20
ஓவர் உலககோப்பை கிரிக்கெட்
நேற்று நடந்த வாழ்வா? சாவா? போட்டியில் இந்தியா
அணி தனது வாழ்வை இழந்து, தனது அண்டை (சண்டை) நாடான பாகிஸ்தானை
அறை இறுதிபோட்டிக்கு அனுப்பியுள்ளது.
இந்த போட்டியில் இந்தியா அணி தென் ஆப்பிரிக்கவை 121 ரன்களுக்குள் காட்டுபடுத்த
தவறியதால் இந்தியா அணி அறை இறுதி வாய்ப்பை கைவிட்டது.
இந்த முறை தோனியின், பாச்சா பலிக்கவில்லை ஏன்? வீரர்களை நம்பாமல் ஜோசியத்தை நம்பி, உலககோப்பையை வென்ற
அனிதான் வெற்றிபெறும் என்ற தலைகனத்தில் போனால் இப்படிதான் நடக்கும், இந்த உலககோப்பை ஆரம்பிக்கும்போது கபில் தேவ் சொன்னது இதுதான், ராசி பார்த்து தனது அணியின் உடையை மாற்றாமல் விளையாடின நம்ம தோனியின் அறிவை
என்னவென்று சொல்வது. இதில் பாதிப்பேர் கடந்த 50 ஓவர் உலகக்கோப்பைக்கு பின் விளையாடி
பார்க்கவே இல்லை, அப்படி இருக்கும் போது எப்படி ராசி செல்லுபடியாகும்
இது என்ன மாங்காத்த விளையாட்டா?.
எப்போதும் கூல் கூல் என்று எல்லோரோலும் வருணிக்க கூடிய நம்ம தலை தொனியுடைய கூல்
முகத்தை நீங்க பார்க்கணும் (கீளே):-
இது தேவையா?
இந்த உலககோப்பை ஆரம்பம் முதல் பார்த்தாலே தெரிந்துவிடும் நம்ம BCC அணியின் லட்சணம். ஏதோ கடமைக்கு விளையாடுறாங்க, இதே ipl
ஆக மட்டும் இருக்கட்டும் சும்மா சுத்தி சுத்தி அடிப்பாங்க!!!!!!!!!!!!!!!!!
இதை எல்லாம் எழுதுறதுக்கே அசிங்கமா இருக்கு. என்ன பண்ணித்தொலைய!!!! நாமளும் பிளாக்
வைத்துள்ளோமே.
இன்று அறை இறுதியில் நுழைந்த நான்கு அணிகளும் இது வரை மிக சிறந்த ஒரு ஆட்டத்தை
வெளிபடுத்தினார்கள், நம்ம ஆளுங்க கொஞ்சம் கூட கஷ்டடபடாம ராசி பார்த்து
வந்தார்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!
என்றைக்குமே உழைப்புதான் கைகொடுக்கும், இதை யார் தோனிக்கு புரியவைப்பது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக