OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

அணுமின் நிலையங்கள் நாட்டின் சாபக்கேடுகள்...................கவனிக்குமா இந்த அரசாங்கம்...........




நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலைய சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 127 பேர் 11 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு, பிரதமரின் தூதர் வருகைக்குப்பிறகும், முதல்வருடனான சந்திப்புக்குப்பிறகும் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.இந்தப் போராட்டத்துக்குத் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் ஆதரவுத் தெரிவித்தனர்.

கூடங்குளம் அணுமின் நிலையம் கூடாது என்று அப்பகுதி மக்கள் போராடுவதில் நியாயம் இருக்கிறது. அணுமின் நிலையம் அமையுமானால், அணுஉலையிலிருந்து வெளியேற்றப்படும் கதிரியக்கம் உள்ள கனநீர் கடலில்தான் விடப்படும். அதனால் அப்பகுதியில் மீன்வளம் குறைந்துவிடும். மீன்வளத்தை நம்பிவாழும் கடலோர மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதுதான் இப்பகுதி மக்களின் அடிப்படை எதிர்ப்பாக இருக்கிறது.

அடிக்கடி ஏற்படும் பூகம்பத்தால் இப்போது, அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்படுமானால் அதன் பின்விளைவுகள் பற்றிய அச்சமும் சேர்ந்துகொண்டுவிட்டது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் பாதிக்கப்படும் சுற்றுக் கிராமங்களில் உள்ள மக்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய தொழில் பாதிப்புகளுக்கு, அணுமின் உற்பத்தி தொடங்கும் முன்னதாகவே இழப்பீடு வழங்குவதும், அணுக்கதிர் வீச்சு பாதிப்பு வளையத்துக்குள் வரும் கிராமங்களின் மக்கள் பாதுகாப்புக்காக அணுமின் நிலையத்தை திறக்கக்கூடாது என வலியுறுத்திப் போராடிவருகிறார்கள்.

இந்த அணு உலைகள் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளதால் விபத்துக் காலங்களில் ஏற்படும் கடும் நெருக்கடியைச் சமாளிக்கவேண்டிய சூழ்நிலையிலும் இருக்கின்றன.

கூடங்குளம் அணு உலை 2001 ம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டது. தொடங்கப் பட்ட சில நாட்களிலேயே அணு உலை கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும் மணலில் கடல் மண் கலக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் இப்போது புதிதாக சில அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளி வந்துள்ளன.

அணு உலை அமைந்துள்ள பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிலான பகுதி நுண்ம பாதுகாப்பு பகுதி (Sterilized zone) என்பதால் அங்கு தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை. அதிலும் அணுஉலை அமைந்திருக்கும் பாறைகளுக்குப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் கல் குவாரிகளுக்கு முற்றிலும் அனுமதியில்லை.

ஆனால் தற்போது அணு உலையிலிருந்து மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் கருங்கல் குவாரி செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணுஉலையின் அடித்தளத்தில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது விபத்து நிகழ்வதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப் பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் நெல்லை மாவட்ட ஆட்சியரை இரண்டு வாரங்களுக்குள் இதற்குப் பதிலளிக்க நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

அதோடு கூடங்குளம் பகுதி நிலஅதிர்வு வரைகோட்டில் உள்ளது என்பதும், நிலஅதிர்வு ஏற்பட்டால் ஜப்பான் புகுஷிமாவில் ஏற்பட்ட அதே நிலைமை இங்கும் ஏற்படும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த அணுஉலையைக் கட்ட இந்திய அரசு ஏற்கெனவே 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளது என்பதும், அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தில் பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காட்டை எட்ட வேண்டும் என்பதில் மத்திய அரசு குறியாக இருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக 15 ஆயிரம் கோடி செலவிட்டு இறுதி கட்டத்துக்கு வந்து இந்தாண்டு கடைசியில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் பாதிதான் தமிழகத்துக்கு கிடைக்கும் .

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் பகுதி அக்டோபரிலும், இரண்டாம் பகுதி 2012 ஜனவரியிலும் மின் உற்பத்தியைத் துவக்குவதற்குரிய பணிகள் நடந்து வருகிறது. ஒவ்வொன்றும் 1,000 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்டவை.

இதில் பயன்படுத்தப்படும் ரஷ்ய அணு உலை, 1985 முதல் ஐரோப்பாவின் பல பகுதிகளில் கணிசமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும், வேறெங்குமே பயன்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்படாத ஜைதார் உலை போன்று அல்ல என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த வகை உலை, இந்தியாவில் நிறுவப்படுவது இதுதான் முதல் முறை.

அதனால்தான் பயமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. தற்போது கூடங்குளத்தில் ஏற்பட்டிருக்கும் அணுஉலைபோல்தான் ரசியாவில் செர்னோபிலில் அணுஉலையில் 25 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த மிகக் கோர அணுவிபத்து இதற்கெல்லாம் எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. செர்னோபில் அணு உலை விபத்து என்பது 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள பிப்யாட் என்னும் இடத்துக்கு அருகில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தாகும்.

இது உலகின் மிக மோசமான அணு உலை விபத்து எனப்படுகின்றது. அனைத்துலக அணு ஆற்றல் நிகழ்வு அளவீட்டில் 7 ஆவது நிலையை எட்டிய ஒரே விபத்தான இதன் விளைவாக மோசமான கதிரியக்கம் வெளியேறியது. இந்நிகழ்வின்போது ஏற்பட்ட வெடிப்பினால் 30 பேர் இறந்தனர். எனினும் இவ்விபத்தினால் ஏற்பட்ட பின்விளைவுகளினால் இறந்தவர் தொகை அதிகமாகும்.

தற்போது அதேபோல் ஜப்பானில் சமீபத்தில் பூகம்பத்தால் நிகழ்ந்த அணு உலை விபத்தின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளார்கள். இதன் காரணமாக வளர்ச்சியடைந்த நாடுகள் பலவும் தங்கள் அணு உலைத் திட்டங்களை மறு பரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன.

உலகில் 450க்கு மேற்பட்ட அணு மின் நிலையங்கள் செயல்படுகின்றன. ஜப்பானில் சுனாமியால் நேர்ந்த சோகத்துக்கு பிறகு அணு உலைகள் குறித்த அச்சம் உலகளவில் அதிகரித்துள்ளது.

ரஷ்யா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அணுஉலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரஷ்யா மற்றும் ஜெர்மனி நாடுகளில் 2020 ஆண்டுக்குள் அனைத்து அணு மின்நிலையங்களையும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அணுஉலை உள்ள இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதன் கதிர்வீச்சு இருக்கும் என்று கூறப்படுகிறது. அணுமின் நிலையத்துக்கு அருகே உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அணு உலைகள் மனித இனத்தை அழித்து விடும். கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதற்கு அந்த பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அணுமின் நிலையம் அமைப்பதற்கு முன்பு மக்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும்.

கல்பாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அணு உலைகள் பூமிக்கு அடியில் 185 அடி ஆழத்தில் கட்டப்பட்டுள்ளன என்றும் விபத்து ஏற்பட்டால் பூமிக்கு அடியிலேயே புதைந்து போய்விடும் என்றும் துவக்கத்தில் சொன்னவர்கள், இன்று கல்பாக்கம் அணுமின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து இரண்டரை மீட்டர் உயரத்தில் உள்ளதாகவும், அதிவேக ஈணுலை நான்கரை மீட்டர் உயரத்தில் உள்ளதாகவும் சொல்லி இருப்பது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.

ஜப்பானின் ஃபுகுஷிமா கடல் மட்டத்திலிருந்து இதைவிட அதிக உயரத்திலும் தூரத்திலும் இருந்தும் பாதிப்பைத் தவிர்க்க முடியவில்லை.

புகுஷிமா அணு விபத்துக்குப் பிறகு பொதுவாக எல்லா இடங்களிலும் அணுமின் நிலையங்களுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ஜப்பானில் இரு தினங்களுக்கு முன்பு, அணுஉலைக்கூடங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மிகப்பெரிய பேரணி நடந்தது.

ஜப்பான் கடற்பகுதியில் ஏற்பட்டதுபோல், நமது நாட்டில் அந்த அளவுக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்படாது. எனவே அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட ஆழிப்பேரலைத் தாக்குதலில் தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் என்பதும் மறந்து விடக்கூடியதா?

தாக்குதலுக்கு கூடங்குளம் அணு மின் நிலையங்கள் உள்ளாகும்போது அது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். கூடங்குளத்தில் இருந்து 28 சதுர கி.மீ. சுற்றளவில் நாகர்கோவில் நகரத்தையும் உள்ளடக்கி 2 1/2 லட்சம் மக்கள் வாழ்கின்றனர்.

அணு உலைகளைத் தவிர்த்து மின்சாரம் தயாரிக்க அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், காற்றாலைகள், மரபு சாரா எரிசக்திகள் ஆகியன மட்டுமின்றி, என்றென்றும் கிடைக்கும் சூரிய சக்தி பெரும் அளவு மின் தயாரிப்பிற்கு ஆதாரமானதாகும். ஆகவே, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அணு மின் உலைகளைத் தவிர்க்க வேண்டும்.

தனது தலைமையிலான கூட்டணிக் கட்சியில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகளுடன் காங்கிரஸ் கலந்தாலோசித்து இசைவான முடிவிற்கு வந்த பின்னர்தான் சர்வதேச அணு ஆற்றல் முகமையின் ஒப்புதலை அது கோர வேண்டும் என அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அணு ஆயுத ஒப்பந்தத்தில் சம்பந்தப்படாத மூத்த அறிவியாலாளர்களுடன் ஒப்பந்தத்தின் ஷரத்துகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அணு ஆற்றல் முகமையின் தலைவர் பி.கே. ஐயங்கார், அணு ஆற்றல் ஒழுங்குபடுத்தும் வாரியத்தின் முன்னாள் தலைவர் கோபால கிருஷ்ணன் மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் எ.என்.பிரசாத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் சமீபத்தில் சுனாமி காரணமாக ஏற்பட்ட ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின், உலக அளவில் அணு மின் நிலையங்கள் குறித்த பயமும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் தான், கூடங்குளத்தில் மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள்அணுமின் உலைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகிறது.

இந்தியாவும், பிரான்சிடமிருந்து புதிதாக வாங்க உள்ள அணு உலைக்கு இத்தகைய மறுசோதனை மற்றும் தகுதிச் சான்றிதழை வலியுறுத்தி உள்ளது. ஆனால், கூடம்குளத்தைப் பொறுத்தவரை, ஃபுகுஷிமா சம்பவத்துக்குப் பிறகும், ஒரு மேலோட்டமான சோதனையே நடத்தப்பட்டு உள்ளது. இது திருப்தியளிப்பதாக இல்லை.

எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, நம்பகத்தன்மை கொண்ட நிபுணர் குழு பரிசோதித்து சான்றிதழ் வழங்க வேண்டும். அணுசக்தி துறை மற்றும் தேசிய அணுமின் கழகத்திற்கு அப்பாற்பட்ட சுயேச்சையான நிபுணர் குழு வெளிப்படைத் தன்மையோடு செயல்பட்டு சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் தேவைப்படும் ஆய்வு பயிற்சி போன்றவை அணு சக்தி துறையாலும் தேசிய அணு மின் கழகத்தாலும் முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். அத்துடன், கூடங்குளம் அணுமின் நிலையத்தை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அணுசக்தி விபத்து பொறுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.

இந்த அணுமின் நிலையத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்கிற மக்களின் கவலை குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இவற்றைத் திருப்திகரமாக செய்து முடிக்கும் வரை, கூடங்குளம் அணு மின்நிலையத்தில் மின் உற்பத்தி துவங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு: கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் இதனை சிந்திப்பார்களா>>>>>>>>>>>>>>>
நன்றி நண்பர்: சிராஜ்.B.S

வியாழன், 22 செப்டம்பர், 2011

அயாஸுதீன் மரணம் கற்றுத் தரும் பாடம்...!



சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அசாரூதீன் மகன் அயாஸுதீன் மரணம் அடைந்த செய்தி நம்மை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவர் மட்டுமல்ல அவருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற உறவினர் மகனும் மரணமடைந்துவிட்டார்.

1000சிசி திறன் கொண்ட சூப்பர் பைக்கில் அதிவேகமாக சென்றதால்தான் அவர் விபத்தில் சிக்க நேரிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேகமாக பைக் ஓட்டாதே என்று அயாஸுதீன் உடற்கல்வி ஆசிரியர்கள் பல முறை எச்சரித்தும் அவர் காதில் வாங்கி கொள்ளாததால் இதுபோன்ற கோர விபத்தில் சிக்கியுள்ளார்.

ஆனால், இளைஞர்கள் நினைத்தால் இதுபோன்ற சாலை விபத்துக்களை நிச்சயம் தவிர்க்க முடியும் என்பதே நமது எண்ணம். சமீபகாலமாக இந்தியாவில் 1,000 சிசி திறன் கொண்ட பைக்குகளை விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதற்கேற்ப, சூப்பர் பைக்குகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. சூப்பர் பைக்குகளை ஓட்டுவதற்கு ஏற்ற சாலை வசதிகளோ, பயிற்சி மையங்களோ நம் நாட்டில் இல்லை என்பது முக்கிய காரணம்.

மேலும், சாதாரண ரக பைக்குகளை ஓட்டுவதற்கும், சூப்பர் பைக்குகளை ஓட்டுவதற்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், அதை சூப்பர் பைக் வாங்குபவர்கள் புரிந்துகொள்ளததால்தான் இதுபோன்று விபத்துக்களில் சிக்கி உயிரை விலையாக கொடுத்து விடுகின்றனர்.

இருப்பினும், இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.

சூப்பர் பைக்குகள் மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல்வாய்ந்த எஞ்சின்களுடன் வருகின்றன. இந்த பைக்குகளின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கே முறையான பயிற்சி கண்டிப்பாக தேவை.

எனவே, சூப்பர் பைக் வாங்குவதற்கு முன் உரிய பயிற்சி மையத்தில் சூப்பர் பைக் டிரைவிங் செய்வது குறித்த ஆலோசனைகளையும், நேரடி பயிற்சியையும் பெற்ற பின் சூப்பர் பைக் வாங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

பிரத்யேகமாக உருவாக்கப்படும் ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு ஏற்ற வகையிலேயே சூப்பர் பைக்குகள் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றை குண்டும குழியும் நிறைந்த நம்மூர் சாலைகளில் ஓட்டும்போது மிகமிக கவனமாக இருக்கவேண்டும்.

முக்கியமாக சூப்பர் பைக்கில் ஒருவர் மட்டுமே செல்லும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. சூப்பர் பைக்குகளின் பின் இருக்கைகள் அளவில் சிறியதாகவும், கூடுதல் உயரத்துடன் இருப்பதால் பைக் ஓட்டும்போது முழு பேலன்ஸ் கிடைக்காது.

சூப்பர் பைக் ஓட்டும்போது தரமான ஹெல்மெட்டுகளை அணிந்து செல்வது கூடுதல் பாதுகாப்பு. சாலை ஓரத்தில் விற்கப்படும் ஹெல்மெட்டுகளை வாங்கி அணிந்து செல்ல வேண்டாம்.

பல லட்சம் கொடுத்து வாங்கிய சூப்பர் பைக்கை கட்டை வண்டி மாதிரி ஓட்டுவதற்கா வாங்குகிறோம் என்பது காதில் விழுகிறது. கண்டிப்பாக வேகமாக ஓட்டலாம். அந்த பைக்கின் முழு கட்டுப்பாட்டை தெரிந்து கொண்ட பின்னர் சாலை நிலைமை அனுசரித்து ஓட்டினால் இதுபோன்ற விபத்துக்களை நிச்சயம் தவிர்க்கலாம்.

குறிப்பாக, சூப்பர் பைக்கை வேகமாக ஓட்டுவது எளிது, அதை உடனடியாகவும், சரியான இடத்திலும் நிறுத்துவது கடினம் என்பதை பிரபல பைக் ரேஸர் கவுரவ் கில் கூறியிருந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

மேலும், சாதாரண பைக்குகள் மற்றும் வாகனங்களுக்கு லைசென்ஸ் வழங்குவது போல் அல்லாமல் சிறப்பு பயிற்சி பெறுவர்களுக்கு மட்டுமே சூப்பர் வாங்குவதற்கும், ஓட்டுவதற்கும் லைசென்ஸ் வழங்கவேண்டும். இந்த விஷயத்தில் உடனடியாக கட்டுப்பாடுகளை கொண்டு வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

இவை எல்லாவற்றையும் விட சூப்பர் பைக் ஓட்டும்போது மிகுந்த கவனத்தோடும், மனக்கட்டுப்பாட்டோடும பாதுகாப்பாக ஓட்ட பழகிக்கொள்வது மிக அவசியம். இதனால், பைக் ஓட்டுபவருக்கு மட்டுமல்ல எதிரில் வரும வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படாது. இவற்றை கடைபிடித்தால் விலை மதிப்பற்ற உயிர்கள் பறிக்கப்படாது என்ற நமது எண்ணம் திண்ணமாகும்.

முக்கியமாக: எனதூர் பரங்கிபேட்டையில்.............இதுபோல பலபேர்கள் மரணமடைய காத்துகொண்டு இருக்கிறார்கள்...................இறைவன்தான் அவர்களையும், அவர்களால் வருந்தும் பெற்றோர்களையும் பாதுகாக்க வேண்டும்...............

திங்கள், 19 செப்டம்பர், 2011

யார் இந்த அப்சல் குரு ?


யார் இந்த அப்சல் குரு ?    காஷ்மீரில் தீவிரவாதம் வேர் விட்டு வளரத் தொடங்கிய நேரத்தில், இளைஞனாக இருக்கும் துரதிருஷ்டத்தை பெற்றவர்தான் இந்த அப்சல் குரு.   காஷ்மீர் சமுதாயத்தில் நிலவி வந்த அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருந்தார் மக்பூல் பட்.  தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டார் என்று 1984ம் ஆண்டு  மக்பூல் பட் தூக்கிலிடப் படுகிறார்.  ஐக்கிய முஸ்லீம்கள் கூட்டணி என்று ஒன்று அமைக்கப் பட்டு, இஸ்லாமியர்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்குகிறது.   ஐக்கிய முஸ்லீம்கள் கூட்டணி, தேர்தலில் போட்டியிட்டு பெரும் வெற்றியைப் பெறுகிறது.   தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்கள் கைது செய்யப் படுகிறார்கள், சிறையிலடைக்கப் படுகிறார்கள்.   கைது செய்யப் பட்ட தலைவர்கள், காஷ்மீர் மக்களை ஆயுதம் ஏந்த அழைக்கிறார்கள்.   காஷ்மீரின் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தியாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்துகிறார்கள்.   ஜீலம் பள்ளத்தாக்கு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு படித்துக் கொண்டிருந்த அப்சல் குரு, படிப்பை கை விட்டு, ஆயுதம் ஏந்துகிறார்.  பாகிஸ்தானுக்கு சென்று ஆயுதப் பயிற்சி எடுக்கிறார்.  ஆனால், பாகிஸ்தானுக்கு சென்ற சில நாட்களிலேயே பாகிஸ்தான் அரசியல்வாதிகளும், காஷ்மீர் மக்களை வைத்து அரசியல் நடத்துகிறார்கள் என்பதை உணர்ந்து, பாதிப் பயிற்சியிலேயே காஷ்மீர் திரும்புகிறார்.   திரும்பியவர் சும்மா இருந்திருக்கலாம்.    நல்ல பிள்ளையாக வேண்டும் என்று, எல்லைப் பாதுகாப்புப் படையிடம் சரணடைகிறார்.   சரணடைந்த தீவிரவாதியின் அந்தஸ்து வழங்கப் படுகிறது.
04ndgvb01_L-G_sends_128866f

மருத்துவப் படிப்பை பாதியில் கைவிட்டதால், அறுவை சிகிச்சை கருவிகளை விற்கும் தொழிலில் ஈடுபடுகிறார்.  தொழிலைத் தொடங்கி திருமணமும் செய்து கொள்கிறார்.  ஆனால், சிறப்புப் பாதுகாப்புப் படையும், ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் நிறுவனமும், தொடர்ந்து நெருக்கடி தருகின்றன.  காஷ்மீரில் எங்கே தீவிரவாத தாக்குதல் நடந்தாலும், அப்சல் பிடித்துச் செல்லப் படுவார். அவரோடு சேர்ந்து மனம் போன போக்கில் இளைஞர்களாக தென்படுபவர்கள் பிடித்துச் செல்லப் படுவார்கள்.  அந்த முகாம்களில் சித்திரவதை தொடங்கும்.  பல வாரங்கள் இந்த சித்திரவதை தொடரும்.  இறுதியாக, சம்பந்தப் பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கையில் இருக்கும் தொகையை லஞ்சமாக கொடுத்து, மீட்டு வர வேண்டும்.   22வது ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த மேஜர் ராம் மோகன் ராய், அப்சலின் அந்தரங்க உறுப்புக்களில் மின்சாரத்தை பாய்ச்சி சித்திரவதை செய்திருக்கிறார்.   ராணுவ முகாம்களில் உள்ள கழிவறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.  அப்சல் இது போல சித்திரவதைக்கு உள்ளாகும் போது, டிஎஸ்பிக்கள் வினய் குப்தா மற்றும் தேவீந்தர் சிங் ஆகியோர், அருகில் இருந்து மேற்பார்வை செய்திருக்கின்றனர்.     சாந்தி சிங் என்ற சித்திரவதை நிபுணர் ஒரு லட்ச ரூபாயை கொடு என்று மூன்று மணி நேரம் மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்திருக்கிறார்.  இறுதியாக அப்சலின் மனைவி, நகைகளை அடகு வைத்து, அப்சலின் ஸ்கூட்டரை விற்று, ஒரு லட்ச ரூபாய் கொடுத்த பிறகே அப்சல் விடுவிக்கப் படுகிறார்.  அதையடுத்து ஆறு மாதங்கள் அப்சல் படுத்த படுக்கையாக இருக்கிறார்.  
காஷ்மீர் போலீசின் சிறப்புப் படையின் சித்திரவதை முகாம்களில் சித்திரவதைக்கு ஆளானவர்கள், காவல்துறை இட்ட பணியை மறுக்காமல் செய்வார்கள்.  மறுத்தால், அந்த சித்திரவதைக்கு மீண்டும் ஆளாக நேரிடும் என்ற அச்சமே காரணம்.  அது போல, ஒரு நாள் டிஎஸ்பி தேவீந்தர் சிங் ஒரு சிறிய வேலையை செய்து கொடு என்று கேட்கிறார்.  என்ன என்று கேட்ட போது, ஒரு நபரை டெல்லிக்கு அழைத்துச் சென்று, அவருக்கு ஒரு வீடு பார்த்துக் கொடுக்க வேண்டும்.   அவர் அறிமுகப் படுத்திய நபர், காஷ்மீரி அல்ல.  அவர் தன் பெயரை முகம்மது என்று கூறினார்.   இந்த முகம்மது, பாராளுமன்றத் தாக்குதலில் கொல்லப் பட்ட 5 பேர்களில் ஒருவர்.
டெல்லியில் இருக்கும் போது, முகம்மதுவுக்கு தேவீந்தர் சிங்கிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வரும்.  சில நாட்கள் கழித்து, முகம்மது ஒரு காரை வாங்கினார்.  காரை வாங்கி விட்டு, நான் இப்போது திரும்பிச் செல்லலாம் என்று கூறி, 35 ஆயிரம் ரூபாய் பணத்தை தந்தார்.  இது அன்பளிப்பு என்று சொன்னார்.

காஷ்மீருக்கு திரும்பிச் செல்லும் போதுதான் நான் பேருந்து நிலையத்தில்  டெல்லி போலீசாரால் கைது செய்யப் பட்டேன். என்னை பரிம்போரா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள்.     பிறகு காஷ்மீரில் உள்ள சிறப்பு முகாமுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மீண்டும் டெல்லி அழைத்து வந்தனர்.  நான் முகம்மது பற்றி எனக்குத் தெரிந்தது அனைத்தையும் சொன்னேன்.   ஆனால், ஷவுகத், அவர் மனைவி நவஜோத் மற்றும் எஸ்ஏஆர்.கிலானி ஆகிய அனைவரையும் தெரியும்ம என்று சொல்லச் சொன்னார்கள்.  இதை ஊடகங்களின் முன் சொல்ல வேண்டும் என்று சொன்னார்கள்.  நான் மறுத்த போது, என் குடும்பத்தினர் அனைவரும் காஷ்மீர் முகாமில் இருப்பதால் சொல்ல மறுத்தால் எப்போது வேண்டுமானாலும் கொல்லப் படுவார்கள் என்றனர். வெற்றுக் காகிதங்களில் என்னிடம் கையொப்பம் பெற்றார்கள்.  ஊடகம் முன்பு, நான்தான் பாராளுமன்றத் தாக்குதலுக்கு பொறுப்பு என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தேன்.   எஸ்ஏஆர்.கிலானியைப் பற்றி ஒரு கேள்வி வந்த போது, நான் அவர் நிரபராதி என்று கூறினேன்.   ராஜ்பீர் சிங் என்ற ஏசி என்னை கடுமையாக திட்டினார்.  பத்திரிக்கையாளர்களிட்ம் இதை ஒளிபரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
மறுநாள் என் மனைவியோடு பேச அனுமதிக்கப் பட்டேன்.   அவர்கள் உயிரோடு இருக்க வேண்டுமானால் போலீசாரோடு ஒத்துழைக்க வேண்டும் என்று மிரட்டப் பட்டேன்.  அதன் பிறகு, முகம்மது சென்ற இடங்கள் என்று பல்வேறு இடங்களுக்கு என்னை அழைத்துச் சென்றனர்.  அங்கே அவர் பொருட்கள் வாங்கிய போது, நான் உடன் இருந்தேன் என்ற சாட்சிகளைத் தயார் செய்தார்கள்.  என் குடும்பத்தினரின் பாதுகாப்பைக் கருதி, அனைத்துக்கும் ஒப்புக் கொண்டேன்.
என்னை சிக்க வைத்ததன் மூலம், டெல்லி போலீசார் நாட்டையும் மக்களையும் ஏமாற்றி விட்டனர்.  பாராளுமன்றத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பதை இறுதி வரை கண்டுபிடிக்கத் தவறி விட்டனர்.   சிறப்பு பாதுகாப்புப் படை மற்றும் டெல்லி போலீசார் என்னை பலி கடா ஆக்கி விட்டனர்.   டெல்லி போலீசாருக்கு விருதுகள் வழங்கப் பட்டன, எனக்கு தூக்கு விதிக்கப் பட்டது.
இவ்வழக்கில் நான் கைது செய்யப் பட்டு 6 மாதங்களுக்கு என்னுடைய குடும்பத்தையே பார்க்க அனுமதிக்கப் படவில்லை.   6 மாதம் கழித்து, நீதிமன்றத்தில் சிறிது நேரம் சந்திக்க அனுமதி வழங்கப் பட்டது.  எனக்காக வாதாட 4 வழக்கறிஞர்களை தேர்ந்தெடுத்தேன்.   நான்கு பேரும் வாதாட மறுத்து விட்டதாக நீதிபதி எஸ்.என்.திங்க்ரா தெரிவித்தார்.   எனக்காக நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் என்னைக் கேட்காமலேயே பல ஆவணங்களை அனுமதித்தார்.  நீதிமன்றத்தால் நியமிக்கப் பட்ட வழக்கறிஞர் என்னைப் பார்க்கக் கூட மாட்டார்.   இப்படிப்பட்ட ஒரு முக்கிய வழக்கில் எனக்காக வழக்கறிஞர் கூட வைக்காமல், எனக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக இருந்தால், எதற்காக இந்த நீதிமன்றத்தின் விசாரணை ?  விசாரணை நடத்தாமலேயே என்னைத் தூக்கிலிட்டிருக்கலாமே ?
சிறையிலும் எனது வாழ்க்கை மிகக் கொடூரமானது.  தனிமைச் சிறையில் அடைக்கப் பட்டுள்ளேன். தொலைக்காட்சி கிடையாது. வானொலி கிடையாது.  நான் வாங்கும் செய்தித்தாள் கூட, கிழித்துத்தான் கொடுக்கப் படுகிறது. நான் மட்டும் இல்லை. என்னைப் போன்ற சக காஷ்மீரிகள் இந்தியாவின் பல்வேறு சிறைகளில் வழக்கறிஞர் உதவி கூடட இல்லாமல் அடைக்கப் பட்டுள்ளனர்.  தினந்தோறும், காஷ்மீரில் திவிரவாதிகள் சுட்டுக் கொலை என்று போலி என்கவுண்டர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கப் பட்டு வருகிறது.   காஷ்மீரில் இன்னும் நிலைமை மோசம்.    மொத்த காஷ்மீருமே ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக உள்ளது.  ஒரு நாகரீக சமுதாயம் எதைப் பார்க்கக் கூடாதோ, அது காஷ்மீரில் தினந்தோறும் நடந்து கொண்டு இருக்கிறது.  
ஆனாலும் நம்பிக்கை இழக்க அவசியம் இல்லாத வண்ணம், இந்த சமுதாயத்திலும், சில வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள் இந்த அநீதியை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது நிம்மதியைத் தருகிறது.
எஸ்ஏஆர்.கிலானி விடுதலை செய்யப் பட்ட போதுதான் முதன் முதலாக மக்கள் காவல்துறையின் கதையை கேள்வி கேட்கத் தொடங்கினார்கள்.   உண்மையை நேசிக்கும் மக்கள் அப்சல் குருவுக்கு அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது என்று சொல்வது இயல்பே.  ஏனெனில் அதுதானே உண்மை.
எனக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.  இதில் பாதி நாட்களுக்கு மேல் சிறையில் கழித்திருக்கிறேன்.   மேலும் ஒரு பாதியை சித்திரவதை முகாம்களுக்குள் கழித்திருக்கிறேன்.   என் ஆணுறுப்பு உள்ளிட்ட அத்தனை இடங்களிலும் மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்யப் பட்டு நான் வீட்டுக்கு திரும்பி வருகையில், என்னை அன்போடு பார்த்துக் கொண்டாள் என் மனைவி தபஸ்ஸம்.   எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.   அந்தக் குழந்தைக்கு பிரபல கவிஞர் மீர்சா காலீப் பெயரை வைத்தோம்.  என் மகன் மருத்துவராக வேண்டும் என்பதே எனது கனவு.  எனது நிறைவேறாத கனவு அது.  என் மகன், அநீதிக்கு எதிராக அஞ்சாமல் குரல் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
காஷ்மீரைப் பொறுத்தவரை, இந்திய அரசாங்கத்தின் ஊதுகுழலாக செயல்படுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்.   இந்திய அரசு எடுத்துக் கொடுக்கும் செய்திகளை, உண்மைக்குப் புறம்பான செய்திகளை, ஊடகங்கள் மறுபேச்சு பேசாமல் வெளியிடுகின்றன.   உண்மையில் பத்திரிக்கை துறையை நேசிப்பவர்களாக இருந்தால் உண்மையை விசாரித்து எழுதட்டும்.   உளவுத் துறையின் ஏஜென்டுகளாக இருப்பதை நிறுத்தட்டும். இந்திய அரசு, காஷ்மீர் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள மறுக்குமேயானால், காஷ்மீர் பிரச்சினைக்கு என்றுமே தீர்வு கிடைக்காது.
ஒரு வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட ஒரு காஷ்மீரியை எந்தவித வழக்கறிஞர் உதவியும் இல்லாமல், இந்த தேசத்தின் நீதித்துறை தூக்கிலிடுமேயானால், காஷ்மீர் மக்களுக்கு இந்தியாவின் மீது எப்படி நம்பிக்கை வரும் ?
என்னுடைய வழக்கின் ஒரே சாதனையாக நான் கருதுவது, என்  வழக்கின் மூலமாக, காஷ்மீர் சிறப்புப் படையின் சித்திரவதைக் கூடங்களை வெளியில் கொண்டு வந்ததுதான். காஷ்மீர் மக்கள் நாள்தோறும் படும் வேதனைகள் விவாதிக்கப் படுகின்றன.   எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்கின்றனர்.  காஷ்மீருக்கு வெளியே வசிக்கும் மக்களுக்கு சுத்தமாக புரியாத விஷயங்கள் இவை.
நான் இறந்த பிறகு காஷ்மீர் மக்களின் அப்சலாக நினைவு கூறப்பட விரும்புகிறேன். இந்திய மக்களுக்கும் நான் அப்சர் தான் என்றாலும், காஷ்மீர் மக்களை இந்திய ஊடகங்கள் ஏமாற்ற முடியாததால், நான் அடைந்த வேதனைகளை அவர்கள் நன்றாகவே புரிந்து கொள்வார்கள்.
இறுதியாக இந்த உலகத்துக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.   கிலானிக்கு தூக்கு தண்டனை விதிக்கப் பட்ட போது நீதிமன்றத்தில் அவர் இதைத்தான் சொன்னார்.   அமைதியும் நீதியும் வேறு வேறானது அல்ல.    நீதியோடு சேர்ந்துதான் அமைதி வரும்.  நீதி இல்லையென்றால் அமைதியும் இல்லை.    என்னை தூக்கிலிட விரும்பினால் தூக்கிலிடுங்கள்.   ஆனால் எனக்கு விதிக்கப் பட்ட தூக்கு இந்திய நீதித்துறை வரலாற்றிலும், அரசியல் வரலாற்றிலும் ஒரு கருப்புப் புள்ளியாக இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்” என்று அப்சல் சொன்னார்.
இது அப்சல் தன் வாயால் சொன்ன அவரின் கதை.

நன்றி : சவுக்கு 

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

நீண்ட வரிசைக்கும், குற்ற செயல்களுக்கும் முற்றுப்புள்ளி.


நான் ஏற்கனவே நம்ம சென்னையில் இருக்கும் பாஸ்போர்ட் அலுவலகத்தின் அவல நிலையை பற்றி ஒரு பதிவு போட்டு இருந்தேன்................அது எந்த புண்ணியவான் படித்தார் என்று தெரியவில்லை.................இதோ ஒரு நற்செய்தி................இது வெறும் செய்தியாக மட்டுமில்லாமல் செம்மையாக செயல்பட்டால் சரி.................


சாலிகிராமம் : ""நீண்ட வரிசைக்கும், குற்ற செயல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்படுவது சிறப்பு'' என, தலைமை பாஸ்போர்ட் அதிகாரி முக்தேஷ் குமார் மிஸ்ரா பேசினார். ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையில், சென்னையில் அமைந்தகரை, சாலிகிராமம், தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் புதிதாக, பாஸ்போர்ட் சேவை மையங்கள் நேற்று சென்னையில் துவங்கின. சென்னை சாலிகிராமத்தின் புதிய பாஸ்போர்ட் சேவை மையத்தை, உள்துறை அமைச்சகத்தின் முதன்மை செயலர் ரமேஷ் ராம் மிஸ்ரா மற்றும் தலைமை பாஸ்போர்ட் அதிகாரி முக்தேஷ் குமார் பர்தேசி ஆகியோர் திறந்து வைத்தனர்...

இவ்விழாவில், தலைமை பாஸ்போர்ட் அதிகாரி முக்தேஷ் குமார் பேசியதாவது: நாட்டில் இந்த ஆண்டிற்குள், மொத்தம் 77 சேவை மையங்கள் செயல்படவுள்ள நிலையில், தற்போது சென்னையின் புதிய மூன்று சேவை மையங்களையும் சேர்த்து, நாட்டில் 18 சேவை மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் மூன்று, திருச்சியில் இரண்டு, மதுரையில் இரண்டு, கோவையில் ஒன்று என, மொத்தம் எட்டு சேவை மையங்கள் செயல்படுவது சிறப்பு. மற்ற மாநிலங்களில், மீதமுள்ள சேவை மையங்கள் விரைவில் திறக்கப்படும். சென்னையைப் பொறுத்தவரை ஒரு பாஸ்போர்ட் அலுவலகம் என்ற நிலை மாறி, இன்றைக்கு நான்கு அலுவலகங்களாக விரிந்துள்ளன. இதன் மூலம், சாஸ்திரி பவன் அலுவலகத்தில் நீண்ட வரிசையில் விண்ணப்பதாரர்கள் அதிக நேரம் காத்திருப்பதை, இனி தவிர்க்கலாம். சேவையையும் அதிகரிக்க முடியும்.


இந்த சேவை மையங்களில் விண்ணப்பதாரர்களின் கைரேகை பதிவு செய்யப்படுவதால், ஒன்றுக்கு மேல் பாஸ்போர்ட் பெறும் குற்றச் செயலை தடுக்க முடியும். இப்படி நீண்ட வரிசைக்கும், குற்ற செயல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்படுவது சிறப்பு. புதுச்சேரியில் தற்போது இயங்கும் பாஸ்போர்ட்டிற்கான விண்ணப்பங்களை பெறும் மையம், அடுத்த ஆண்டில் சேவை மையமாக மாற்றப்படும். இவ்வாறு முக்தேஷ் குமார் பர்தேசி பேசினார். நிகழ்ச்சியில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி, சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி., சைலேந்திர பாபு, சென்னை மண்டல அதிகாரி செந்தில் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.


ஆன்-லைனில் விண்ணப்பிக்க தெரியாதா? : விண்ணப்பதாரர்கள் ஆன்-லைனில் விண்ணப்பித்த பின், சேவை மையத்திற்குச் செல்வதற்கான தேதி, நேரம் இரண்டையும் பெற முடியும். இதன் மூலம், குறிப்பிட்ட நேரத்திற்கு 15 நிமிடத்திற்கு முன்பாக சேவை மையத்திற்குச் சென்றால் போதுமானது. ஆன்-லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள், நேரடியாக சேவை மையங்களுக்குச் சென்று, அங்கே மண்டல அலுவலர்களின் உதவியுடன் ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயங்களை, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி செந்தில் பாண்டியன் உறுதிப்படுத்தினார். 

source: dinamalar

புதன், 14 செப்டம்பர், 2011

எங்கே செல்லும் இந்த பாதை.................?????????

முதியோர் இல்ல முதாட்டி மரணம் : அடக்க மறுத்த "பண்டாரவாடை" ஊர் ஜமாஅத்!




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சமுதாய நலப்பணிகளில் மிக முக்கியமானது ஆதரவற்ற முதியோர் இல்லம் ஆகும். தூக்கி வளர்த்த பெற்றோர்களை ஏதோ சுமைகளைப் போலக் கருதி தூக்கி வீசும் கொடூரமான பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள், தங்களின் கடைசி வாழ்க்கையை பிளாட்பாரங்களிலும், கடைகளின் வாசல்களிலும் தங்கிக் கழிப்பதை நாமெல்லாம் கண்டிருப்போம். சாப்பிடக் கூட வழியில்லாத அந்த முதியவர்கள் குப்பைத் தொட்டிகளில் விழும் எச்சில் இலைகளைத் திண்பதையும் நாம் கண்டிருப்போம்...

பெற்றோர்களை அதிகம் பேண வேண்டும் என்றும் வழியுறுத்தும் நம் இஸ்லாமிய மார்க்கத்திலும் இது போன்ற சிலரால் கைவிடப்பட்டு நடுத்தெருவில் நாதியற்று ஒதுங்கி வெயிலிலும் மழையும் கிடந்து அவதிப்பட்டு அசையக் கூட முடியாமல் கிடந்து அங்கேயே அநாதைகளாய் இறந்து போகும் முதியவர்களையும் நாம் கண்டிருப்போம்.
சில சமூக ஆர்வலர்கள் இது போன்ற முதியவர்களைக் கூட்டிச்சென்று மற்ற மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அனாதை இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர். காலம் முழுவதும் ஈமானோடு இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாய் பின்பற்றி வாழ்ந்து வந்தவர்கள், இறுதிக் காலத்தில் வேறு வழியில்லாமல் உணவுக்காகவும் உறைவிடத்திற்காகவும் மாற்று மதக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு இணைவைப்பில் விழுந்து விடுகின்றனர். அவர்களின் வணக்கங்கள் முழுமையாக நாசமாகி அவர்கள் நரகப்படுகுழிகளை நோக்கி பயணிப்பதற்கு நாமும் ஒரு வகையில் காரணமாகி விடுகின்றோம்.
இந்தநிலை இனி யாருக்கும் வந்துவிடக் கூடாது., நம் மக்கள் இனி அநாதைகளாக நடுவீதியில் செத்து விழக்கூடாது, உணவிற்காக கொள்கைகளை கொள்கை மாற்றிக் கொள்ளக்கூடாது என்ற தீர்மானத்தை அழுத்தமாகப் பதிந்து தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் ஆதரவற்ற முதியோர் இல்லம் துவக்கப்பட்டது. இறைவனின் பேரருளாலும் நம் சகோதரர்களின் பூரண ஒத்துழைப்பாலும் இந்த இல்லம் இப்போது தஞ்சை மாவட்டம் ராஜகிரி பண்டாரவாடையில் இயங்கி வருகின்றது. இப்போதைக்கு அங்கே 19 முதியவர்கள் தங்கியிருக்கிறார்கள். (அந்த இல்லம் நடக்கும் இடம் கூட நம் ஜமாஅத்தின் சேவைகளைக் கண்டு ஒரு சகோதரர் அன்பளிப்பாகத் தந்தது ஆகும்.)
இந்த நிலையில் கடந்த 12/09/2011 திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் அங்கே தங்கியிருந்த சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி சபியா பீவி என்பவர் மவுத்தானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இந்த மூதாட்டி கடந்த பல மாதங்களாக இந்த இல்லத்தில் தான் தங்கியிருந்தார். இவர் அசைந்து எழுந்து நடக்கக் கூட முடியாத நிலையில் இருந்தார். நம் சகோதரர்கள், அந்த மூதாட்டியைக் கருனையோடு கவனித்து வந்தனர். இவர் மவுத்தானதும் இவருக்குச் செய்ய வேண்டிய அனைத்துப் பணிகளையும் செய்து, குளிப்பாட்டி, கபனுடை தரித்து தயார்படுத்தினார்கள். அந்த இல்லத்தில் உள்ள அனைத்து முதியவர்களும் இரவெல்லாம் விழித்திருந்து அங்கேயே அமர்ந்திருந்தார்கள்.
இரவு நேரம் என்பதால் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளைக் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து அனைவரும் இருந்து விட்டனர்.
காலையில் பண்டாரவாடை பெரிய பள்ளிக்கு ஃபஜ்ரு தொழுகைக்குச் சென்ற நம் சகோதரர்கள் அந்த ஊர் நிர்வாகிகளிடம் மூதாட்டி வபாத்தான விசயத்தைச் சொல்லி அவரை அடக்கம் செய்வதற்கு அனுமதி தருமாறு கேட்டனர். இது சம்பந்தமாக நாங்கள் கலந்தாலோசிக்க வேண்டும்., எனவே காலை 8 மணிக்கு நாங்களே தகவல் அனுப்புகிறோம் எனச் சொல்லி நம் மக்களை அனுப்பி வைத்தனர் பண்டாரவாடை ஊர் நிர்வாகிகள்.
காலை மணி 9 ஆகியும் கூட எவ்வித தகவலும் வராத காரணத்தால் நேரடியாகச் சென்று கேட்டு விடுவது என முடிவுசெய்து அவர்களை அணுகிய போது அவர்கள் சொன்ன பதில் நம் மக்களுக்கு நெஞ்சை அடைப்பதாக இருந்தது.,
எந்த ஊரென்றே தெரியாதவருக்கெல்லாம் எங்கள் ஊரில் அடக்கம் செய்ய இடம் தர முடியாது. நீங்கள் வேறு எங்கு வேண்டுமானாலும் அடக்கம் செய்து கொள்ளுங்கள், உங்களுக்கு என்ன முடியுமோ அதைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என வெடித்தனர்.
ஜனாஸாவைச் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இருந்த நம் சகோதரர்கள் அவர்களிடம், ஜனாஸைத் தடுக்காதீர்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அதற்கும் மனமிறங்காத அந்த கல் நெஞ்சம் கொண்டவர்கள், “முடியவே முடியாது நீங்கள் இங்கிருந்து இடத்தைக் காலி செய்யுங்கள், உங்களுக்கென்று தனிப்பள்ளிவாசல் இருக்கும் போது அடக்கத்தலத்திற்கு மட்டும் ஏன் எங்களை நாடி வருகிறீர்கள்? அதையும் நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டியது தானே” என தங்களின் காழ்ப்புணர்வைக் கொட்டித் தீர்த்தனர்.
அதற்கும் கோபப்படாத நம் மக்கள் மிகத் தெளிவாக சொன்ன பதில், “எங்கள் கொள்கையை எதிர்ப்பதற்காக எங்களின் பெற்றோர்கள் இறந்து போனால் அவர்களின் ஜனாஸாவைத் தான் தடுக்கிறீர்கள், ஆனால் இப்போது இறந்து போயிருப்பது எங்கள் பெற்றோர் அல்லவே! இங்கிருக்கும் யாருடைய பெற்றோரும் அல்லவே. அனாதைகளாய் வீட்டை விட்டு விரட்டப்பட்ட ஒரு மூதாட்டியின் ஜனாஸாவுக்குத் தானே நாங்கள் உங்களிடம் வந்து பேசிக் கொண்டிருக்கிறோம். பிள்ளைகளால் வீட்டைவிட்டு துரத்தப்பட்டு மனம் நொந்து போய் தங்கள் கடைசி வாழ்க்கையை வாழ்ந்து இறந்து போன அவர்களின் ஜனாஸாவையாவது நிம்மதியாகப் போக விடுங்கள். உங்கள் மையவாடியில் ஆறு அடி நிலம் தந்து விடுவதால் உங்களுக்கு ஒன்றும் குறைந்து போய்விடாது என்று மீண்டும் கேட்டுப் பார்த்தனர்.
எதற்கும் இறங்காத மனம், ஜனாஸாவைப் பார்த்தாவது இறங்கும் என்பார்கள். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் ஒரு அனாதை மூதாட்டியின் ஜனாஸாவை அடக்கம் செய்வதில் முரண்டு பிடித்து நின்றனர் பண்டாரவாடை ஜமாஅத்தார்கள்.
இனி இதற்கு மேலும் இங்கே நின்றால் வேலைக்காகாது என்று ராஜகிரி பண்டாரவாரை கிளை நிர்வாகிகள், உடனடியாக தலைமையகத்தைத் தொடர்பு கொண்டனர். தகவல்களை முழுமையாகக் கேட்டறிந்து விட்டு ஜனாஸாவின் அடக்கமே முக்கியம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்த மாநிலத் தலைமை, இறந்தவர் நம்முடைய கொள்கைச் சகோதரர்கள் என்றால் கடைசி வரை போராடிப் பார்க்கலாம். ஆனால் மனிதாபிமான அடிப்படையில் நம்மிடம் அடைக்கலம் நாடி வந்தவர்களின் ஜனாஸாவை வைத்து பிரச்சனையாக்க வேண்டாம் வேறு ஏதாவது ஊரில் முயற்சி செய்து பாருங்கள் என்று அவர்களை அறிவுறுத்தியது. மாவட்ட நிர்வாகிகளுக்கும் இது குறித்து அறிவுறுத்தப்பட்டது.
தஞ்சை தெற்கு மாவட்டத்தின் தலைவர் இம்தியாஸ் தன் சொந்த ஊரான திருமங்கலக்குடியை அடுத்த குறிச்சிமலை ஜமாஅத்தார்களை அனுகினார். இந்த விசயத்தைக் கேட்டதும் அந்த ஊர் நாட்டாமை ஹபீப் முஹம்மது அவர்களும் மற்றும் நிர்வாகிகள் இன்ஜினியர் ஜாபர், ஹாஜா மற்றும் ஜாபர் ஆகியோரும் எவ்வித ஆலோசனையும் இன்றி உடனடியாக ஜனாஸாவை இங்கே அடக்கம் செய்து கொள்ளுங்கள் என தெரிவித்ததைத் தொடர்ந்து ,  தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக இந்தத் தகவலை பண்டாரவாடை கிளைக்குத் தெரிவித்தனர்.
இறைவனின் உதவி அறியாப்புறத்தில் இருந்து வரும் என்ற இறை வசனத்திற்கேற்ப எவ்வித இடையூறும் இன்றி, ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு அனுமதி தந்த அந்த ஊர் ஜமாஅத் நிர்வாகிகளுக்காக நம் மக்கள் துவா செய்தனர்.
உடனடியாக காலை 10.45 மணிக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அந்த மூதாட்டியின் ஜனாஸாவை ஏற்றிச் சென்று சரியாக 11.30 மணிக்கு குறிச்சிமலை சென்றடைந்தனர். அதே பள்ளிவாசலில் நபிவழிப்படி நம் சகோதரர்கள் அந்த ஜனாஸாவிற்குத் தொழுகை நடத்தி அந்த மூதாட்டிக்காக தங்கள் கைகளால் குழி வெட்டி கடைசிவரை உடனிருந்து ஜனாஸாவை அடக்கம் செய்து முடித்தனர். சரியாக 12.40 மணியளவில் அந்த மூதாட்டியின் நல்லடக்கம் முடிந்தது.
ஜனாஸாவை அடக்க செய்ய வேண்டும் என்று சொன்னவுடன் எவ்வித தயக்கமும் காட்டாமல் உடனடியாக அனுமதி தந்த குறிச்சிமலை ஜமாஅத்தார்களுக்கு நம் மக்கள் நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்தனர். அந்த மக்களுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக!
எதையும் பார்க்காமல் ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதி தந்த இவர்கள் எங்கே, ஆதரவற்ற ஜனாஸாவை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த அவர்கள் எங்கே! அனைவரும் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள். அவன் கடுமையாக தண்டிக்கக் கூடியவன்.
எந்த நிர்வாகிகள் ஆதரவற்ற ஒரு மூதாட்டியின் ஜனாஸாவை அடக்கம் செய்ய விடாமல் மறுத்தார்களோ, இறைவன் நாடினால் அவர்களுக்கும் கூட நாளைக்கு அந்த நிலை ஏற்படலாம். அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்ள வேண்டும்.
ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகளைத் தவிர வேறில்லை.
அல்குர்ஆன் 3:185

பண்டாரவாடையைச் சேர்ந்த சகோதரர்கள் தங்கள் ஊர் நிர்வாகிகளாக காட்டுமிராண்டிகளையும் மனித மிருகங்களையும் எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும், மனிதாபிமானம் கூட இல்லாத இந்தக் கொடியவர்களை தக்க முரையில் தட்டிக் கேட்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.
source: www.tntj.net

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

இது எங்க ஊரு ஸ்பெஷல் (ரெண்டான்)

முதலில் நான் எந்த ஊரு என்பதை சொல்லிவிடுகிறேன், அதாவது கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை என்கின்ற ஊரை சேர்ந்தவன் நான் எங்கள் ஊரு கடலூருக்கும் சிதம்பரத்திற்கும் இடையில் கடலை ஒட்டி அமைந்துள்ளது........

அட இவன் இவ்வளவு நாளைக்கு அப்புறம் ஊரை பத்தி எழுதுராண்டு நினைக்காதீங்க, இங்கே இதை பத்தி எழுதுவது ஒரு அவசியமாக பட்டது அதான், சரி வாங்க மேட்டருக்கு   போவோம், 
எந்த ஒரு ஊரை எடுத்துகிட்டாலும் அங்கே ஏதாவது ஒரு சமையல் ஸ்பெஷல்லா இருக்கும் அந்த மாதிரி நம்மூரில் இந்த ரெண்டான் ஒரு ஸ்பெஷல் அத பத்திதான் இந்த பகிர்வு ஒரு சமையல் குறிப்பாக...........!!!!!!!!! இதை மீன், இறால் முட்டை போன்றவற்றி செய்யலாம்.........இங்கே நான் எடுத்து கொண்டது வஞ்சரம் மீன் 





தேவையான பொருட்கள்:

  1. ஒரு மீடியம் அளவு வஞ்சரம் மீன் ஒன்று
  2. வெங்காயம் மீடியம் சைஸ் நான்கு
  3. தக்காளி மீடியம் சைஸ் இரண்டு
  4. பச்சைமிளகாய் 5 அல்லது 6  
  5. தேங்காய் ஒரு அரை மூடி 
  6. மிளகாய் தூள், மஞ்சள் தூள் உப்பு, எண்ணை போன்றவைகள்


செய்முறை:

  1. முதலில் வஞ்சிரன் மீனை மீடியம் சைசில் வெட்டி மஞ்சள் உப்பு சேர்த்து நன்றாக கழவி எடுத்துகொள்ளவும்.
  2. கழிவிய மீனை மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி வைத்து கொள்ளவும் (கொஞ்சம் இஞ்சி பூண்டு சேர்த்தால்  மேலும் சுவையாக இருக்கும்)
  3. பின்னர் அதை அறைவேகாடாக பொரித்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும் .
  4. வெங்காயம் , தக்காளி பச்சைமிளகாய் போன்றவற்றை பொடிசாக வெட்டி வைத்து கொள்ளவும்,  தேங்காயை அரைத்து மிக்ஸ்யில் போட்டு பால் எடுத்து வைத்து கொள்ளவும் 
  5. பின்னர் உங்கள் வீட்டில் மண் சட்டி இருந்தால் அதை அடுப்பில் ஏற்றவும் (மண் சட்டியில் செய்தால் சுவை கொஞ்சம் கூடுதலாக இருக்கும்)
  6. தேவையான அளவு என்னை விட்டு அது சூடு வந்தவுடன், அதில் முதலில் வெட்டி வெங்காயத்தை போட்டு வேக வைக்கவும் வெங்காயம் சிறிது வண்ணம் மாறியவுடன் 
  7. அதனுடன் பச்சைமிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து மீண்டு வேகவைக்கவும், ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள் (கொஞ்சம் கூடுதலாக இருந்தால் நன்று) சேர்த்து நன்றாக கிளறி விட்டு மூடி வைக்கவும், 
  8. ஒரு ஐந்து நிமிடம் கழித்து தக்காளி கரைந்தவுடன் அதில் ஏற்கனவே எடுத்து வைத்த தேங்காய் பாலை ஊற்றவும், பின்னர் ஏற்கனவே நாம் பொரித்து வைத்துள்ள மீனை போட்டுவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.அவ்வளவுதாங்க ரெண்டான் ரெடி............!!!!!!!!!!!!!

இதில் முக்கியமாக நீங்க பார்க்ககூடியது, தேங்காய் பால் சிறிது கட்டியாக இருக்கவேண்டும், இல்லையென்றால் குழம்பு தன்னியாகிவிடும்,  அப்புறம் அடுப்பை அனைபதர்க்கு சிறிது நேரத்திற்கு முன் கொஞ்சம் மல்லி  இலையை போட்டு மூடிவிட்டு அணைத்துவிடுங்கள்..................

இன்னும் பல ஸ்பெஷல் எங்கள் ஊரில் உள்ளன தொடர்ந்து எழுதலாம் என்று உள்ளேன்.............உங்கள் கருத்துக்களை பார்த்து விட்டு...................

எது நேர்மை? எது நியாயம் ??? எங்கே போனார்கள் இந்த தமிழ்வாதிகள்..............



1991  மே மாதம் 21 ஆம் நாள், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் இறுதியாக  உச்ச நீதிமன்றம் நளினிமுருகன், சாந்தன், பேரறிவாளன்  ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

மேற்கண்ட தூக்கு தண்டனை கைதிகள் தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள். முதலில் இவர்களின் கருணை மனு ஆளுனரால் நிராகரிக்கப்பட்டு, பின்னர் தூக்கு தண்டனை கைதிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்குகள் தொடுத்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 25.11.1999 அன்று வழங்கிய தீர்ப்பில், மனுதாரர்கள் தொடுத்த வழக்குகளை ஏற்று கருணை மனுக்களை நிராகரித்த ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்து, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை வழங்குமாறு அறிவுறுத்தியது. 

இதனடிப்படையில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகிவிடும் என்று அன்றைய முதல்- அமைச்சர் கருணாநிதி தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது.

கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில் நளினி நீங்கலாக சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்த மூன்று நபர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை தமிழ்நாடு அரசு மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் மீது மத்திய அரசின் உள்துறை, தனது 12.8.2011 நாளிட்ட கடிதத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் இந்த கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தது. இதையடுத்து இந்த மூவருக்கும் செப்டம்பர் 9 ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில்ராமதாஸ்-வைகோ-திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு  அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் இந்த மூவரையும் தூக்கிடக் கூடாது என்ற கோஷத்துடன் களமிறங்கி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்த விஷயத்திற்காக தீக்குளித்து மாண்ட சம்பவங்களும் நடந்தேறின. இந்த தூக்குத் தண்டனை கைதிகள் விஷயத்தில் எனக்கு எந்த அதிகாரமுமில்லை என்று ஆரம்பத்தில் கூறிய முதல்வர் ஜெயலலிதா, பின்னர் 'நமக்கேன் வம்பு' என்ற பாணியில், இவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ் ஆர்வலர்களின் கோபத்திலிருந்து தன்னைக் காத்துக் கொண்டார்.

காஷ்மீர் மாநில முதல்மந்திரி உமர் அப்துல்லா இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
''
ராஜீவ் கொலைக் கைதிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி கோரி தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். அதேபோல், பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த அப்சல் குருவுக்கும் கருணை காட்டும்படி காஷ்மீர் சட்ட சபையில் தீர்மானம் போட்டால் அரசியல் கட்சியினரும் மற்றவர்களும் மவுனமாக இருப்பார்களா? இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்'' என்று அவர் டுவிட்டர் இணைய தளத்தில் கேட்டு உள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியென்றால்உமர்  அப்துல்லாஹ் கேள்வியும் நியாயம் தானே? 
மற்றொருபுறம்  இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இவர்களின் தண்டனையை  எட்டு  வாரங்களுக்கு  தள்ளி வைத்து தீர்ப்பளித்துள்ளது. இந்த மூவர் தூக்குத் தண்டனை விஷயத்தில் மட்டுமல்லாது ஒட்டு மொத்தமாக தூக்குத்   தண்டனையே  கூடாது என்ற கருத்து இன்று வலுப்பெற்றுள்ளது.

முதலாவதாக தூக்குத் தண்டனை கூடாது என்று இன்று கோஷம் போடுபவர்கள் உண்மையில் தூக்குத் தண்டனைக்கு எதிரானவர்கள் என்பது உண்மையானால், அவர்களின் கோஷம் இவ்வளவு நாள் எங்கே மறைந்திருந்தது? ஏனெனில் இந்தியாவில் தூக்குத் தண்டனை முதன் முதலாக இந்த மூவருக்குத் தான் விதிக்கப்பட்டுள்ளதாஇதுவரை எவருக்குமே தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட வில்லையா? அந்த தண்டனைகள் நிறைவேற்றப் பட்டதில்லையா? சமீபத்தில் கூட குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 31 பேரில் 11 பேருக்கு  தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதே! அப்போது இந்த மனித உரிமை போராளிகள்[?], '' தூக்குத் தண்டனையா? கூடாது. இந்த தீர்ப்பு செல்லாது. நீதிமன்றமே! தீர்ப்பை மாத்திச் சொல்லு என்று குதிக்கவில்லையே? காரணம் அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்பதாலாதகுந்த சான்றுகளின்றி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல்குரு கருணை மனுவையும் ஜனாதிபதி நிராகரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதே! அந்த வகையில் அப்சலின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு அவருக்கு தூக்குத்தண்டனை உறுதிப் படுத்தப்படும்போது இதே போன்று இந்த மனிதநேயர்கள்[?] அப்சலை தூக்கில் போடாதே என்று போராடுவார்களோ?

மேலும் ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்டவர்கள் அனைவருமே தூக்கு கயிறை எதிர்நோக்கியிருக்க, இவர்களோ இந்த மூவரை மட்டும் முன்னிலைப் படுத்தி போராடுவதன் மூலம் இவர்களின் நோக்கம் என்பது தூக்குத்தண்டனையை ஒழிப்பதல்ல; மாறாக விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான மூவரை காப்பதே என்று புலப்படுகிறது. மேலும் இந்த மூவரின் உயிர் பற்றி இரக்கம் காட்டும் இவர்கள், இந்த மூவரின் தலைவரான பிரபாகரனின் விடுதலைப்புலிகள் இலங்கையில் முஸ்லிம்களை கருவருத்தபோது, இன்று மனிதநேயம் பேசும் இந்த வைகோ சீமான் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் வாய்திறந்ததுண்டா? ஏன் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லையா? அப்போது இவர்களுக்கு தமிழ் உணர்வு எங்கே போனது? ஒரு விசயத்தில் இவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதாவது பாதிக்கப்படுவது தமிழனே என்றாலும் அவன் இந்துவாக இருக்க வேண்டும் அல்லது விடுதலைப் புலியாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த தமிழ் ஆர்வலர்கள் ஆர்த்தெழுவார்கள். ஏனெனில் இவர்களில் ஒருவர், பால்தாக்கரேயை வைத்து 'இலங்கை இந்துத் தமிழர் பாதுகாப்பு மாநாடு' நடத்தியவர்தானே!

அடுத்து இந்த மூவரின் தூக்குத் தண்டனையை எதிர்ப்பவர்கள் வைக்கும் வாதம் என்னவெனில், இந்த மூவரும்  ஏற்கனவே இருபது ஆண்டுகளை கடந்து சிறையில் தண்டனை அனுபவித்துள்ள நிலையில் தூக்குத் தண்டனை என்பது அவர்களுக்கு விதிக்கும் இரண்டாவது தண்டனையாகும் என்கிறார்கள். இது மேலோட்டமாக பார்க்கும் போது சரியானதாக இருந்தாலும், இந்த தாமதம் என்பது அவர்கள் சட்டத்தின் சலுகைகளை பயன்படுத்தி கருணை மனுக்கள்  அனுப்பியதால் ஏற்பட்டதே என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும். சரி! குற்றவாளிகள் என்றும் அதிலும் தூக்குத்தண்டனை குற்றவாளிகள் என்றும் உறுதிப்படுத்தப்பட்ட இம்மூவரின் சிறை ஆண்டை கணக்கிடும் இவர்கள், வெறும் விசாரணைக் கைதிகளாக முஸ்லிம்கள் பல ஆண்டுகள் சிறையில் கழித்ததை என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா? அவர்களுக்காக குரல் கொடுத்ததுண்டா? மேலும் இந்த மூவரின் தண்டனை நிறைவேற்றப்படும் விசயத்திலே ஏற்பட்ட தாமதம் குறித்து, ராஜீவ் காந்தி படுகொலையை விசாரித்த சி.பி.ஐ-யின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன்ஒரு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில்,          

'ராஜீவ் காந்தியைக் கொலை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறையில் இருந்தது ஒரு தண்டனை. தற்போது விதிக்கப்பட்டு இருக்கும் மரண தண்டனை இரண்டாவது தண்டனை. இது எப்படி நியாயம்?
'1991 முதல் எட்டு வருடங்கள் விசாரணை நடந்தது. தீர்ப்பு கிடைத்தது. அதன் பிறகு மாநில மத்திய அரசுகளிடம் குற்றவாளிகள் தரப்பில் கருணை மனுப் படலம் 12 வருடங்கள் நடந்தது. இவர்கள் மட்டும் அல்ல... இந்தியா முழுவதும் வெவ்வேறு காலகட்டத்தில் கருணை மனு போட்ட மரண தண்டனைக் கைதிகள் இப்படித்தான் காத்திருக்கிறார்கள். எனவே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மட்டும் கால தாமதம் ஏற்படவில்லை. கருணை மனு மீதான இறுதி முடிவு தெரியும் வரை தண்டனை பெற்ற குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சிறையில் இருப்பதுதான் முறை. அதுதான் இங்கேயும் நடந்தது' என்று கூறியுள்ளார். இதன் மூலம் ஏதோ இந்த மூவர் விசயத்தில் தான் இரண்டு தண்டனை என்ற தோற்றம் உண்டாக்கப் படுவதை இந்த அதிகாரியின் கூற்று தவிடு பொடியாக்குகிறது.
அதே நேரத்தில் இன்னொன்றையும் இங்கே கவனிக்கவேண்டும். ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விசயத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்த பின், ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணைமனு உடனடியாக பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டிருந்தால், தாமதமின்றி உரிய தண்டனை நிறைவேற்றப் பட்டிருந்தால் அன்றைக்கு மக்களும் ஏற்றிருப்பார்கள். காலம் மனிதனை மறக்கச் செய்யும் ஆற்றல் படைத்தது என்பதால் ராஜீவ்காந்தி மட்டுமன்றி 15 பேர் படு கோரமாக ரத்தச் சகதியாக கொல்லப்பட்ட காட்சிகள் மக்கள் மனதிலிருந்து மறைந்து, இன்றைக்கு குற்றவாளிகள் மீது இரக்கப்படும் மனநிலையை உண்டாக்கி விட்டது. ஜனாதிபதியின் கூடுதல் தாமதம் சிலரை குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசவும்- போராடவும் வாய்ப்பை உண்டாக்கி தந்துள்ளது. மனிதர்களுக்கு இரக்கம் காட்டலாம் அது மனிதநேயம்; ஆனால் மனிதம் மறந்து மனிதனைக் கொல்லும் எவருக்கும் கடுகளவும் இரக்கம் காட்டக் கூடாது. அதனால்தான் இஸ்லாம் பாதிக்கப்படவன் இடத்திலிருந்து ஒரு செயலை அணுக சொல்கிறது. ஒரு உயிர் அநியாயமாக கொல்லப்பட்டால் அந்த உயிரைக் கொன்ற கொலைகாரனையும்  கொலை செய்யவேண்டும் என்று கட்டளையிடுகிறது இஸ்லாம். ராஜீவோடு கொல்லப்பட்ட 15 பேரின் குடும்பத்தாரிடம், உங்கள் குடும்ப நபரை கொன்றவர்களுக்கு என்ன தண்டனையளிக்க  வேண்டும் என்று அன்றைய தினம் கேட்கப்பட்டிருக்குமானால் அவர்கள் சொல்வார்கள்; இவ்வளவு கொடூரமாக கொன்ற அந்த பாவிகளை பொது இடத்தில்  கண்டம் துண்டமாக  வெட்ட வேண்டும் என்று. அதைத்தான் இஸ்லாமும் சொல்கிறது.
நல்லறிவாளர்களே!  கொலைக்குப் பழி  தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். [அல்-குர்'ஆன் 2:179 ]
அதே நேரத்தில் இன்னொரு வழிமுறையையும் இஸ்லாம் காட்டித்தருகிறது;
ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.[அல்-குர்'ஆன் 2:178]
அதாவது கொல்லப்பட்டவரின் வாரிசுகள் உரிய நஷ்டஈட்டுத்தொகை பெற்றுக்கொண்டு கொலையாளியை மன்னித்தால் அந்த கொலையாளியை தண்டிக்க வேண்டாம் என்றும் சொல்கிறது இஸ்லாம். இறைவேதத்தின் இந்த வழிகாட்டுதல் அடிப்படையில் ராஜீவ்காந்தி மற்றும் 15  பேரை கொன்ற கொலையாளிகளை மன்னிக்கும் தகுதி ராஜீவ் குடும்பத்திற்கும், கொலையுண்ட ஏனையவர்களின் குடும்பத்திற்கும் மட்டுமே உரித்தானது. ஆனால் இந்திய சட்டப்படி கொலையுண்டவருக்கு எந்தவகையிலும் சம்மந்தமில்லாத ஆளுநருக்கும்- ஜனாதிபதிக்கும் கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம் வழங்கியதுதான் குற்றவாளிகள் தப்பிப்பதற்கும், பிரச்சினைகள் உருவாவதற்கும் பிரதான காரணமாக உள்ளது.
எனவே என்ன  தான் மனிதன் மூளையை கசக்கி சட்டம் இயற்றினாலும், அது எல்லா நேரத்திலும் உரிய தீர்வைத் தராது. எல்லாம் வல்ல இறைவன் வகுத்த சட்டமே எல்லாநேரமும், எல்லா விசயத்திற்கும் முழுமயான தீர்வை தரும் என்பது  ராஜீவ் கொலை வழக்கு மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. மேலும், மரணதண்டனை நடைமுறையில் இருக்கும்போதே பயமின்றி ஒரு பிரதமரை கொத்துக்கறியாக கொடூரமாக கொன்றவர்கள் இருக்கும் நாட்டில், மரணதண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டால் நாடு என்னாகும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். எனவே மரணதண்டனை விஷயத்தை அரசியலாக்கி குளிர்காயும் அரசியல் சூழ்ச்சியை இனங்கண்டு மக்கள் விழிப்படைவது  நல்லது.