இன்று காலை கூகிள் வலைதளத்தை திறந்தேன், அதில் ஒரு அரபியர் வானத்தை நோக்கியாவரு
போஸ் குடுத்து கொண்டு இருந்தார், வானத்தில் முழு நிலா வேற, நான் கூட என்னடா இது ஒரு வேலை
நாம பிறைகளை பற்றி விளக்கி கொண்டு இருக்கிறோமே, இதுவும் அதை பற்றி
ஏதாவது ஒரு விளக்கமாக இருக்குமா என்று பார்த்தால், அதில் இருப்பவர்
ஒரு இஸ்லாமிய பண்டிதர்,
அவர் பெயர் அபு ரெய்ஹன் அல்-பிருணி, இவர் 973-ஆம் ஆண்டு செப்டெம்பர்
மாதம் 5 ஆம் தேதி காத் என்னும் ஊரில் பிறந்தார், இந்த ஊர் உஸ்பெகிஸ்தானில்
உள்ளது. இவர் ஒரு சிறந்த இஸ்லாமிய பண்டிதர் மட்டுமில்லை, மேலும்
வின்னியல், கணிதவியல், வரலாற்றுத்துறை போன்றவற்றில்
மிக சிறந்தவர். இவர் சோரஸ்மீயன், பெர்ஷியன், அரபிக், சான்ஸ்கிரிட் மற்றும் கிரீக், ஹெப்ரூ மற்றும் சிரியாக்.
இவர் வாழ்க்கையின் அதிகமான காலங்களை இன்றைய ஆப்கானிஸ்தானில்
உள்ள காஃஜ்ணி என்னும் ஊரிலே கழித்தார். 1017-ஆம் ஆண்டு இவர் இந்தியாவிர்க்கு வந்தார், இவர் இந்தியாவிர்க்கு வந்து
inodlogy என்னும் ஒன்றை உருவாக்கினார் (அதாவது இந்தியா கலாச்சாரங்கள், மொழிகள், வரலாறுகள்).இவர் பூமி பற்றின அறிவியலிலின் தந்தை எனவும் கூறபடுகிறார்.
இறுதியில் இவர் 1048-ஆம் ஆண்டு டிசெம்பர் 13-ஆம் தேதி இயற்க்கை எய்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக