அஸ்ஸலாமு அலைக்கும்,
ஆயிரம் முகநூலைவிடவும், அதைவிட அதிகமான வாட்ஸப்பை விடவும் மிகவும் சக்திவாய்ந்த ஒரு ஆயுதம், சாதனம்
நம்மிடம் (இஸ்லாமியர்களிடதில்) உள்ளதென்றால் அது வேறொன்றுமில்லை, நமக்கு
வலியுறுத்தி சொல்லப்பட்ட வெள்ளிக்கிழமை ஜும்மாதான். ஆனால் அதை இன்று நாம்
இஸ்லாமியர்கள் யாருமே சரியாக பயன்படுத்திக்கொள்வதாக தெரியவில்லை. நான் இங்கு சொல்ல
போவது இஸ்லாமிய அடிப்படையில் இந்த ஜும்மா நடைபெறுகிறதா என்றில்லை...!!!!! இது வேற
மாதிரி...!!!!!!!!!!!!!
இன்று நடக்கும்
எந்த ஒரு மார்க்க விளக்க கூட்டமாக இருந்தாலும் ஏதாவது ஒரு இயக்கம் நடத்த வேண்டும்
அப்படியே அவர்கள் அழைத்தாலும் அந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் அதிகமானோர் வருவார்களே
தவிர மற்ற இயக்கதினர் அதிகளவில் வருவது கிடையாது. இதில் நாம் எந்த அளவிர்க்கு இஸ்லாத்தை
எத்திவைக்க முடியும்? இன்று சமூக வலைதளங்களையும், முகநூலையும், வாட்ஸப்பையும்
பயன்படுத்துபவர்கள் பெரும்பாலானவர்கள் இருந்தாலும், வயதானவர்கள், சிறுவர்கள், மேலும்
பெண்கள் படிப்பறிவில்லாதவர்கள் அடிப்படை கல்வி இல்லாதாவர்கள் இப்படியானவர்கள்
யாரும் அதை பயன்படுத்துவதில்லை. அப்படியே அதை பயன்படுத்துபவர்கள் எத்தனை பேர் அதை
முழுமையாக தாவாவிலும், நல்லொலுக்கத்தையும் பேணுகிறார்கள், இன்று
இயக்கங்களுக்கிடையில் நடக்கும் பனிப்போருக்கு மட்டுமே இந்த இயக்க வாதிகள் இதை பயன்படுத்துகிறார்கள், அவர்கள்
மட்டுமில்லை, இளைய தலைமுறைக்கூட புகைப்படங்களை போடுவதற்க்கும், நண்பர்களின்
பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்க்கும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஏன் தௌஹீத்
என்று சொல்லிக்கொள்வோர்க்கூட பெருமைக்கு சொல்லவில்லை சொல்லவில்லை
என்றுக்கூறிக்கொண்டே பல பதிவுகள் அவர்களுக்கே தெரியாமல் பெருமையாக வருகின்றன என்ன
அல்ஹம்துலில்லாஹ், சுபஹானல்லாஹ், மாஷா அல்லாஹ் என்று போடுவது மட்டுமே ஆறுதல்.
இந்த
கோட்டைத்தாண்டி நானும் வரமாட்டேன் நீயும் வரக்கூடாது பேச்சு பேச்சாதான் இருக்கணும்
இதுதான் இன்றைய இஸ்லாமிய இயக்கங்கள் நடத்தும் மார்க்க கூட்டங்கள் எல்லாமே..!!!!! இஸ்லாமிய
ஒற்றுமை என்பது இந்த சமூக வலைத்தளங்களில் வசைபாடுவதில் மட்டும்தான் இருக்கு.
ஆனால் சுபஹானல்லாஹ்
அல்லாஹ்வுடைய ஏற்பாட்டை பாருங்க வாரந்தோறும் ஒரு நாள் படிச்சவன் படிக்காதவன், பணக்காரன், ஏழை, சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள், திருடுகிறவன், குடிப்பவன், கூத்தடிப்பவன்
ஏன் இன்னும் சொல்லப்போனால் இஸ்லாத்தின் அடிப்படையை கூட தெரியாதவன் இந்த ஜும்மாவில்
கலந்துக்கொள்ள செய்துள்ளான் இது எப்பேற்பட்ட ஒரு ஏற்பாடு.....!!!!!!! இதை நாமும், நம்முடைய
சமுதாயத்தில் மார்க்கத்தை கற்று அறிந்த ஆலிம்களும், உலமாக்கலும், மதனிகளும்
இன்னும் பலர்களும் சரியாக பயன்படுத்துகிறோமா? என்றால் அங்கே மில்லியன் டாலர் கேள்விகள்தான் மிஞ்சும்.
