இந்த பதிவில் வரும் எல்லாம் வெறும் கற்பனையே!!!!!!!!!!!!!!
இந்த பதிவில் வரும் பெயர்கள் வேறயாரையாவது நியாபகம் படுத்தினால் நிர்வாகம் பொறுப்பல்ல.
தமிழ் சினிமாவில் காட்டப்படும் முஸ்லிம்கள் வந்தேறிகளாகவே உள்ளனர். முஸ்லிம்கள் இந்த
மண்ணின் மைந்தர்கள் அல்ல எனும் விஷமக் கருத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் நிறுவுகின்ற வகையில்
தொடர்ச்சியாக காட்சிகள் அமைக்கப்படுகின்றன.
தமிழ்
சினிமாவில் தோன்றும் முஸ்லிம்கள் தமிழுக்கு அறவே தொடர்பில்லாதவர்களாக சித்தரிக்கப்
படுகின்றனர். கழுத்தில் தாயத்தும், தலையில் தொப்பியும், லுங்கியும் அணிந்து, கையில் கத்தியுடன் கசாப்புக் கடைகாரனாகவோ, பச்சைத் தலைப்பாகையுடனும் விகாரமான
தோற்றத்துடனும் சாம்பிராணி போடுபவராகவோ காட்சியளிக்கும் முஸ்லிம் 'ஹரே பாய்..நம்பல் கீ' என்றுதான் பேசுகிறார்.
இதுதானா தமிழ் முஸ்லிம்களின் அடையாளம்? இதுவா நமது கலாச்சாரம்? 'நாம் இன்னும் பதிவு செய்யப்படாத சமூகம்' என்று உணரப்போகிறோம். ஆனால், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் முஸ்லிம்கள் ஆற்றிய அரும்பணி பற்றியும், நடைமுறை வாழ்வில் கூட தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் குறித்தும் யார் படமெடுப்பது?
'சாதம்' என்று உயர் சாதியினர் பேசுவது போல் அல்லாமல் 'சோறு' என்று நல்ல தமிழில் உச்சரிப்பவர்கள் முஸ்லிம்கள். குழம்பை 'ஆணம்' என்றும் பழையதை 'நீர்ச்சோறு' என்றும் தூய தமிழில் பேசுபவர்கள் முஸ்லிம்கள். சாப்பிட்டாயா
என கேட்காமல் 'பசியாறினாயா' என்று கேட்பவர்கள் முஸ்லிம்கள்.
பூஜை
புனஸ்காரங்கள் என்று சொல்லாமல் 'தொழுகை' என்று அழகுத் தமிழில் அழைப்பவர்கள் அல்லவா முஸ்லிம்கள்.
இன்னும் எத்தனை எத்தனை தகவல்கள்? இந்த உண்மைகளை யார் பதிவு செய்வது?
நாம்தானே செய்ய
வேண்டும். நமக்குத்தான் நம் வாழ்வியலின் ஆழ அகலம் தெரியும்; வலியும் வேதனையும் புரியும். நமது
கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியத்தின் வலிமை தெரியும். இனி நமக்கென்று ஒரு ஊடகம் ஒன்றை நாமே உருவாக்கினால்தான், இந்த காவிதேசத்தில் சத்தியத்தை நிலை நாட்ட முடியும்.
அப்படி இல்லை என்றால் சில சிங்கங்களும், வவ்வால்களும், நம்மை சீண்டிப்பார்க்கத்தான் செய்யும்.
3 கருத்துகள்:
தூய தமிழில் பேசுவதானால் முதலில் உங்கள் சமூகத்தினர் தூய தமிழ் பெயரை வைத்துக்கொள்ளவும். அது என்ன தமிழுக்கு தொடர்பில்லாத அராபிய பெயர்கள் உங்களுக்கு.
சரி கண்டனம் எங்க?
முட்டா பையா கண்டனத்தை "காக்கா" கொண்டுபோய்விட்டது..!
கருத்துரையிடுக