OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 21 ஜூன், 2012

மீண்டும் ஒருமுறை.............!!!!!!!!!!!!!!!!!



 ​​​​​​அவர் நாள் வரும் அன்று நீங்கள் உங்கள் பேரபிள்ளைகளிடம் இந்த மேக வன்தட்டின் பயன்பாட்டை விளக்குவீர்கள், எவ்வாறு அதில் கோப்புகளை சேகரிப்பது, சேமித்த கோப்புகளை திரும்பவும் எவ்வாறு எடுப்பது என்று.

சரி ஏற்கனவே மெமரி கார்ட், பிளாஷ் டிரைவ் மற்றும் எக்ஸ்டர்நல் வன்தட்டு போன்றவைகள் பயன்பாட்டில் இருக்கும் போது அப்படி என்ன புதியதாக இதில் உள்ளது என்று நீங்கள் கேட்பீர்களேயானால் அதற்கான பதில்தான் இந்த பதிவு.

இன்று நாம் எத்தனை வகையான சேமிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், அது எல்லாம் நாம் எங்கு சென்றாலும் எடுத்து கொண்டு செல்லவேண்டும், சில சமயம் மனிதன் என்கின்ற அடிபடையில் நாம் மறந்துவிடுவோம், அதுமட்டுமில்லாமல் அதை அனைத்து கணினியிலும் பயன்படுத்துவது அவ்வளவு சுலபம் கிடையாது, எங்கே வைரஸ் தாக்கிவிடுமோ என்கின்ற பயம் வேறு மனதில், இதை எல்லாம் கணக்கிட்டுதான் கூகில், சுகற்சிங்க், மைக்ரோஸாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் பயனளார்களுக்காக இந்த தொழில்நுட்பத்தை தொடங்கி உள்ளன. சரி வாங்க இதை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

கூகிள் டிரைவ் (Google Drive):-


கூகிள் டிரைவ், இதை நீங்கள் www.drive.google.com என்கின்ற முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம், ஜிமெய்ல் மற்றும் கூகிள் டாக்ஸ் (Google Docs online)  வைத்துள்ள அனைத்து பயனாளர்களும் இதனை உபயோகபடுத்தலாம். இமெயிலில் உங்கள் ஆவணங்களை பகிர்ந்து கொள்வதை விட இதில் அதிக அளவிலான ஆவண்ணாகளை பகிர்ந்து கொள்ளலாம். மேலும் கூகிள் டாக்ஸில் நீங்கள் ஆன்லைனில் இருக்கவேண்டிய அவசியம் உண்டு, அது கூட இதில் தேவை இல்லை, ஆப்லைனிலேயே நாம் செய்துகொள்ளலாம்.
இதில் நீங்கள் ஒரு ஆவணத்தை (Documents, Spreadsheet, and Presentaions) உருவாக்கினால் ஒரே சமயத்தில் அதை பல பயனாளர்கள் பார்க்கவும்மாற்றம் செய்யவும் முடியும். அதுமட்டுமில்லாமல் இது எத்தனை மாற்றம் செய்தாலும் சேமித்து வைத்து கொள்ளும், மேலும் இது எல்லாவகையான கோப்பு வடிவத்தையும் ஏற்றுக்கொள்ளும், அவ்வளவு ஏன் உங்களுக்கு தேவையான ஆவண வடிவம் தேவையில்லை என்றாலும் இதுவாக கூகிள் டாக்ஸ் வடிவத்தில் மாற்றி குடுத்துவிடும்இந்த சேவையானது மேக் மற்றும் விண்டோஸ் இயங்குதள பயனாளர்களுக்கு இப்பொழுது வழங்கபடுகின்றது, பின்னால் அண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனாளர்களுக்கு வழங்க இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இது ஆரமபத்தில் 5gb சேமிப்பை இலவசமாகவும், 25gb சேமிப்பை $2.49/month க்கும், 100gb சேமிப்பை $5 க்கும், 200gb சேமிப்பை $10/month க்கும் மற்றும் 400gb சேமிப்பை $20/month க்கும் விற்பனை செய்து வருகின்றது. இந்த விளையானது நியாயமானதாக்வே தோன்றுகிறது. மேலும் பெரிய பெரிய வணிகர்கள் அவர்களுக்கு தேவையான அளவு வாங்கிக்கொள்ளலாம்.     


மைக்ரோசாப்ட் ஸ்கை டிரைவ் (Microsoft Sky Drive):-



ஸ்கை டிரைவ், இதை நீங்கள் www.skydrive.com தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுதான் இருப்பதிலேயே ஆதி வேகமாக செயல் படக்கூடியது என்றும்அதன் நிறுவனம் கூறுகின்றது.
இது கூகிளை காட்டிலும் கூடுதலாக 7gb சேமிப்பு அளவை இலவசமாக வழங்குகிறது. அது அதன் பயனாளர்களின் 99.94% பயன்பாட்டை பூர்த்தி செய்வதாகவும் தெரிவிக்கின்றது. இந்த அளவானது 20,000 ஆஃபிஸ் கோப்புகளையும், 7000 புகைப்பட கோப்புகளையும் சேமிக்க முடியும் எனவும் கூறுகின்றார்கள்.

சக்தி கொண்ட பயனாளர்கள்   மேலும் தங்களுக்கு சேமிப்பு அளவு வேண்டுமெனில், 20gb $10/year க்கும், 50gb $25/year க்கும் மற்றும் 100gb $50/year க்கும் வாங்கிக்கொள்ளலாம். இது விண்டோஸ் மற்றும் மாக் இயங்குதளங்களில் செயல்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதனுடைய ஆப்ஸ் விண்டோஸ் போன், ஐபோன் மற்றும் ஐபாட் இயங்கிக்கொண்டிருக்கின்றது. இதன் ஒரு முக்கிய சிறப்பு என்னவெனில், இதில் மைக்ரோசாப்ட் ஆஃபிஸ் கோப்புகளை அதுவாக நாம் உபயோகபடுதலாம், கூகிள் போன்று மாற்ற வேண்டியதில்லை. அது நாம் எப்படி நமது கணினியில் ஆஃபிஸ் கோப்புகளில் வேலை செய்கிறோமோ அதே போன்றே இருக்கும் எனவும் நம்பிக்கை தருகின்றது இந்த நிறுவனம். இது கூகிளை காட்டிலும் விலையிலும், சேமிப்பு அளவிலும் இன்னும் நல்லதாக இருக்கின்றது.

டிராப் பாக்ஸ் (Drop Box):-



இதை நீங்கள் www.dropbox.com என்கின்ற முகவரியில் பெறலாம்,. இதுதான் ஆன்லைன் சேமிப்பின் தாத்தா எனவும் எல்லோராலும் சொல்லப்படுகின்றது. ஏன் என்றால், இது  windows, mac and Linux ஆகிய மூன்று தளங்களிலும் இயங்கக்கூடியதாக இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் ஐபோன், ஐபாட், அண்ட்ராய்டு மற்றும் பிளாக்பெர்ரி போன்ற மொபைல் இயங்கு தளங்களுக்கும் இதன் நுண்பொருள் உண்டாம்.
இதை பயனாளர்கள் தொடங்கும்போது 2gb யுடன் தொந்தங்கலம், பின்னர் நீங்கள் அறிமுகம் செய்யம் ஒவ்வொரு நபருக்காகவும் உங்களுக்கு 500mb கிடைக்கும், அதுமட்டுமில்லம், உங்களுக்கு தேவையானதை நீங்கள் பனசெலுத்திவிட்டும் பெறலாம், 50gb $10/month, 100gb $ 50/month. மேல சொன்ன மற்ற இரண்டை விட இதுதான் மக்களிடையே அதிகமாக சென்றடைந்துள்ளது, சமீபத்தில் இது தனது இந்த சேவையில் பயனாளர்கள் புகைப்படம், மற்றும் வீடியோவை சேமித்து கொள்ள கூடிய வசதியா வழங்கியுள்ளது. மேலும் புகைபடதை நேரடியாக காமெராவிலிருந்தும் டேப்லெடில் இருந்து, போனில் இருந்தும் இதில் ஏற்றிக்கொள்ளலாம். நீங்கள் ஏற்றும் ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு 500mb இலவசமாக இது குடுக்கின்றது, இந்த அளவு 3gb வரை தொடர்கிறது. இதில் ஒரே குறைபாடு என்னவெனில் ஒரு குழுவாக இதில் செயல்பட முடியாது, அதாவது ஃபைல் பங்கீடுதல் இதில் இல்லை. தனிநபருக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அப்படி ஒரு குழுவுக்காக வேண்டுமென்றால் அதற்கென்று இதில் தனி சர்வீஸ் உண்டு, ஆனால் அது கொஞ்சம் அதிக விலையில் உள்ளது.

சுகர் சிங்க் (Sugarsync):-



இதை நீங்கள் www.sugarsync.com  என்கின்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம், இது கடந்த 2008-இல் தான் இதன் மேக வன்தட்டின் செயல்பாட்டினை ஆரம்பித்துள்ளது. இது எல்லாவகையான மொபைல் பொங்கலிலும்  வேலை செய்கின்றது.  
ஆரமபத்தில் 5gb சேமிப்பை இலவசமாகவும், 30gb சேமிப்பை $5/month க்கும், 60gb சேமிப்பை $10 க்கும், 100gb சேமிப்பை $15/month க்கும் விற்பனை செய்து வருகின்றது.

மேலும் இதன் ஒரு பிரதியோக பயன்பாடு என்னவெனில் நீங்கள் ஒரு முறை இதில் சேமித்தால் போதும், அடுத்தமுறை நீங்க ஆன்லைனில் போகும்போது அதுவாக சிங்க் செய்துவிடும். அதுமட்டுமில்லாமல் நீங்க முகபுத்தகம் போந்த்வற்றிலும் இதனை பங்கிட்டு கொள்ளலாம். மேலும் உங்கள் பழுதடைந்தாலும் இதன் மூலம் உங்கள் போட்டோக்கள், வீடியோக்களை மறுபடியு பெற்றுக்கொள்ளலாம்.

எனவே இதுபோன்ற ஒரு தேவைகள் இன்றைய காலகட்டத்தில் அத்தியவிசயமாக உள்ளது. இதன் மூலம் நாம் பயன்பெறலாம்.

இனி எதையும் நாம் கையில் எடுத்து கொண்டு செல்ல தேவையில்லை. !!!!!!!!!!!!!!!!!!!

உங்கள் கருத்துக்கள் என்னுடைய தவறை சரிசெய்துகொள்ள உதவும். நன்றி.

     

கருத்துகள் இல்லை: