OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

வெளிநாட்டு வாழ்க்கை வரமா? சாபமா?


வெளிநாட்டு வாழ்க்கை என்பது இந்தியர்களாகிய நமக்கு மட்டும் சொந்தமில்லை, இது ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்க்கு போய் வசித்தல், வேலை செய்தல். ஆனால் இதில் மற்ற நாடுகளில் இருந்து இந்தியர்களாகிய நாம் எவ்வாறு வேறுபடுகிறோம் என்பதில்தான் வித்தியாசம் உள்ளது. பொதுவாக இந்தியாவை எடுத்துக் கொண்டால் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு. அதிலும் அதிகமானோர் படிபறிவில்லாத்வர்கள். இதில் வேலைவாய்ப்புக்கான போட்டிகள் அதிகம்.




நம் தமிழகத்தை எடுத்துக் கொள்வோம். இங்கே பல மதத்தை சார்ந்தவர்களும் இருக்கின்றார்கள். இதில் அதிகமாக முஸ்லீம்கள் தான் வெளிநாடுகளில் வசதியாகவோ, கஷ்டப்பட்டோ வாழ்ந்து வருகிறார்கள். மற்ற மத சகோதரர்கள், தங்களின் சிறு வயதில் இருந்தே சில குறிப்பிட்ட நாட்டிற்க்குதான் போகவேண்டும் என்ற என்னதோடே படித்து அதர்க்காண முயற்சியை மேற்கொள்கின்றனர். அதாவது ஒரு இலக்கை கணித்துவிட்டு அதனை நோக்கி பயணிக்கிறார்கள். ஆனால் இதில் முஸ்லிம் சமுதாய மக்கள் பின் தங்கியே உள்ளனர் என்னதான் அவர்களுக்கு குறிக்கோள்கள் இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகள்களே  அவர்களின் குறிக்கோள்களை நிர்ணயிக்கின்றன. என்னதான் முஸ்லிம் மக்கள் இன்றைய சூலளில் நன்றாக படித்தாலும் நகர் புற மக்கள் வேண்டும் என்றால் தங்கள் வாழ்க்கையை அவர்கள் விரும்பியவாறு அமைத்து கொள்கின்றனர். ஆனால் கிராமத்திலும், பேரூராட்சியிலும் வாழும் மக்களுக்கு அவர்கள் வாழ்க்கை இந்த வெளிநாடுகளையே நம்பி இருக்கின்றது.

நம் தமிழகத்தை சார்ந்த முஸ்லிம் மக்களும் சரி மாற்று மததவரும் சரி அதிகமானோர் வளைகுடா நாடுகளை நம்பியே வாழ்க்கை நடத்துகின்றனர். இதில் நல்ல முறையில் குடும்பத்தோடு வாழ்பவர்கள் மிக குறைவானவர்களே, மேலும் படித்து விட்டு அதற்க்கு ஏற்ற வேளைகளில் இருப்பவர்கள் சற்று அதிகமானதாக இருந்தாலும், வீட்டு வேளைகளிலும், துப்புரவு வேளைகளிலும், கட்டிட வேளைகளிலும் வாழ்க்கை தொலைப்பாவாகள்தான் அதிகமானோர். இவர்களின் இந்த நிலை கண்டிப்பாக அவர்களின் குடும்பத்தின் கஷ்டமே தவிர, அவர்களாக தேடியதில்லை. இது போல அவர்கள் செய்யும் வேலைக்கு ஊதியம் எவ்வளவு தெரியுமா? நம்ம ஊரில் ஒரு போட்டிக்கடை நடத்துபவரை விட குறைவுதான். அதற்க்கு ஏன் அங்கு சென்று கஷ்டபடவேண்டும் என்று நீங்கள் கேட்க்கலாம். அதற்க்கு என்னிடம் இருக்கும் ஒரே பதில் அவரின் குடும்பத்தார்தான், அவர்களின் தேவைக்கு மேல் ஆசை, அடுத்தவர்களை பார்த்து பொறாமை, ஆனால் சில பேர் உண்மையாகவே வறுமையின் பிடியில் சிக்கி இங்கு வருபர்களும் உண்டு அவர்கள்தான் உண்மையாகவே பாவம்.

ஏன் என் நண்பன் ஒருவன் கூட இங்கு லெபராகதான் வேலை செய்தான், அவன் நகைசுவையாக அடிக்கடி என்னிடம் கூறுவான் மாசம் ஆனவுடனே ஊரில் இருந்து msg வருமாம், 10,000 ருபீஸ் pls” அப்படின்னு. இது நகைசுவையாக எனக்கு தோன்றவில்லை இதுதான் உண்மை. மகனின் உடல் நலன்களை பற்றி கேட்பதில்லை, முதல் வாத்தையை இதுதான் இன்னும் பணம் அனுப்புலையா என்று.

மேலும் இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் என்னதான் எங்குபார்த்தாலும் AC, 24 மணிநேரம் மின்சாரம், சுத்தமான உணவுகள், சுற்றிதிரியா மால்கள் என எத்தனை   சுகபோகங்கள் அனுபவித்தாலும், இதை எல்லாம் அனுபவிப்பவர்கள், நன்றாக படித்து அதற்கேற்ற வேலை வாய்ப்புகளில் உள்ளவர்கள் மட்டும்தான், லெபர் வேலை செய்பவர்களின் வாழ்க்கை அப்படி இல்லை, ஜெலில் இருப்பவன் கூட பெயிலில் போக வாய்ப்பளிக்கப்படும் ஆனால் இவர்களின் நிலையோ அந்தோ பரிதாபம். இவர்கள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து வேலை செய்ய செல்லும் வண்டியில் கூட இவர்களுக்கு ஏ‌சி கிடையாது, வாரம் ஒரு நாள் விடுமுறை அதில் கூட பாதிப்பேர், ஓவர்டைம் கிடைக்கும் என்பதால் அதையும் செய்கிறார்கள், இதெல்லாம் யாரால்? ஏன்? இவர்கள் என்ன சுகத்தை அனுபவிக்கிறார்கள். இங்கேயும் அனுபவிக்க முடியாமல், ஊரில் குடும்பத்தோடு இல்லாமல் அந்த சுகத்தையும் அனுபவிக்க முடியாமல், வாலிபத்தையும், வயதையும் வீனடித்துவிட்டு, கடைசி காலத்தில் ஊருக்கு சென்று என்ன பயன் இதற்க்கு சரியான ஒரு எடுத்துக்காட்டு இந்த வரிகள் “சுதந்திரம் மட்டுமில்லாமல் சொற்கமே இருந்தும் என்ன பயன்”.

இவர்களின் நிலையாவது சரி இவர்கள் பாதிக்கவில்லை, குடும்ப சூல்நிலை என பார்த்தால், நன்றாக படித்துவிட்டு வந்து அவர்களின் படிப்பீர்க்கு தகுந்த வேலை கிடைக்காமல் கஷ்டபடுகிறார்களே, அவர்களின் நிலை மிகவும் மோசமானது “மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் என்னவோ தொண்டையில் முள்ளு மாட்டினது போல”. பார்ப்பவர்கள் கண்ணுக்கு நல்லா வசதியாக இருப்பது போன்று தோன்றும் ஆனால் அவர்களின் நிலையும் அதேதான். இவர்கள் எந்த ஒரு மாசத்தையும் கடன் வாங்காமல் கடக்க முடியாது, அதுவும் அவனுக்கு ஒரு தங்கையும் கூட படிக்கின்ற வயதில் ஒரு தம்பியும் இருந்தால் மவனே செத்தாண்டா அவன்!!!!!!!!.

இவர்களுக்கு அருமையான ஒரு கதை இருக்கு இங்கே:- 


அதாவது ஒரு வளைகுடா, அங்குள்ள உயிரியல் பூங்காவிர்க்கு ஒரு புலி கொன்று வரப்படுகிறது, வரும்போது அது நல்ல வாட்டசாட்டமாக இருந்தது, வந்து நாள் செல்ல செல்ல புலி பூனைக்குட்டி போல சுருங்கி கொடே வந்தது, இதை கண்காணித்து வந்த பூங்கா மேலாளர், ஒரு நாள் அதற்க்கு உங்கவளிப்பவனை கூப்பிட்டு புலிக்கு நீ என்ன சாப்பாடு போடுகிறாய் என்று கேட்டுள்ளார், அடக்கு அவன் வாழைபழமும், மல்லாட்டையும் குடுக்கிறேன் என்று கூறினான், அதற்க்கு பயங்கர கடுப்பாகி அந்த மேலாளர், உனக்கு என்ன அறிவில்லையா புலிக்கே எவனாவது இதை எல்லாம் குடுப்பானா என்றார், உடன் அவன் அய்யா அது புலிதான் எனக்கு தேர்யும் ஆனால் அது வந்த விசா குரங்கு விசா என்றானாம்.

இதுதாங்க உண்மையான வெளிநாட்டு நிலை. கண்டிப்பாக அவனுக்கு தகுந்த வேலை கிடைக்காமல் போனதற்க்கு காரணம் அவனது முயற்ச்சி இல்லாமை ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவனின் குடும்பத்தவர்களும் காரணமாகி விடுகின்றனர், எப்படி என்றால் பையனுக்கு பல்லு முளைக்கும் முன்னரே இவர்கள் விதைப்பது வெளிநாட்டு மோகம், அவன் வளர வளர அதுவும் தானாக வளர்ந்து விடுகிறது, அவன் முடித்தவுடனே  மூட்டை கட்டி அனுப்பினால் இப்படிதான், அவனை கொஞ்சம் கூட வேலை பற்றின அனுபவமில்லாமல் வந்தால் எப்படி வேலை கிடைக்கும், ஒரு சில பேர் வேண்டும் என்றால் படிக்கும் போதே திறமையானவர்களாக இருப்பார்கள் எல்லோரையும் அந்த மாதிரி நினைப்பதால் வருகின்ற விளைவுதான் இந்த புலி கதை.

சரி முடித்துவிட்டு ஊருக்கு போயிடலாம் என்றால், நமக்கு முன் நிற்க்கும் முதல் கேள்வி ஊரில் போய் வருமானதிர்க்கு என்ன செய்வது. இதில் நிறைய பேர் தொழில் ஆரம்பித்து சில காலங்களிலேயே மூடிவிட்டு மறுபடியும் “பழைய குருதி காதவ திரடின்கிற கதைதான்”. முன்னர் குரங்கு விசா, இப்ப கழுதை விசா வேறொன்றும் வித்தியாசமில்லை,

மேலும் இங்கு நாம் அனுபவிக்கும் சோகங்கள் கொஞ்சமில்லை நிறையவே இருக்கு. நமது குடும்பம், நாம் வளர்ந்த ஊர், சுற்றின ஆற்றங்கரை, விளையாடின மைதானங்கள், டீ கடாய் பாய், இது போன்ற ஏராளமான நினைவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு இங்கு கிடைக்கும் பணத்திற்க்காக பிணமாக திரிகிறோம்.

ஆனால் என்னை பொறுத்தவரை அல்ஹம்துலில்லாஹ் எனக்கு அந்த அளவிர்க்கு பாதிப்பு தெரியவில்லை, ஏன் என்றால் எனது குடும்பத்தையே சார்ந்தவர்கள் அதிகமானோர் இங்கு இருப்பதால், அது குறையாக எனக்கு தோன்றவில்லை. ஆனால் என்னை போன்று அனைவருக்கும் அமையாது.

கடைசியாக என்னதான் இத்தனை சோகங்களை அனுபவித்தாலும், ஊரில் ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்க்கு இது எவ்வளவோ மேல்.

இன்னொரு முக்கியமான விஷயம், சில பேர் சொல்லுவாங்க, பெருசா நினைங்க அப்பதான் சின்னதாக ஏதாவது கிடைக்கும் என்று. அது முற்றிலும் தவறான கருத்து,

என்றைக்கும் நம்ம நிலைக்கு மேலே உள்ளவங்களை பார்த்து நாமும் ஆசைபடுவதை விட நமக்கு கீலே உள்ளவர்களை பார்த்து நாம் எவ்வளவோ தேவலாம் என்று நினைத்தால் தாழ்வு மனப்பான்மை என்பதே இருக்காது. இன்று பல பேர் அழிவிர்க்கு காரணமே இந்த தாழ்வு மணபாண்மைதான்.  

கடைசியாக வெளிநாட்டு வாழ்க்கை வரம்தான் வசதியாக வாழ்பவர்களுக்கு, சாபம்தான் வசதியாக வாழநினைபவர்களுக்கு. இரண்டிர்க்கும் வித்தியாசம் புரிந்தால் இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் சோகமே இல்லை என்பதுதான் எனது கருத்து. 

கருத்துகள் இல்லை: