வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற உலககோப்பையில் முதல் சுற்றில் வெளியேறியபோது இந்தியாவிற்கு இளம் வீரர்கள் தேவை.. அதற்க்கு புதிய அமைப்பு வேண்டும் என்று கபில்தேவ் ஐசில் தொடங்கினார்.. அதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கபிதேவிற்கு கண்டனம் தெரிவித்து மட்டும் அல்லாமால் அவரை இந்திய கிரிக்கெட்டில் இருந்து முற்றிலுமாக தள்ளி வைத்தது . இந்தியாவையும் ஒரு தரமான அணியாக உலகத்திற்கு காமித்தவரை முற்றிலுமாக ஒதுக்கியது பிசிசிஐ .
அவர என்ன சொல்வது என்று தானாக ஐபில் தொடங்கியது . முதலில் இந்திய இளம் வீரர்களை உருவாகுகிறேன் என்ற பேர்வழியில் தொடங்கிய அமைப்பு பிறகு சூதாட்டமாகவும் ,பணம் புழங்கும் இடமாகவும் வலம் வந்தது.
இப்போது ? இந்திய அணி மேம்படுவதற்காக தொடங்கிய அமைப்பு இந்திய அணியையும் , இந்திய வீரர்களையும் அளித்து கொண்டு இருப்பதை கண்கூடாக நடந்து கொண்டு இருக்கிறது.
ஐபில் விளையாண்டு பணம் சம்பாதித்து விட்டு வெஸ்ட் இண்டீஸ் செல்லமால் தனது நாட்டுபற்றை வீரர்கள் காட்டினார்கள்.
தற்போது விளையாடினாலும் விளையாடும் உடற்தகுதி அற்று இருகிறார்கள். இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் 13 ஓவர் வீசிய நிலையில் ஜாகிர் கான் கால் வலி என்று உட்கார்ந்து விட்டார். மூன்றாம் நாள் காய்ச்சல் என்று சச்சின் விளையாடவில்லை , தற்போது எலும்பில் அடி என்று கம்பீர் நாலாவது நாள் போய் உட்கார்ந்து விட்டார்.
இங்கிலாந்து வர்ணனையாளர்கள் இந்திய வீரர்களை கிழித்து கொண்டு இருகிராகள். லைவ் வர்ணனையில் இந்திய வீரகளுக்கு இந்திய அணியா? ஐபில் போட்டியா? எது முக்கியம் ? அனைவரும் ஐபில் போட்டியில் ஆர்வம் காட்டுகிறார்கள் .. இந்திய அணியை காட்டிலும் அதில் ஆடுவது தான் அவர்களுக்கு ஆர்வம் அதிகம் என்று சூடாக கிண்டலடிகிறார்கள். அவர்கள் மிக சரியாகதான் கிண்டல் அடிகிறார்கள். அருகே உட்கார்ந்து இருக்கும் கவாஸ்கர் , ஹர்சா, சாஸ்த்ரி, கங்குலியால் பதில் சொல்ல முடியவில்லை. வேறு விதமாக பேச்சை மாற்றி சமாளிக்கிறார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் செல்லாத வீரர்களை இனி அணியில் எடுக்க கூடாது என்று சொன்ன கவாஸ்கர் இந்த முறை வாயை திறக்க வில்லை. என்ன எச்சரிக்கை அவருக்கு இடபட்டதோ ?
எதுவோ.. இப்போது இருக்கும் இந்த தலைமுறை இந்திய வீரர்கள் நாட்டுக்காக ஆடுகிறேன் என்பதை விட பணத்திற்காக ஆடுகிறேன் என்பது அவர்கள் மனதிற்கு நிறைவாக இருக்கிறது. பிசிசிஐ பணம் புழங்கும் வரை வாய் திறக்காது .. வாயில் நாக்கிற்கு பதிலாக பணம் இருக்கிறது.
நன்றி : குணா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக