OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 11 பிப்ரவரி, 2013

உட்கார்ந்து யோசிச்சது


என்ன நடக்கிறது பண்ணையில்:-
இது ஒரு பண்ணை பற்றிய கற்பனை கதை. இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. இந்த கதாபாத்திரங்கள் யாரையாவது நியாபகம் படுத்தினால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பில்லை.


கதைக்களம்:- பண்ணை
கதாநாயகர்கள்: சிங்கம் (பண்ணை நிர்வாகி), குள்ள நரி, ஒட்டகம் (தலைவர்), புலி, சிறுத்தை மேலும் சில விலங்குகள் (பெயர்கள்) கதையில் சொல்லப்படும். இது முழுக்க முழுக்க நகைசுவை மட்டுமே.
முதலில் இப்ப உள்ள டீசல் விலை உயர்வை கண்டித்து பண்ணையில் உள்ளவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்று பார்ப்போம்:-
சிங்கம்:- இது குறித்து நான் மௌனமாய் இருப்பதற்குக் காரணம்..என் மௌனம் ஆயிரம் பதிலுக்கு சமம் என்பதால் தான்.

ஒட்டகம்:- மக்கள் பராட்டா விலை உயர்ந்தால் மௌனமாய் உள்ளனர். வாடா விலை உயர்ந்தால் மௌனமாய் ஏற்றுக் கொள்கின்றனர். டீசல் உயர்ந்தால் ஏன் கத்துகிறார்கள்? என்றே புரியவில்லை.

சிறுத்தை:- நாம இருக்க வேண்டிய காட்டை விட்டு இங்கே இந்த பண்ணையில் வந்ததால்தான் இந்த பிரச்சனை எல்லாம் நாம பேசவேண்டியுள்ளது.
குள்ள நரி:- இந்த விலை உயர்வுக்கு ஒற்றுமையை குலைத்த, விலங்குகள் காட்டில்தான் இருக்கும் என்று கூறும் இயக்கத்தை சேர்ந்த மிருகங்களே காரணம். அடுத்தத் தேர்தலில் அவர்கள் நின்றாள் நான் நிர்க்க மாட்டேன்.
புலி:- இந்த விலை உயர்வால் பண்ணையில் இடைதேர்தல் வர வாய்ப்பிருக்கு.

யானை:- இந்த உயர்வுக்கு காரணம் குள்ள நரியும், புலியும் தான். அதற்கான ஆதாரங்களைத் திரட்டிவருகிறேன்.கூடிய விரைவில் இவர்கள் மீது வழக்குத் தொடர்வேன்.

மற்ற விலங்குகள் (கழுதை, எருமை, ஓனாய், காட்டெருமை):- பண்ணையில் இருந்து இந்த உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தபடும்.

நடுநிலை மிருகங்கள் (முயல், மான், காண்டாமிருகம்):-  இந்த உயர்வை கண்டிக்கிறோம்.பண்ணை தலைவரை மரியாதை நிமித்தம் சந்திக்க உள்ளோம்.


அடுத்து நம்ம சிங்கத்தின் அதிரடி:-
நான் பண்ணையை ஆரம்பிச்சப்ப எனக்கு  இவ்ளோ பெரிய  ரீச் இருக்கும்னு 
நினைக்கவே இல்ல..

Lions Club-ல பேச கூப்பிட்டாங்க. Short film எடுக்கலாம் வாங்கன்னு ரெண்டு பேர் கூப்பிட்டாங்க...சினிமாவுக்கு Screenplay எழுத ரெண்டு பேர் கூப்பிட்டாங்க...ஆனா.. அவங்க அழைப்பை என்னால Use பண்ணிக்க முடியாம போச்சு..சாரிபா...!!

ஆனா... இந்த வாரம் என் விகடன்-ல என் ப்ளாக் வந்ததை பாத்துட்டுவிகடன் ஆபீஸ்ல இருந்து போன் பண்ணி..." உங்க காமெடி நல்லா இருக்கு..விகடனுக்கு ரெகுலரா எழுதி தர முடியுமா.? " ன்னு கேட்டாங்க.. நானும் " நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒண்ணும் அவ்வளவு பெரிய அப்படக்கர் இல்ல சார்..நான் ஒரு டம்மி பீஸ்" னு சொன்னேன்..( சிங்கம்  பெரிய எழுத்தாளர் (?!) ஆனதும் உனக்கு தன்னடக்கம் தானா வந்துடுச்சிடோய்..! ) 

ஆனா அவங்க விடறதா இல்ல.. அப்புறம் நான் " ஓ.கே " சொல்லிட்டேன்.. இதுக்கு மட்டும் எப்படி " ஓ.கே "சொன்னேன்னு பார்க்கறீங்களா..?!

" மாசம் ஒண்ணோ , ரெண்டோ எழுதி குடுத்தா கூட போதும் "னு அவங்க எனக்கு சுதந்திரம் குடுத்து இருக்காங்க...அதே மாதிரி நானும் அவங்களுக்கு  சுதந்திரம் குடுத்து இருக்கேன்.." எழுதி அனுப்பற எல்லாத்தையும் போடணும்னு கட்டாயமில்ல.., உங்களுக்கு பிடிச்சதை மட்டும் போடுங்கன்னு... "

ஹி., ஹி., ஹி..., எங்கே போனாலும் அடங்க மாட்டோம்ல...!!
.

கருத்துகள் இல்லை: