OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 18 நவம்பர், 2012

ரொம்ப உஷாராக இருக்கிறதா நினைக்கிற இண்டர்நெட்வாசிகளே! எச்சரிக்கை

இணையத்தில் உலாவரும் தனிநபர்களைப் பற்றிய தகவல்களைக் கோருவதில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.


இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இணைய பயன்பாட்டாளர்கள் 3467 பேர் பற்றிய தகவல்களைக் கோரி 2319 வேண்டுகோள்களை இந்தியா விடுத்திருக்கிறது. அமெரிக்காவோ இதுபோல் 7969 வேண்டுகோளை விடுத்திருக்கிறது. அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து பிரேசில் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த நாடு இண்டர்நெட்வாசிகள் பற்றி 1566 வேண்டுகோளை கொடுத்திருக்கிறது. மொத்தமாக இண்டர்நெட்வாசிகள் பற்றிய 20,938 வேண்டுகோள்கள் கூகுளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
பொதுவாக ஜிமெயில் அக்கவுண்ட், சாட்டிங் விவரங்கள், ஆர்குட் விவரங்களைப் பற்றியே அதிகம் கேட்கப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஆண்டு இதுபோன்ற தகவல்களைக் கோரும் வேண்டுகோள்கள் அதிகரித்தே வருகிறது என்கிறது கூகுள் வட்டாரம்.
நீதிமன்ற உத்தரவுகள் மூலமும் இத்தகைய தகவல்களைக் கோருவது இந்தியாவில் அதிகரித்தே வருகிறது. இணைய தளங்கள் மூலமாக நீதிமன்றங்களுக்கு தகவல்களைத் தருவதும் அதிகரித்தே வருகிறது. நடப்பாண்டில் இதுபோல் 596தகவல்கள் நீதிமன்றத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது 20 நீதிமன்ற உத்தரவுகள் மூலம் எடுத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால் 2010 ஆம் ஆண்டு 125 விவரங்கள் இணையதளம் மூலம் நீதிமன்றங்களுக்குக் கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப உஷாராக இருக்கிறதா நினைக்கிற இண்டர்நெட்வாசிகளே! எச்சரிக்கை!


கருத்துகள் இல்லை: