ஒற்றுமை கோ(வே)ஷம் போடுபவர்கள், உண்மையில் ஒற்றுமையை விரும்புவார்களேயானால், ஒற்றுமை ஏன் குலைந்தது என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்.
அதை சரி செய்ய என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.
இதை செய்யாமல், ஒற்றுமை, ஒற்றுமை என்று சொல்லி விட்டால் ஒற்றுமை ஏற்பட்டு விடாது.
ஒரே மேடையில் தோன்றுவதோ, ஒரே குடையில் கீழ் அணிவகுப்பதோ, ஒற்றுமைக்கு சான்று என்று நீங்கள் கருதினால் அது தவறு.
ஒற்றுமை என்பது கொள்கையில் இருக்க வேண்டும்.. அல்லாஹ் சொன்ன ஒற்றுமையாக இருக்க வேண்டும்..
மார்க்கத்தில் ஒன்றுபடுவது தான் உண்மையான ஒற்றுமையே தவிர, நீங்கள் சொல்வது போல், தேவையென்றால் சேர்ந்து கொள்ளலாம், அனைத்தையும் மன்னிக்கலாம், என்ற வாதங்கள் எல்லாம் வெறும் வாதங்களாகவே நிற்கும் .
அல்லாஹ் சொன்ன கொள்கையில் ஒன்றுபடுமாறு அனைத்து இயக்கங்களையும் அழையுங்கள்..
அதுவே உண்மையான அழைப்பு.. அதுவே உண்மையான ஒற்றுமை.. அந்த நாள் வரும் போது, ஒரே ஒரு இயக்கம் மட்டும் தான் மிஞ்சி நிற்கும்..நபிகளார் காட்டி தந்த அந்த ஒரு இயக்கம்!!
ஆக, கொள்கையை ஒன்றுபடுத்துங்கள், மக்கள் ஒன்றுபடுவார்கள். !!
-----------------------------------------------------------------------------------------------
நீங்கள் மீண்டும் மீண்டும், இயக்கத்தை ஒன்றினைப்பதையே குறிக்கோளாக கொள்கிறீர்கள்.
கொள்கையை ஒன்றிணையுங்கள் என்று நாம் சொல்கிறோம்.. கொள்கை ஒன்றாகாமல், இயக்கங்கள் ஒன்றாகாது!!
- மார்க்க விஷயத்தில் எது சரியான கொள்கையோ, அதை அனைவரும் கடைபிடிக்கும் வகையில் ஒன்றிணைய அழையுங்கள்..
- அரசியல், சமூக , பொருளாதார சித்தாந்தங்களில் ஒரு முஸ்லிம் கொள்ள வேண்டிய பார்வை என்ன? என்பதை குறித்த கருதொற்றுமைக்கு முதலில் அனைவரையும் அழையுங்கள்..
- ஜனநாயக நாட்டில், இஸ்லாமிய ஆட்சி இல்லாத ஒரு நாட்டில், நம் உரிமைகளை பெறுவதற்கான வழி என்ன? என்பது குறித்த பார்வையில் அனைவரையும் முதலில் ஒன்றிணைய அழையுங்கள்..
இது போன்ற கருத்தொற்றுமை முதலில் ஏற்ப்பட வேண்டும். அதன் பிறகே, அதை அடைவதில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒற்றுமையை பார்க்க முடியும்..
இதில் எந்த ஒன்றில் கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும், மீண்டும் ஒற்றுமை ஏற்படாது என்பதையும் கவனத்தில் கொள்க..
ஒரு வேளை, ஜெர்மன் முறையான வாக்கெடுப்பு முறை இந்தியாவில் கொண்டுவரப்ப்படுமானால், அப்போது, தேர்தலில் தவ்ஹீத் ஜமாஅத் போட்டியிடலாம்!
இன்றைய சூழலில் பிரிட்டின் முறையான அடிப்படையில் செயல்படும் தேர்தல் முறை, ஆட்சி முறை என்பது, பிற்ப்படுதப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகிய வர்கத்தினருக்கு போதுமான பிரதிநித்துவம் கிடைக்க வழி இல்லாத ஒரு முறை!
ஆனால், இந்த வழிமுறையை ஆதரித்து, தேர்தலில் போட்டியிடக்கூடிய முஸ்லிம் அமைப்புகள் உள்ளன..
இந்த கருத்து வேற்றுமையை மாற்றாத வரை ஒற்றுமையை பேசி என்ன பயன்?
ஆக, வெறுமனே இயக்கங்களை ஒன்றிணைப்பதோ, ஒரு தேர்தலில் ஒற்றுமையாக பேசி, ஒரே மேடையில் காட்சி தருவதோ ஒற்றுமைக்கான உண்மையான நிறம் அல்ல!!!
அடிப்படைகள் மாற வேண்டும்.. !!!!!!
அதை ஒரு புரட்சியாக செய்ய வேண்டும்.. !!!!
வெறுமனே கோஷங்கள் பயன் தராது என்பது எனது மிக ஆழமான கருத்து!!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக