இதுவரை விஷ்வரூபத்தை பற்றி பல ரூபங்களில் எழுதியாச்சு, இத்துடன் இப்படடம்
கடைசி மாதிரி இந்த பதிவுடன் முடித்துக் கொள்வோம், சரி அப்படியும்
எதையுமே எழுதாமே இருந்தா தம்பி டீ இன்னும் வரலைன்னு வேற சில குரல்கள். சரி டீய பாத்தியாவது
எழுதலாம்னு பார்த்த, வடை போச்சேன்னு சொல்றாங்க. எதையும் ஆக்கபூர்வமாய் எழுதவேண்டும்
இல்லையேல் எழுதவே
கூடாது என்பது என் கருத்து. சும்மா கோவில் யானையை கும்கி யானையா மாத்தூர வேலை எல்லாம்
நமக்கு சரிப்பட்டு வராது.
சமீபகாலமாய் விஷ்வரூபத்தை
பற்றி சும்மா தாறு டாராக அடித்து துவைத்து காயப்போட்டாச்சு. ஆனா கடைசியாக சில காட்சிகளை
நீக்கிவிடுகிறேன் என்று சுமூக தீர்வுக்கு வந்துவிட்டனர். இந்த காம(கமல்)ஹாசன் இதை முன்னரே
செய்திருந்தால் இத்குடன் சேர்த்து எனக்கு ஒரு 10 பதிவுகள் மிச்சமாகி இருக்கும். ஆனால்
என்னை பொறுத்தவரை இதற்க்கு நம்ம இஸ்லாமிய அமைப்புகள் ஒத்துக்கொண்டிருக்கவே கூடாது?? இந்த விஸ்வரூப
பிரச்சனையில்தான் எத்தனை காவி சிந்தனையாளர்கள் வெளிச்சத்திர்க்கு வந்தார்கள், அவர்களுக்கு எங்கே புரியும் நமது உணர்வுகள், தலைவலியும், வையித்து வலியும் அவனவனுக்கு வந்தால்தான் தெரியும்!!!!!!!!!!!
என்னதான் காட்சிகளை நீக்கினாலும், பாலில் இருந்து
தண்ணியை எப்படி பிரிக்க முடியாதோ அந்த உண்மை படம் பார்த்துவிட்டு போற எல்லோருமே ஒரு
நிமிஷமாவது பக்கத்துல தொப்பி வைச்சுக்கிட்டு நடந்து போரவனை பயத்தோட பார்க்கிற பயங்கரம்
படத்திலே இருக்கு!!!!!
பலவருடங்களாக இந்த சினிமாத்துறை ஒரு குறிப்பிட்ட மததினரை குறிவைத்து
கேவலமாகவும், கொடூரமாகவும் சித்தரித்து வருகின்றது, இதில் நம்ம ஆக்சன்
கிங் அர்ஜூன் முதல் இன்றைய அஜீத்குமார் வரை அனைவரும் அடங்குவார்கள். தமிழகத்தில் இஸ்லாமியர்களை
தீவிரவாதிகள் என்று சொன்ன முதல் பிரஜை நம்ம சொட்டை மண்டை கருணாநிதி என்றால் அது மிகையாகாது.
இவரின் பிரதிபலிப்புதான் இன்றைய சினிமாக்கள்.
மேலும் உலகிலேயே சினிமா தாக்கத்தால்
பாதிக்கப்பட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடுதான், சினிமாவையும் வாழ்வையும் பிரித்துப்
பார்க்கத் தெரியாத ஒரே இனம் தமிழ் இனமே, இங்குதான் சினிமாவில்
வள்ளலாக நடித்தவர் முதல்வராக முடியும், ஒரு கதாநாயகர் நினைத்தால்
ஆட்சிமாற்றமே கொண்டு வார முடியும். அது அறிவு வளர்ச்சியா? அறிவு
வளர்ச்சியா? இத்தகைய சிறப்புவாய்ந்த தமிழ் சமுதாயத்தில் விஸ்வரூபம், துப்பாக்கி போன்ற அறிவுஜீவி படங்கள் எதுவும் செய்யலாம்.
மேலும் இந்த இஸ்லாமியர்களை பற்றி இங்கே சில குறிப்புகள்
சொல்லியே ஆக வேண்டும், இந்த விஷ்வரூபத்தை தொடர்ந்து
ஒன்று கூடிய இந்த 24 அமைப்புகள் இருப்பது அனைத்து தமிழக மக்களுக்கு தெரிந்துவிட்டது.
இனி இஸ்லாத்தை பத்தி மட்டுமில்லை, எந்த மதத்தையும் தீண்டி எவனும்
படம் எடுக்க யோசிப்பான். யாருடா பூனைக்கு மணிக்கட்டுவது என்று இருந்தது, நாங்கள் கட்டியதில் பெருமையாக உள்ளது.
எனவே கருத்து சுதந்திரம் என்கின்ற பெயரில், ஒரு சாராரை கருவருப்பது நல்லது கிடையாது, கடைசியாக ஆஸ்காருக்கு ஆசைப்பட்டு அமெரிக்காவிர்க்கு அடிமையாகிவிடாதே!!!!!!
இப்போதைக்கு இவ்வளவுதான்......................... மீண்டும்
அடுத்த பதிவில் சந்திப்போம், கருத்து எழுதுவதும்,
எழுதாமல் போவதும் உங்கள் உரிமை. அதில் தலை இட நான் விரும்பவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக