OnlinePJ

Thanks for Visiting my Page

சனி, 8 செப்டம்பர், 2012

எந்த மனிதனும் 100% சதவிகிதம் நல்லவனா இருக்க முடியாது? இது எந்த அளவிற்க்கு உண்மை!!!!!!!!



உலகில் எவன் எந்த தப்பு செய்தாலும், அவனிர்க்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள், இன்னும் சிலர் அவன் செய்த தப்பிற்க்கு காரணங்களை கூறி சமாளிப்பார்கள், அப்படி சமாளிப்பவர்கள் எல்லாம், இங்கே மேலே தலைப்பில் உள்ளதைதான் சொல்லுவார்கள் எவனும் 100% ஒழுங்கு கிடையாது”  



சரி இதை பற்றி நம்மை படைத்த அல்லாஹ்தாலா தன் திருமறையில் என்ன கூறுகின்றான் என்றும், நபிகள் நாயகம் என்ன கூறியுள்ளார்கள் என்பதை பற்றியும் பார்ப்போம்!

இதுல முதலில் நாம் விளங்கி கொள்ளவேண்டியது, மனிதன் என்பவன் பாவம் செய்யக் கூடியவனாகத்தான் படைக்கப் பட்டிருக்கிறான். ஒரு பாவமும் செய்யாத ஒருத்தரை இந்த உலகில் காட்டவே முடியாது, ஆனால் பாவத்தில் அளவு வித்தியாசங்கள் இருக்கலாம், குறைந்தது ஒரு பொய்யாவது சொல்லியிருப்பான், இல்லை ஏதாவது புறம் பேசி இருப்பான், 100/100 யாருமே நல்லவன் கிடையாது.

அப்படி 100/100 நல்லவர்கள் யாரென்றால் அது மலக்குமார்கள்தான், அவர்கள் தான் அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே நிறைவேற்றுபவர்கள். இப்படி அல்லாஹ்வின் மீது இபாதத்தில் எந்த குறையும் வைக்காதவர்கள் இருக்கும் போது ஏன்  மனிதர்களை படைக்கிறான்? இதுதான் அப்போ அந்த மலக்குமார்களுக்கும் ஆச்சர்யமாக இருந்தது!!!!!! அவர்கள் அல்லாஹ்விடம் கேட்கிறார்கள் “உன்னை வனங்கவும், துதிபாடவும், நாங்கள் இருக்கும் போது, ஏன் இப்படி ஒரு இனத்தை படைக்கபோகிறாய்?” என்று ஒரு கேள்வி கேட்க்கும் அளவிர்க்கு மனிதபடைப்பின் விஷயம் ஆரபிக்கிறது, ஆனாலும் அல்லாஹ் நம்மளை படைக்கிறான்.

படைச்சு ஆரம்பமே என்ன, நம் ஆதி தந்தை ஆதம் (ஸல்) எவ்வாறு வெளியேற்றப்பட்டார்கள்? தவறு செய்த ஒரே காரணத்தால், அல்லாஹ்வின் ஒரே ஒரு கட்டளையை மீறியதால்! இங்கே எதை வேண்டுமென்றாலும் சாப்பிடு இந்த மரத்தை மட்டும் நெருங்காதே என்பதுதான் அந்த கட்டளை, ஆனால் அதை மீறிவிட்டார், இதுதான் இன்று வரை கடத்தபடுகின்றது என்பதுதான் உண்மை. எனவே தான் “ஆதமுடைய மக்கள் எல்லாம் தவறு செய்ய கூடியவர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆக மனிதன் என்பவன் பாவம் செய்யிறதுக்குதான் இந்த பூயில் படைக்கப் பட்டுள்ளான்.

மேலும் நபி (ஸல்) அல்லாஹ் கூறுவதாக கூறுகின்றார்கள் “மனிதர்களில் பாவமே யாரும் செய்யவில்லை எனில் அவர்களை அழித்துவிட்டு, வேற ஒரு கூட்டத்தை படைப்பேன், அவர்கள் பாவமும் செய்வார்கள், மன்னிப்பும் தேடுவார்கள்”. இது முஸ்லிமில் பதிவாகி உள்ள ஹதீஸ்.

இறைவன் நம்மை படைக்கும் போதே ஆசை என்பதையும் சேர்த்துதான் படைதுள்ளான், அது அதனுடைய வேலையை செய்து பாவத்தை செய்துவிட்டால், கூட அறிவையும் குடுத்துள்ளான் அதனுடைய வேலையை செய்து பாவ மன்னிப்பும் தேடிக் கொள்ள வேண்டும். பாவம் நம்மை அறியாமலே நடந்துவிடும், இல்லை சில சூழ்நிலைகள் அவ்வாறு நம்மை பாவம் செய்ய வைத்துவிடும், அதன் பிறகு நீங்கள் என்ன செய்யவேண்டும், இறைவா இந்த மாதிரியான பாவத்தை நான் செய்துவிட்டேன் என்ன மன்னித்து நேர்வழி படுத்துவாயாக என்று இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இப்படியான ஒரு படைப்புதான் மனித படைப்பு.

மேலும் புகாரியில் வரக்கூடிய ஒரு ஹதீஸ்:- (7507)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
ஒரு அடியார் ஒருபாவம் செய்துவிட்டார். பிறகு இறைவா நான் ஒரு செய்துவிட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக என்று பிராத்திக்கிறார், உடனே அவ்ரின் இறைவன் “என் அடியான் எனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான் (அல்லது) தண்டிப்பான்  என்றும் அறிந்துலானா? நான் என் அடியாணை மன்னித்துவிட்டேன் என்று சொல்வான். பிறகு மீண்டும் அந்த அடியார் (சிறிது காலம்) அல்லாஹ் நாடிய வரை அப்படியே இருப்பார். பிறகு மீண்டும் ஒரு பாவத்தை செய்தார். அப்போது அந்த மனிதர் (மீண்டும்) என் இறைவா நான் மற்றொரு பாவம் செய்துவிட்டேன். எனவே என்னை மன்னித்து விடுவாயாக என்று பிராத்திதார் உடனே இறைவன் (இம்முறையும்) என் அடியான் எனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான் (அல்லது) தண்டிப்பான் என்றும் அறிந்துலானா? நான் என் அடியாணை மன்னித்துவிட்டேன் என்று சொல்வான். பிறகு அல்லாஹ் நாடிய வரை அந்த மனிதர் அப்படியே (சிறிது காலம்) இருந்தார். பிறகும் (மற்றொரு) பாவம் செய்தார். (இப்போதும்) என் இறைவா நான் மற்றொரு பாவம் செய்துவிட்டேன். எனவே என்னை மன்னித்து விடுவாயாக என்று பிராத்திதார் உடனே இறைவன் என் அடியான் எனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான் (அல்லது) தண்டிப்பான்  என்றும் அறிந்துலானா? (அப்படியானால்) நான் என் அடியாணை மூன்று முறையும் மன்னித்துவிட்டேன். இனி அவன் நாடியதை செய்துக் கொள்ளட்டும் என்று சொன்னான்.
இந்த ஹதீஸில் இருந்து தெளிவாக விளங்கலாம், மனிதன் என்பவன் பாவம் செய்யக் கூடியவன் என்றும், அந்த பாவத்திர்க்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றாள் இறைவன் தண்டிப்பான் என்றும் விலங்குகிறது. மேலும் இறைவன் மன்னிக்க கூடியவன் என்றும் தெரிகிறது. எனவே ஒரு பாவம் செய்துவிட்டால் இறைவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் எப்படி கேட்கவேண்டும், ஆதம் (ஸல்) எவ்வாறு கேட்டார்களோ “என் இறைவா எங்களுக்கு நாங்களே தீன்கிழைத்து விட்டோம், எங்களை நீ மன்னிக்காவிட்டால் நாங்களே நஷ்டவாளிகளாவோம்” இந்த மாதிரி இறைவனிடத்தில் சரணடைய வேண்டும்.

ஆகையால் எவ்வளவு பெரிய பாவம் செய்தவராக இருந்தாலும், அதை மனதிலே போட்டு உருட்டி கொள்ளாமல் இறைவனிடத்தில் மன்னிப்பு கேட்டு சரணடைய வேண்டும். அதுமட்டுமில்லாம்ல் அந்த பாவத்தில் இருந்து விடுபட்டுவிடவேண்டும் மீண்டும் அதை தொடரக் கூடாது. நம்ம பாவங்களை எந்த அளவிர்க்கு இறைவன் மன்னிப்பான் என்று சொன்னால், புகாரியில் 7514 வது ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் கூறுவ்தாக 

சஃப்வான் இப்னு முக்ரீஸ் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்:-
“மறுமையில் உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் உரையாடுவான், அப்போது உங்களில் ஒருவர் தம் இறைவனை நெருங்குவார், இறைவன் தன்னுடைய திரையை அவரின் மீது போட்டு (அவரை மறைத்து) விடுவான். பின்னர் (அவரிடம்) இரவன் நீ (உலகத்தில்) இன்னின்ன (பாவச்) செயல்களை செய்தாயா? என்று கேட்பான். அவர் ஆம் என்பார். இறைவன் (மறுபடியும்) இன்னின்ன (பாவச்) செயல்களை செய்தாயா? என்று கேட்பான் அப்போதும் அவர் ஆம் என்று கூறி தம் குற்றங்களை ஒப்புக் கொள்வார்.
பிறகு நான் (உன் குற்றங்களை) உலகில் மற்றவருக்குத் தெரியாமல் மறைத்தேன் இன்று நான் இவற்றையெல்லாம் உனக்காக மன்னித்துவிடுகிறேன் என்று சொல்வான்.

ஆக செய்த பாவத்திற்க்கு மன்னிப்பு மட்டும் கேட்போம் என்று சொன்னால், இறைவன் அதை மறைப்பது மட்டுமில்லாமல் மறுமையில் நம்மை மன்னிக்கவும் செய்கிறான் என்பது தெளிவாகிறது, இதையும் கருத்தில் கொள்ளவேண்டும். மேலும் மன்னிப்பதை பற்றி இறைவன் தான் திருமறையில் பல இடங்களில் விளக்கியுள்ளான்:-

4:17 “அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கோஎபொருக்கே அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாக உள்ளான்.

4:18 “தீமைகளை செய்துவிட்டு மரணம் நெருங்கும் வேளையில் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறுவோருக்கு (ஏக இறைவனை) மறுப்போராகவே மரணித்தவருக்கும் மன்னிப்பு இல்லை, அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையை தயாரித்துள்ளோம்.

4:26 உங்களுக்கு தெளிவுபடுத்திடவும், உங்களுக்கு முன் சென்றோரின் வழிமுறைகளை உங்களுக்கு காட்டிடவும் உங்களை மன்னிக்கவும் அல்லாஹ் விரும்புகிறான். அல்லாஹ் அறிந்தவன்.

4:28 அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) எளிதாக்கவே விரும்புகிறான், ஏனெனில் மனிதன் பலவீனநாகப் படைக்கபட்டுள்ளான்.

4:48 தனக்கு இணைக்கட்பிப்பதை தவிர, ஏனைய பாவங்களை தான் நாடியவருக்கு மன்னிப்பான், இணை கற்பித்தவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறார்.

4:99 அல்லாஹ் அவர்கல்து பிழைகளை பொறுப்பான், அல்லாஹ் பிழைகளை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

4:133 மனிதர்களே அவன் நாடினால் உங்களை அழித்துவிட்டு வேறொரு சமுதாயத்தை கொண்டு வருவான். அல்லாஹ் இதற்க்கு ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
இது போன்ற இன்னும் ஏராலாமான் வசங்களில் அல்லாஹ் தான் அடியாரை மன்னிப்பதை பற்றி கூறியுள்ளான் இன்னும் சொல்லப்போனால் 5:74-ல் அல்லாஹ் தான் அடியாரை நோக்கி, அவர்கள் என்னை (அல்லாஹ்) நோக்கி பாவ மன்னிப்பு தேடவேண்டாமா? அல்லாஹ் மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையவன்” என்று தான் அடியார்களை மன்னிப்பு கேட்க அழைக்கிறான்.

அதனால ஒரு பாவம் செய்து விட்டால் உடனே அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பு தேடுங்கள், பிறகு அதை விட்டு விலகி இருங்கள், மீண்டும் உங்களை மீறி அல்லது சூழ்நிலை காரணமாக அந்த பாவத்தை செய்துவிட்டால் மறுபடியும் மன்னிப்பு தேடுங்கள், இறைவன் மன்னிக்க கூடியவனாக இருக்கிறான்.

இதில் முக்கியமானது என்னவென்றால், மீண்டும் மீண்டும் பாவம் செய்யலாம் என்று அர்த்தமில்லை, தன்னை அறியாமல் செய்த பாவத்திர்க்கு மன்னிப்புண்டு  என்பதே அர்த்தம். மேலும் யாரேணும் பாவம் செய்துவிட்டால் அவர்களுக்கு இவ்வாறு மன்னிப்பு கேட்க வழியுறுத்துங்கள், அவ்வாரில்லாமல் சும்மா 5 வேலை மட்டும் தொழுதுவிட்டு, அடுத்தவனை பற்றி புறம் பேசிக் கொண்டு, நீங்க மட்டும் என்ன ஒழுங்கா என்று கூறிக் அவர்களை மீண்டும் தவறிழைக்க செய்யாதீர்கள், அடுத்தவர்க்கு மட்டும். உபதேசம் “கருத்தை சொல்வது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றவேண்டும், முள்ளில் இருந்து சேலைய உருவுகின்ற மாதிரி செய்யக் கூடாது” ஆனால் அந்த மாதிரி நாமலே செய்வதில்லை என்னும் போது.

இங்கே எந்த மனிதனும் 100% நல்லவன் இல்லை என்பதே விளங்குகிறது.

கருத்துகள் இல்லை: