு தானமாகவோ, விலைக்கோ கொடுத்து விட்டால், தேவையில்லாமல் பொருட்கள் சேர்வதை தடுக்கலாம்.

17) எப்போதும் மூன்று பின் (தீரி பின்) பிளக்கை தான் உபயோகிக்க வேண்டும். சுவிட்சு ஆன் செய்யப்பட்டுள்ள போது பிளக்கை எடுக்கவோ, சொருகவோ கூடாது.

18) குளிர் சாதனப் பெட்டியை அடிக்கடி தேவையில்லாமல் திறந்தால் மின்சார செலவு அதிகமாகும்.

19) எல்லோரது வீட்டிலும் கண்டிப்பாக ஒரு முதலுதவி பெட்டி இருக்க வேண்டும். அதில் காய்ச்சல், தலைவலி, வெட்டு காயம் போன்றவற்றிற்கு தேவையான ம்ருந்து, மாத்திரைகள், பேண்ட் எய்டு, காட்டன், தைலம், ஆயிண்ட்மெண்ட், டிங்சர், டெட்டால், ஆண்டிபயாடிக் பவுடர் போன்றவற்றை வைத்திருத்தல் அவசியம்.

20) இஞ்சியானது உடல் சூட்டை அதிகமாக்கி, உடலில் கொழுப்புச்சத்தை குறைக்கும்.

21) பூண்டானது இருதய நோய் தடுப்பிற்க்கு உதவும்; சிறுநீரை உடலில் இருந்து வெளியேற்றுவதற்க்கும், உடலை இளைக்க செய்வதற்கும் உதவுகிறது.

22) பேருந்தில் பயணம் செய்யும் போது எலுமிச்சம் பழத்தினை/வற்றலை வாயில் போட்டு கொண்டால் வாந்தி வராது.

23) ஒரு சில துளசி இலைகளை தினமும் தண்ணீருடன் சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண் வராது.

24) அரைக் கீரையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும்.

25) பிரண்டையை வதக்கித் துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் சாகும்; எளிதில் ஜீரணமாகும்.

1 கருத்து:

Mohamed Faaique சொன்னது…

அருமையான தகவல்களை அள்ளித் தந்திருக்கிறீர்கள். நன்றி