எத்தனை ஊர்களில்
இந்த ஜும்மா மேடையில் நாட்டின் நடப்புகளை பேசுகிறார்கள், கல்வியின்
அவசியத்தை சொல்கிறார்கள், அல்லது அந்த அந்த ஊரின் நடப்புகளை பற்றியாவது பேசுகிறார்களா? பெண்களை குறைந்தது ஜும்மாவிர்க்கு
அனுமதிக்கிறார்களா? இன்று தமிழகத்தில் வாராவாரம் பெண்களை ஜும்மாவிர்க்கு அழைத்திருந்தாலே நமது
சமுதாய பெண்களை கேடுகெட்ட சீரியல் பார்ப்பதைவிட்டும், பள்ளிலுத்து
அண்டை ஆடவருடன் பேசுவதைவிட்டும், அல்லக்கைகளுடன் ஓடிப்போவதை விட்டும்
தடுத்திருக்கலாமே. நாமதான் விரலாட்டினாலே விரட்டியடிக்கிறோமே, தொப்பிப்போட்டால்
தோரத்துகிறோமே..!!!!!!!!
அப்படி இல்லை
நாங்கள் வாராவாரம் பயான் செய்கிறோமே என்று நீங்கள் சொன்னால்?? எதை சொல்கிறீர்கள் தொழுகையைபற்றி, ஈமானைப்பற்றி, நோன்பைப்பற்றி
(அதுவும் சீஸன் மாம்பழம் போல அந்த மாதம் மட்டும்தான்) மறுமையைப்பற்றி சந்தோஷம், ஆனால்
ஊரில் நடக்கும் சிர்க்காண காரியத்தை எதிர்த்து பேசியுள்ளீர்களா? மௌலீதை
எதிர்த்து ஒரு ஜும்மாவில் ஒரு வரி பேசியிருப்பீர்களா? வட்டியின்
கொடுமையை விளக்கியிருப்பீர்களா? வரதட்சணை ஒரு வன்கொடுமை என்று ஒரு
வார்த்தை சொல்லியிருப்பீர்களா? இன்னும் குடி, வீண்விரயம், நட்பு, சொந்தம், அண்டைவீட்டார்
இப்படி எதைப்பற்றியாவது பேசியிருப்பீர்களா? இஸ்லாத்தின் அடிப்படை
கொள்கையை மட்டுமே பேசி பேசி பேசி....!!!!!!! மற்ற எதையும் தெரிந்தக்கொள்ள வாய்ப்பே
அளிக்காமல் இந்த ஜும்மா உரைகளை வீனடித்ததுதான் மிச்சம்.
இஸ்லாத்தில் இரண்டு
பெருநாள் தொழுகைக்குக்கூட இந்த அளவிர்க்கு முக்கியத்துவம் குடுக்கவில்லை
நபியவர்கள்...!!!!! ஊரில் நடக்கும் அநியாயத்தையும், மார்க்கத்திர்க்கு
எதிராக நடக்கும் அவலங்களையும் வாராவாரம் பேசியிருந்தாலே இன்று இயக்கங்களுக்கு வேலை
இருந்திருக்காது..!!!!!!!!!!!! இன்று கூட பல ஊர்களில் பல பள்ளிகளில் அதை
நிர்வாகிக்கும் நிர்வாகி சொல்வதைதான் பேசவேண்டும் இது மாற்ற முடியாத விதியாக
உள்ளதே...!!!!!!!!!!!!!!!! இதுல கொடுமை என்னவென்றால் மார்க்கத்தை கற்று அறிந்த
ஹஜ்ரத்மார்களே இந்த மரமண்டை நிர்வாகிகளின் பேச்சைக்கெட்டு இறைவனுக்கும், ரசூலுக்கும்
மாறு செய்கின்றனர் என்பதே நினைத்தால்....!!!!!!
இப்படி அனைத்து
ஊர்களிலும் ஜும்மா நடக்கும் அனைத்து பள்ளிகளிலும் மக்கள் கூடுவார்களே, இப்படி
ஒரு கூட்டம் வேறு எங்காவது கூட்ட முடியுமா?? இஸ்லாமிய சொந்தங்களே
சிந்தித்துப்பாருங்கள். நம்முடைய ஜும்மா உலகின் எவராலும் நினைத்துக்கூட பார்க்க
முடியாதது எந்த இயக்கம், அரசாங்கம் நினைத்தாலும் கூட்ட முடியாத ஒரு ஏற்பாடு இது இறைவனின் ஏற்பாடு அதை
சரியான முறையில் இனியாவது பயன்படுத்துவோமா????....!!!!!!!!!!!!!!!!!!!!!!
குறிப்பு:-
எனக்குத்தெறிந்து தௌஹீத்ஜமாத் இந்த ஜும்மா மேடையை சரியான முறையில்
பயன்படுத்துகிறார்கள். உங்களுக்கு தெரிந்தது இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக