OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 22 அக்டோபர், 2012

விளம்பரங்களில் வக்கிரங்கள்!!!!



இன்றைய காலத்தில் ஒரு பொருளை நீங்க விற்க்கவேண்டுமென்றால் அதற்க்கு ஒரு மிக பெரிய விளம்பரம் செய்யவேண்டும். அப்படி செய்யப்படும் விளம்பரம் மக்களிடையே பிரபலமானால்தான் நமக்கு லாபம் கிடைக்கும். ஆனால் அந்த விளம்பரம் என்ற உடன்  அந்த சமயத்தில் தான் விளம்பர கன்சல்டண்ட்ன்னு சொல்லி ஒருத்தன் வருவான் (ஆஹா நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டாண்டா!!!) அப்படின்னு சொல்லி ஒரு தொகையை ஆட்டையை போட்டுடுவான். சரி நாம விஸ்யாதுக்கு வருவோம்.



இப்படி ஒளிபரப்ப படுகின்ற விளம்பரங்கள் மக்களின் இப்படி எடுக்கிற விளம்பரம் மக்கள்ட்ட சென்றடையனும்கிறதுதான் முக்கியம், அதுல பெருசா சமூக அக்கறை உள்ள விஷயமா கொண்டு போய் சேர்க்கனும்கிறதுல்லாம் முக்கியமில்லை. சரி அதெப்படி அவன் காசு போட்டு எடுக்கிற விளம்பரத்துல சமூக கருத்தை சொல்லனும்னு நீங்கள் எதிர்ப்பார்க்கிறீங்கன்னு கேட்கலாம். அட சமூக கருத்தை சொல்ல வேண்டாம்பா, சமூகமே கூச்சப்படும் அளவுக்காவது விளம்பரங்கள் இல்லாமல் இருந்தா அதுவே சமூக சேவை மாதிரிதான். 


ஒரு காலத்தில் இருந்து ஒரு சில விளம்பரங்கள் இன்றைக்கும் மக்கள் மனதில் நிலைபெற்று இருக்கின்றது, வாஷிங் பவுடர் நிர்மா, சொட்டு நீலம் டோய், I am a complan boy, I am a complan girl, நீ குழந்தையா இருக்கச்சே போன்றவைகள். ஆனால் இன்று உள்ள விளம்பரங்கள் எல்லாம் இரட்டை அர்த்தங்கள் கொண்டதாகவே உள்ளது. இதில் பெரும்பாலானவைகள் நேரடியாகவே வக்கிரத்தை காட்டுகின்றது.
உதாரணமாக, ஆண்கள் உபயோகிக்க கூடிய கோடாரி deodorant விளம்பரம், இதை அடித்தவுடன் ஊரில் உள்ள பெண்கள் எல்லாமே அரைகுறை ஆடையுடன் அவன் பின்னாடி போறாங்கலாம்? அப்ப இதை தயாரித்தவன் வீட்டு பெண்களுமா? இதில் கொடுமை என்னவென்றால், பெண்களின் வாழ்க்கையில் மிகவும் வேதனைதரக்க் கூடிய ஒரு சில நாள் உண்டு அதை பற்றி இப்படி விளம்பரம் have a happy ___________. பெண்களை எப்படி கொச்சை படுத்துகிறார்கள்!!! இதை எந்த தந்தையாவது தன் மகளுடன் உட்கார்ந்து பார்க்க முடியுமா? என்னதான் பிராக்டிகளா யோசித்தாலும், இதன் உரிமையாளன் தன் மகளுடன் பார்ப்பானா? இல்லை இதர்க்கு ஐடியா குடுத்த விளம்பர கம்பனிக்காரன் தான் தன் தங்கையுடன் இதை பார்த்திருப்பானா? இப்படி எதர்க்கெடுத்தாலும் பெண்களை மைய்யப்படுத்தியே விளம்பரங்கள், முறுக்கு கம்பி, வாகன டயர், பெயிண்ட், சமயல் எண்ணெய், வெண்ணை, மசாலா பொடி _________________ அந்த சோப்பிள்ளை என்றாள் குளிக்காதே, பைக் விளம்பரம் என்று போய்ட்டே இருக்கு, இதை விட கொடுமை என்னவென்றால் ஆண்களின் உள்ளாடைக்கும் பெண்கள் தான் வருகிறார்கள்.
இதெல்லாம் பரவாயில்லங்க, ஒரு பல் துளுக்கும் பேஸ்ட் விளம்பரத்தில் இவன் வாய திறந்து ஊதுகிறான் உடனே பஸ்ஸில் எவளோ ஒருத்தி மயங்கி விடுகிறாள் (பாதிப்பேர் பல்லே விளக்குறதில்லை, இவனுங்க எல்லோரையும் ஒரு நாள் சிட்டி பஸ்ஸில் நல்ல பீக் நேரத்துல அனுப்பனும்), அப்புறம் மிட்டாய் விளம்பரத்தில் ஒருவன் காதலியை இன்னொருவன் மயக்க வைத்து தள்ளிக் கொண்டு போகிறான், அப்போது அந்த மிட்டாயிக்கு அந்த மயக்கும் தன்மை இருக்கிறது என்று நினைக்கும்படி இருக்கிறது. ஒரு சட்டை போட்டால் தன்னுடைய நண்பரின் மனைவியும் தன்னுடைய கணவரை ரசிப்பதை விரும்புகிறாள் மனைவி. எந்த மதத்தில்/ சமூகத்தில்/ நாட்டில் இப்படி நடக்கும் என்று தெரியவில்லை. வயிற்று வலிக்கும், சோப்புக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. வயிற்று வலிக்கிறது என்று மருத்துவரிடம் சென்றால் சோப்பை மாற்றுங்கள் என்று சொல்கிறார் (போலி டாக்டர் போல). இந்தியர்களிடம் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் எதை வேண்டுமானாலும் காட்டலாம். யாருக்கும் எதுவும் புரியாது என்று நினைத்துக் கொண்டார்களோ என்னவோ. 

இப்படி பட்ட வக்கிரங்களும், பொய்களும் நிறைந்த விளம்பரங்கள் வருவது பெரும்பாலும் இல்லத்தரசிகள் சீரியல்களில் முழுகும் நேரமும், குழந்தைகள் சுட்டி டீவிகளில் மூழ்கும் நேரங்களிலும்தான், அப்பேற்பட்ட நேரத்தில் இந்த மாதிரி விளம்பரங்களை பார்த்தால் நாளைய சமுதாயம் ரொம்ப முன்னேறும்.

இன்னும் சில விளம்பரங்கள் இருக்கின்றன, சன்டேனா ரெண்டு, கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா, அப்புறம் எங்கள் சோபை / கிரிமை பயன்படுத்தினால் ஆறே நாட்களில் சிகப்பழகு (இதையும் நம்பி வாங்குரோமே நம்மளை உதைக்கணும்)???.

அப்புறம் இப்ப எல்லாம் நம்ம நடிகர்களை சினிமாவை விட விளம்பரங்களில்தான் அதிகம் பார்க்கமுடியுது, அதே போன்று இந்தியா கிரிக்கெட் வீரர்கள், இவர்கள் கிரிக்கெட் கற்றுக்கொள்வதே இந்த விளம்பரங்களில் நடிப்பதர்க்காக மட்டும்தான், யென் இன்னும் சொல்லப்போனால் சச்சின் விலகாமல் இருப்பதற்க்கு காரணமே இந்த விளம்பர ஒப்பந்தம்தான் என்கிறது ஒரு தகவல். 

Nature Power soap – tamanna 
Jeeva soap simran 
Saravana textiles – sneha 
Jeyachandran textiles – anushka 
Kazhana jewelry – kushboo 
Pothys – trisha 
கல்யான் jewelers – பிரபு
எழறிவு கொண்டவர் இருக்கார் அவருக்கு கனக்கே இல்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

முன்னர் ஏதாவது ஒரு நடிகர்/நடிகை விளம்பரத்தில் வந்தால் ஆச்சரியமாக இருக்கும், இன்று மலிந்து கிடக்கும் நவ நாகரிக உலகில் நடிகர்கள் அல்ல, எந்த கொம்பன் வந்து விளம்பரம் செய்தாலும் விஷயம் இருந்தால் மட்டுமே வியாபாரத்தில் ஜெயிக்க முடியும் என்பது மறுக்க முடியாத விதி. 

ஆகவே வியாபரத்தில் நேர்மை என்பது கொடுக்கல், வாங்கலில் மட்டும் இருந்தால் போதாது, நாம் செய்யும் விளம்பரத்திலும் இருக்க வேண்டும். தரமான பொருட்களை, சரியான விலைக்கு விற்பதும், மக்களிடம் பொய் சொல்லாமல் வியாபாரம் செய்வதும் இறை வணக்கமே.

சில விளம்பரங்கள் போட்டிக்காகவே எடுக்கப்படுகின்றன. இதுவெல்லாம் ஆரோக்கியமான வியாபாரத்திற்கு உதவாது என்றும் இந்த விளம்பரத்தில் போட்டி போடுகின்ற இரண்டு நிறுவணங்களின் மீதும் மக்களின் அபிமானம் குறைந்து போய்விடும் என்றும் பணத்தை போட்டு விளம்பரத்தை எடுக்கும் முதலாளிகளுக்கு உரைக்க வேண்டும்.